இந்தியாவில் இருக்கும் சகோதரியை தேடி அலையும் அமீரக சகோதரர்கள்
துபாய்: ஐக்கிய அரபு அமீரகத்தைச் சேர்ந்த சகோதரர்கள் 2 பேர் இந்தியாவில் கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு மாற்றாந்தாய்க்கு பிறந்த சகோதரியை தேடிக் கொண்டிருக்கின்றனர்.
ஐக்கிய அரபு அமீரகத்தைச் சேர்ந்தவர் இப்ராஹிம் அப்துல்லா. அவர் ஷார்ஜாவில் உள்ள கோர்பக்கான் பகுதியில் வசித்து வருகிறார். அவரது தந்தை கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இறப்பதற்கு முன்பு அவர் தனக்கு இந்தியாவில் ஒரு மகள் இருப்பதாகவும், அவரை கண்டுபிடிக்க முடியாமல் போனதாகவும் அப்துல்லாவிடம் தெரிவித்துள்ளார்.

தந்தையாக தான் செய்ய வேண்டிய கடமைகளை செய்ய முடியாமல் போனதே என்று வருத்தப்பட்டுள்ளார் அப்துல்லாவின் தந்தை. அப்துல்லாவின் தந்தை இந்தியா சென்றபோது இந்திய பெண் ஒருவரை திருமணம் செய்துள்ளார். அவர் அமீரகம் திரும்பிய பிறகு தனது இந்திய மனைவிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது என்றும், அதற்கு பாத்திமா என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது என்றும் தெரிய வந்தது. இதையடுத்து அவர் பல முறை இந்தியா வந்தும் மனைவியையும், மகளையும் அவரால் கண்டுபிடிக்க முடியவில்லை. இறுதியில் மகளை பார்க்காமலேயே இறந்துவிட்டார்.
இந்நிலையில் 40 வயது பெண் ஒருவர் தனது தந்தையை தேடும் செய்தி அப்துல்லாவுக்கும், அவரது சகோதரர் அகமதுக்கும் தெரிய வந்தது. அகமது லண்டனில் வசிக்கிறார். இதையடுத்து அவர்கள் மாற்றாந்தாய்க்கு பிறந்த இந்திய சகோதரியை தேடி வருகிறார்கள்.
இது குறித்து அப்துல்லா கூறுகையில்,
எனது தந்தை தனது மகளை நினைத்து பல இரவுகள் தூங்கவில்லை. நானும், எனது சகோதரும் எங்கள் சகோதரியை தேடி இந்தியாவுக்கு பலமுறை சென்றும் பலனில்லை. இருப்பினும் அவரை தொடர்ந்து தேடி வருகிறோம். எனது சகோதரிகளும் இந்திய சகோதரியை பார்க்க ஆவலாக உள்ளனர் என்றார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications