For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தேனிலவிலேயே மனைவியை கொலை செய்த கணவன் நாடு கடத்தல்

Google Oneindia Tamil News

ஜோகன்னஸ்பர்க்: தேனிலவின் போது மனைவியை கொலை செய்த பிரிட்டன்வாழ் இந்தியர் தென்னாப்ரிக்காவுக்கு நாடு கடத்தப்பட்டுள்ளார்.

புதுமண தம்பதிக்கு இடையே நல்லுறவு ஏற்படுவதற்காக இருவரும் தனியாக பிற இடங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவது "தேனிலவு" என அழைக்கப்படுகிறது.

ஆனால், அப்படி இனிமையாக அமைய வேண்டிய தேன்நிலவே கடைசி நாளாக மாறிப்போயுள்ளது புது மணப்பெண் ஒருவருக்கு.

தித்தித்த திருமணம்:

பிரிட்டனில் வசித்த இந்திய வம்சாவளி வர்த்தகர் ஷிரியன் திவானி . சுவீடனில் வசித்த இந்திய பெண் ஆனி 28 என்பவரை 2010 இல் திருமணம் செய்தார்.

தேனிலவில் கொலை:

திருமணத்திற்கு பின் தென்னாப்ரிக்காவுக்கு இந்த தம்பதி தேனிலவுக்கு சென்ற போது திவானி ஏற்பாடு செய்த கூலிப்படை மூலம் ஆனி சுட்டு கொல்லப்பட்டார்.

ஆஜராகாமல் எஸ்கேப்:

விசாரணைக்குப் பின் மனைவி ஆனியை கொன்றதாக திவானி மீது கோர்ட்டில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. இருப்பினும் தன் உடல் நிலையை காரணமாக காட்டி தென் ஆப்ரிக்கா கோர்ட்டில் திவானி ஆஜராகாமல் தவிர்த்து வந்தார்.

நாடு கடத்தி உத்தரவு:

இதற்காக லண்டன் கோர்ட்டில் தடை உத்தரவு பெற்றிருந்தார். இந்நிலையில் திவானியை தென்னாப்ரிக்காவுக்கு நாடு கடத்த லண்டன் நீதிமன்றம் அனுமதி அளித்தது.

போலீஸ் விசாரணை:

இதையடுத்து திவானி நேற்று தென்னாப்ரிக்காவுக்கு நாடு கடத்தப்பட்டார். கேப்டவுன் கோர்ட்டில் நேற்று அவர் ஆஜர்படுத்தப்பட்டார். மனைவி ஆனி கொலை தொடர்பாக திவானியிடம் போலீசார் விசாரணை நடத்த உள்ளனர்.

English summary
A newly married husband killed his wife when the time of honey moon in Brittan. Police arrested him and the court deportation him.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X