For Quick Alerts
For Daily Alerts
415 பேரை பணி நீக்கம் செய்கிறது பிபிசி நிறுவனம்!
லண்டன்: பிபிசி தொலைக்காட்சி நிறுவனம் பத்திரிகையாளர்கள் உட்பட 415 பேரை பணி நீக்கம் செய்வதாக அறிவித்துள்ளது.
பிபிசியின் தலைமையகம் லண்டனில் உள்ளது. இந்நிறுவனத்தில் உலகம் முழுவதும் மொத்தம் 8,400 பேர் பணியாற்றுகின்றனர். இவர்களில் 5 ஆயிரம் பேர் பத்திரிகையாளர்கள்.
கடந்த சில ஆண்டுகளாகவே பணி குறைப்பு நடவடிக்கையை பிபிசி நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. அத்துடன் ஊதியக் குறைப்பையும் பிபிசி நிறுவனம் செய்து வருகிறது.

இந்த ஊதிய குறைப்பை எதிர்த்து பிபிசி நிறுவன ஊழியர்கள் 12 மணி நேர வேலை நிறுத்தப் போராட்டத்தை வரும் 23-ந் தேதி நடத்தப் போவதாக அறிவித்திருந்தனர்.
இந்த நிலையில் பிபிசியின் செய்தி இயக்குநர் ஜேம்ஸ் ஹார்டிங், செலவினக் குறைப்புக்காக 415 பேரை பணி நீக்கம் செய்வதாக அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு பிபிசி பணியாளர்களை மேலும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.