For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஒரே தாய்க்கு பிறந்த இரட்டைக் குழந்தை.. 2 குழந்தைகளுக்கும் வேறு வேறு தந்தை.. களியாட்டத்தால் வந்த வினை

Google Oneindia Tamil News

மினிரியோஸ்: பிரேசிலில் ஒரே தாய்க்கு பிறந்த இரட்டைக் குழந்தைகளுக்கு வேறு வேறு தந்தைகள் இருப்பது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

ஒரு ஆணின் விந்தணுவில் இருக்கும் ஒரே ஒரு உயிரணுதான் பெண்ணின் கருமுட்டையில் இணைந்து குழந்தையாக மாறுகிறது. விந்தணுவில் எத்தனை கோடி உயிரணுக்கள் இருந்தாலும், அவற்றில் ஒன்றுதான் கருமுட்டையுடன் இணைய முடியும்.

அதே சமயத்தில், சில நேரங்களில் பெண்ணிடம் இரண்டு கருமுட்டைகள் உருவாகி இருந்தால் அவற்றுடன் ஒரு உயிரணு சேர்ந்து இரட்டை குழந்தைகள் உருவாகின்றன.

எல்லாமே பொய்! பிரேசிலில் டெலிகிராமுக்கு விதிக்கப்பட்ட தடை 2 நாட்களில் வாபஸ் பெறப்பட்டது ஏன்? எல்லாமே பொய்! பிரேசிலில் டெலிகிராமுக்கு விதிக்கப்பட்ட தடை 2 நாட்களில் வாபஸ் பெறப்பட்டது ஏன்?

கரு முட்டை

கரு முட்டை

எத்தனை கரு முட்டை இருந்தாலும் அவற்றில் ஒரே ஒரு உயிரணு மட்டுமே இணைய முடியும். இதுதான் அறிவியல். ஆனால், பிரேசலில் அதிசயத்தக்க வகையில் ஒரு கருவில் உருவாகிய இரட்டை குழந்தைகளுக்கு இருவேறு தந்தைகள் இருப்பது தெரியவந்துள்ளது. இது மருத்துவ உலகையே ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. பிரேசிலின் கோயாஸ் மாகாணத்தில் உள்ள மினிரியாஸ் நகரைச் சேர்ந்த 19 வயது இளம்பெண்தான் இப்படி கருவுற்று இருக்கிறார்.

அதிசயம்

அதிசயம்

அவர் கடந்த ஆண்டு ஒரே நாளில் இரு வேறு ஆண்களுடன் உடலுறவு வைத்திருக்கிறார். இதில் கர்ப்பம் அடைந்த அப்பெண்ணுக்கு 10 மாதங்கள் கழித்து இரட்டை குழந்தைகள் பிறந்திருக்கின்றன. இந்த குழந்தைகளின் தந்தை யாராக இருக்கும் என அறிவதற்காக, தான் உறவு கொண்ட ஒருவரை அழைத்து வந்து டிஎன்ஏ சோதனை மேற்கொண்டார். டிஎன்ஏ சோதனையும் நடந்தது. இரண்டு ஆண்களும் முடிவிற்காக காத்தும் இருந்தனர்.

ரிசல்ட்

ரிசல்ட்

இதில் வந்த தகவல்தான் மருத்துவர்களையே தலை சுற்ற வைத்துவிட்டது. ஏனெனில், ஒரு குழந்தைக்கு மட்டுமே பாசிட்டிவ் என ரிசல்ட் வந்துள்ளது. மற்றொரு குழந்தைக்கு நெகட்டிவ் என வந்திருக்கிறது. அதன் பிறகு, தான் உடலுறவு வைத்துக் கொண்ட மற்றொரு நபரை தேடிக் கொண்டு வந்து டிஎன்ஏ சோதனை செய்ததில் இன்னொரு குழந்தைக்கு பாசிட்டிவ் என முடிவு வந்தது. அதாவது, அந்த இரட்டை குழந்தைகளுக்கு தந்தை வேறு வேறு என்பதே டிஎன்ஏ சோதனையின் முடிவு.

டிஎன்ஏ சோதனை

டிஎன்ஏ சோதனை

இந்த விஷயம் குறித்து மருத்துவர் துலியோ ஜார்ஜ் என்பவர் கூறும் போது, "இதுபோல இரட்டை குழந்தைகளுக்கு வேறு வேறு தந்தைகள் இருப்பது அரிதிலும் அரிதானது என்றாலும், சாத்தியமற்றது கிடையாது. மருத்துவ ரீதியாக இது Heteroparental Superfecundation (ஹெட்ரேபேரன்ட்டல் சூப்பர்ஃபிக்கன்டேஷன்) என அழைக்கப்படுகிறது. ஒரே தாயிடமிருந்து இரண்டு கருமுட்டைகள் வெவ்வேறு ஆண்களின் உயிரணுக்களுடன் இணையும் போது இந்த அரிய நிகழ்வு நடக்கிறது" என்றார்.

குழப்பம்

குழப்பம்

மேலும், கணிதத்தின் அடிப்படையில் 10 லட்சத்தில் ஒன்று என்ற வாயப்பிலேயே (probability) இந்த நிகழ்வு நடக்கும் எனக் கூறிய மருத்துவர், இதுவரை உலகிலேயே இதுபோல 20 சம்பவங்கள்தான் நடந்திருக்கின்றன எனவும் தெரிவித்தார். இந்நிலையில், இந்த இரட்டை குழந்தைகளை ஒரே தந்தை தான் பரமாரித்து வருவதாக கூறப்படுகிறது. இதுகுறித்து குழந்தைகளின் தாய் கூறும்போது, "குழந்தைகளுக்கு வேறு வேறு தந்தை எனத் தெரிந்ததும் முதலில் அதிர்ச்சியாக இருந்தது. எனினும், இரண்டு குழந்தைகளையும் எந்த பாகுபாடும் இல்லாமல் ஒரு தந்தையை பராமரித்துக் கொள்கிறார்" எனக் கூறினார்.

English summary
Brazilian woman gives birth to twins which have two different fathers as doctors say it is a medical miracle.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X