For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ரெடியா இருங்க.. கொடூர தண்டனைகள் உண்டு.. திருடர்களின் கைகள் வெட்டப்படும்.. தாலிபான்கள் மிரட்டல்

கொடூர தண்டனைகளுக்கு தயாராக இருங்கள் என்று தாலிபான்கள் கூறியுள்ளனர்.

Google Oneindia Tamil News

காபூல்: "கொடூர மரண தண்டனைகளுக்கு தயாராக இருங்கள்" என்றும் திருடர்களின் கைகளை வெட்டுதல் உட்பட பல்வேறு தண்டனைகள் மீண்டும் கொண்டு வரப்படும் என்றும் தாலிபான்கள் மிரட்டல் விடுத்துள்ளனர்.

ஆப்கானிஸ்தானை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்த தாலிபான்களுக்கு தங்கள் ஆட்சியை அமைப்பதில் புது புது சிக்கல்கள் ஏற்பட்டு வருகின்றன.. குழப்பங்களும் பெருகி உள்ளன..

தாலிபான்களுக்காகவே அதிகார மோதலும், பதவி பிரச்சனையும் வெடித்து கிளம்பி உள்ளது..இதனைடயே, சில தினங்களுக்கு முன்பு ஒரு செய்தி வெளியானது.. தாலிபான்கள் ஈரான் மாடல் ஆட்சி முறையை ஆப்கானிஸ்தானில் நடத்த உள்ளதாக கூறப்பட்டது..

அதுமட்டும் நடக்காமல் இருந்திருந்தால்? எழும்பூரில் இரவு நடந்த விபத்து- காரை திறந்து பார்த்தால் ஷாக்அதுமட்டும் நடக்காமல் இருந்திருந்தால்? எழும்பூரில் இரவு நடந்த விபத்து- காரை திறந்து பார்த்தால் ஷாக்

 ஷரியத் சட்டம்

ஷரியத் சட்டம்

அதாவது குடியரசு ஆட்சி முறையும், ஷரியத் சட்டங்களை கொண்ட ஆட்சி முறையும் கலந்த கலவை தான் ஈரான் மாடல் என்பதாகும். ஒருவேளை ஈரான் மாடலை தாலிபான்கள் கையில் எடுத்தால், அது அந்நாட்டு மக்களுக்கு மேலும் சிக்கலை ஏற்படுத்தும் என்றும் கூறப்பட்டு வருகிறது.. மேலும், ஷரியத் சட்டம் மறுபடியும் நடைமுறைப்படுத்தப்படும் என்பதால் ஜனநாயகத்திற்கு இடமில்லை என்று தெளிவுப்படுத்தியிருந்தது.. இப்போது இன்னொரு அதிர்ச்சி தகவலும் வெளியாகி உள்ளது...

 கொடூர மரணம்

கொடூர மரணம்

கொடூர மரணத்துக்கு தயாராக இருங்கள் என்று தாலிபான்கள் மிரட்டல் விடுத்துள்ளனர்.. தலிபான்கள் 90-களில் ஆப்கானிஸ்தானில் ஆட்சியில் இருந்தபோது பகிரங்கமாகவும், பொதுவெளியிலும், மிக கொடூரமாகவும் மனிதாபிமானமற்ற முறையிலும் இப்படித்தான் மரணதண்டனைகளை நிறைவேற்றினர்.

 துராபி

துராபி

90'களின் பிற்பகுதியில் தாலிபான் ஆட்சியின்போது, இஸ்லாமிய சட்டத்தின்படி கடுமையான தண்டனைகளை செயல்படுத்தியவர் துராபி என்பவர்தான்.. இவர்தான் நீதி அமைச்சராக இருந்தார். இப்போது அவர் இப்போது சிறைச்சாலைகளின் பொறுப்பாளராக இருக்கிறார்.. புதிய ஆட்சி அமைந்து வரும் நிலையில், அதே பாணியில் எச்சரிக்கையும் தற்போது வெளியாகி உள்ளது.. தாலிபான் அமைப்பின் நிறுவனர் முல்லா நூருல்லாதுன் துராபி என்பவர் இதை பற்றி சொன்னதாவது:

Recommended Video

    Afghan People selling household items amid poverty in Kabul | OneIndia Tamil
     விமர்சனம்

    விமர்சனம்

    "ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் கைப்பற்றியுள்ள நிலையில், முன்பிருந்த அதே தண்டனைகள் மறுபடியும் கொண்டுவரப்படும். மைதானங்களில் குற்றவாளிகளை நிற்க வைத்து நாங்கள் கொடுக்கும் தண்டனைகளை மற்ற நாட்டினர் விமர்சித்தார்கள்... ஆனால், நாம் அவர்களது தண்டனை முறைகளையோ சட்டங்களையோ விமர்சிக்கவில்லையே.. எங்கள் சட்டங்கள் எப்படி இருக்கவேண்டும் என்று எங்களுக்கு யாரும் சொல்ல வேண்டிய அவசியமில்லை... நாங்கள் இஸ்லாத்தைப் பின்தொடர்வோம்.. குரானின்படி எங்கள் சட்டங்களை உருவாக்குவோம்" என்றார்.

     கொலை

    கொலை

    குற்றவாளிகளை பெரிய விளையாட்டு திடல்கள், அல்லது மசூதிகள் அருகிலுள்ள மைதானத்தில் நிறுத்தி வைத்துதான் தண்டனையை நிறைவேற்றுவார்களாம்.. தாலிபான்களின் சட்டப்படி, கொலை செய்தவர்களை, கொலை செய்யப்பட்டவரின் குடும்பத்தினரால், மக்கள் முன்பு நிறுத்தப்பட்டு, அவர் தலையில் ஒரே முறை சுடப்பட்டு கொல்லப்படுவார்கள்... அல்லது கொலை செய்தவனிடமிருந்து ரத்தப் பணம் என்னும் ஒரு தொகையை பெற்றுக்கொண்டு அவனை விட்டுவிடுவார்கள்...

     கொடிய தண்டனை

    கொடிய தண்டனை

    அதேபோல திருடர்களின் ஒரு கை வெட்டப்படும்... வழிப்பறி கொள்ளையர்களுக்கு மாறுகால் மாறுகை வாங்கப்படும். இப்போது தாலிபான்கள் ஆப்கனைக் கைப்பற்றியுள்ள நிலையில், முன்பு ஆட்சியில் கொடிய தண்டனைகளை வழங்கிய அதே துராபிக்கு இப்போதுள்ள ஆட்சியிலும் முக்கிய பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன... தாலிபான்களால் அன்று வழங்கப்பட்ட அதே தண்டனைகள் மீண்டும் தொடரும்.. ஆனால், அன்னைக்கு மாதிரி மைதானங்களில் இல்லாமல், தனித்தனி இடங்களில் அந்த தண்டனைகள் நிறைவேற்றப்படும்..

     கைகளை வெட்டுதல்

    கைகளை வெட்டுதல்

    கைகளை வெட்டுதல் பாதுகாப்புக்கு மிகவும் அவசியம்.. இதை பற்றி ஆப்கன் மக்கள் பயப்படவில்லை, தலைநகர் பாதுகாப்பாக மாறிவிட்டதாகவே கருத்து தெரிவிக்கிறார்கள்.. இப்போதுள்ள ஆட்சியில் திருடர்கள் முகத்தில் கரியை பூசி, அவர்களை தெருக்களில் ஊர்வலமாக அழைத்து செல்லும் வழக்கம் இருக்கிறது... இது எதற்காக என்றால், பொதுமக்கள் முன்பு இப்படி அவமானப்பட்டால், இனி திருடுவதற்குகூட யோசிப்பார்களாம்.. அதற்காகவே இந்த தண்டனை என்கிறார்கள்.

     நிலைமை மோசம்

    நிலைமை மோசம்

    கடந்த முறை தாலிபான்கள் ஆட்சி செய்தபோது, மக்கள் முன்னிலையில் தரப்பட்ட பல தண்டனைகள் உலக மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தின.. உலகம் முழுவதும் எதிர்ப்பும் தோன்றியது.. இப்போது மீண்டும் கலக்கம் தரும்படியான அறிவிப்புகள் வந்து கொண்டிருக்கின்றன.. நாங்கள் முன்பு மாதிரி இல்லை, மாறி விட்டோம், மக்கள் பயப்பட வேண்டாம், பெண்களுக்கு பாதுகாப்பு உண்டு என்று தாலிபான்கள் சொல்லி வந்தாலும், நாளுக்கு நாள் அங்கு நிலைமை மோசமாகி கொண்டுதான் இருக்கிறது..

     பரபரப்பு

    பரபரப்பு

    இதற்கு காரணம், பாகிஸ்தான், சீனா போலவே தாங்களும் உலக அரங்கில் இடம்பெற்று அங்கீகாரம் அடைந்து விட வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது. ஆனால், நடப்பதை எல்லாம் பார்த்தால், அதிலும் தாலிபான்கள் தந்து வரும் பேட்டிகளை பார்த்தால், ஆட்சி முறை கிலியை ஏற்படுத்தியே வருவதாக பத்திரிகைகள் செய்தி வெளியிட்டு வருகின்றன.

    English summary
    Brutal executions will begin in dreaded Taliban rule in afghanistan, warns Taliban leader
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X