வெள்ளிக்கிழமை ராமசாமின்னா அது ராதாரவி.. சனிக்கிழமையாச்சுன்னா.. "டாக்டர் நேபாள பிரதமர்"!
திம்பு: பூடான் பிரதமரான லோட்டே ஷெரிங் சனிக்கிழமைகளில் மருத்துவமனைக்கு சென்று மருத்துவ பணியை மேற்கொண்டு வருகிறார்.
பூட்டானில் கடந்த 2018ம் ஆண்டு நடந்த தேர்தலில் லோட்டே ஷெரிங் அந்நாட்டு பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார். மருத்துவரான இவர், நாட்டின் பிரதமரான பிறகும் தொடர்ந்து மருத்துவ தொழிலில் ஈடுபட்டு வருகிறார்.
50 வயதான லோட்டே ஷெரிங் மருத்துவத்துறையில் சிறுநீரக செயலிழப்பு அறுவை சிகிச்சை தொடர்பான படிப்பை முடித்துள்ளார். இவர் அந்நாட்டின் ஜிக்மி டோர்ஜி வாங்ஜூக் தேசிய மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி வருகிறார்.

சனிக்கிழமையில் டாக்டர்
வாரம் முழுவதும் பிரதமராக நாட்டு மக்களுக்கு சேவை செய்யும் லோட்டே சனிக்கிழமைகளில் மருத்துவராக நோயாளிகளுக்கு மருத்துவம் பார்த்து மக்களுக்கு சேவை செய்து வருகிறார். நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதோடு இவர் அறுவை சிகிச்சைகளையும் செய்து வருகிறார்.

வார இறுதி நாட்கள்
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள லோட்டே, சிலர் தங்கள் மன அழுத்தத்தை குறைக்க கோல்ப் விளையாடுகிறார்கள், சிலர் வில்வித்தை பயிற்சியில் ஈடுபடுகிறார்கள், அதே போல நான் என வார இறுதியை கழிக்கிறேன். என்று கூறினார்.

கடைசிகாலம் வரை
எனது மன அழுத்தத்தை குறைக்கவே நான் இந்த மருத்துவ தொழிலை செய்து வருகிறேன். இதனை எனது கடைசி காலம் வரை தொடர்ந்து செய்ய உள்ளேன். இவ்வாறு பிரதமர் லோட்டே கூறியுள்ளார்.

கடந்த ஆண்டு முதல் பிரதமர்
ஏழரை லட்சம் மக்கள் வாழும் பூட்டானில் கடந்த 2008ஆம் ஆண்டு மன்னராட்சி முடிவுக்கு வந்தது. இதையடுத்து கடந்த 2018ஆம் ஆண்டு மூன்றாவது முறையாக நடைபெற்ற ஜனநாயக தேர்தலில் லோட்டே நாட்டின் பிரதமரானார்.

சாதாரணமாக தொடருகின்றனர்
பிரதமர் லோட்டே மருத்துவமனையில் பணி செய்யும் நாட்களில் யாரும் அவரை பிரதமராக பார்ப்பதில்லை. மாறாக மருத்துவர் உடையணிந்தது அனைவரும் தங்களின் வேலைகளில் பிஸியாக உள்ளனர். செவிலியர்கள் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் தங்கள் வேலையை சாதாரணமாக தொடர்கின்றனர்.

மருத்துவ தொழில்
நம்ம ஊர் அரசியல்வாதிகள் வார்டு கவுன்சிலர்களாகி விட்டாலே செய்யும் தொழிலை விட்டுவிட்டு சுமோ காரில் வலம் வர தொடங்கி விடுகிறார்கள். ஆனால் நாட்டின் பிரதமரான பிறகும் கூட தனது மருத்துவ தொழிலை தொடரும் பூட்டான் பிரதமர் மக்கள் மனதில் இடம்பிடித்துவிட்டார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications