இன்னொருவருடன் மாஜி காதலி.. துறவிக்கு வந்ததே கோபம்.. வேனை விட்டு ஏற்றி.. கத்தியால் குத்தி.. பரபரப்பு

8 மாத கர்ப்பிணியை புத்த துறவி ஒருவர் கொலை செய்துள்ளார்

Subscribe to Oneindia Tamil

பாங்காக்: புத்த துறவியின் குழந்தை அவருடைய காதலி வயிற்றில் வளர்ந்து வந்தது.. ஆனால் காதலியோ வேறு ஒரு புது காதலனுடன் நெருக்கமாக இருந்ததால், ஆத்திரமடைந்த துறவி, காதலியை பட்டாக்கத்தியாலேயே குத்தி கொன்றுவிட்டார்.

தாய்லாந்தை சேர்ந்தவர் உம் திரென்ராம்.. இவர் ஒரு புத்த மத துறவி.. 57 வயதாகிறது.. இப்போதுதான் இவர் துறவி.. இதற்கு முன்பு லம்பாய் புவலோய என்ற பெண்ணை காதலித்தார்... ஆனால் துறவறம் மேற்கொண்டதும் அந்த காதலியை பிரிந்து வந்து விட்டார்.

இந்நிலையில் ஒருநாள் தன் வீட்டுக்கு வேனில் வந்து கொண்டிருந்தார்.. அப்போதுதான் முன்னாள் காதலியை துறவி பார்த்தார்.. அந்த காதலிக்கு இப்போது 33 வயதாகிறது... ரொம்ப நாள் கழித்து காதலியை பார்ப்பதால் அதிர்ச்சி.. ஆனால் அதைவிட இன்னொரு அதிர்ச்சி அந்த காதலி வேறொரு காதலனுடன் இருந்தார்.

காதலி

காதலி

2 பேரும் ஒரு காரில் உட்கார்ந்திருந்தனர்.. அதுவும் துறவி வீட்டு வாசலிலேயே காரை நிறுத்தி 2 காதலர்களும் கொஞ்சி கொண்டிருந்திருக்கிறார்கள். இதை பார்த்ததும் துறவிக்கு வந்ததே ஆத்திரம்.. தான் வந்த வேனிலேயே அந்த காரில் போய் மோதினார்.. துறவி டென்ஷன் ஆனதை பார்த்ததும் காதலர்கள் 2 பேரும் அங்கிருந்து ஓட ஆரம்பித்தனர்.. ஆனாலும் துறவி விடவில்லை.

கைது

கைது

திடீரென ஒரு பட்டாக்கத்தியை உருவினார்.. காதலியை சரமாரியாக வெட்டி தள்ளினார்.. அங்கேயே காதலி சுருண்டு விழுந்து இறந்துவிட்டார்.. துறவி விடவில்லை. நேராக அந்த காதலியின் வீட்டுக்கு போய், இன்னொருத்தனுடன் அவளை பார்த்ததால் கொன்றுவிட்டேன் என்று சொன்னார். இதையடுத்து போலீசார் துறவியை கைது செய்தனர்... விசாரணை ஆரம்பமாகி உள்ளது.

தொந்தரவு

தொந்தரவு

இந்த புத்த துறவி ஆரம்பத்தில் உண்மையாகவே அந்த பெண்ணை நேசித்துள்ளார்.. துறவறம் பூண்டவும்தான் காதலியை கைவிட்டுவிட்டுவந்தார்.. ஆனால் அந்த காதலியோ, துறவியை துரத்தி துரத்தி பணம் கேட்டு தொந்தரவு செய்ததாக தெரிகிறது.. அதுமட்டுமல்ல, காதலியின் வயிற்றில் துறவியின் குழந்தை வளர்கிறதாம்..

கர்ப்பம்

கர்ப்பம்

அந்த விஷயத்தை வெளியே சொல்ல போகிறேன் என்று பிளாக்மெயில் செய்து வந்திருக்கிறார்.. போதாக்குறைக்கு புதுக்காதலனை பார்த்ததும், ஏற்கனவே கடுப்பில் இருந்த துறவி அவரை கொன்றுவிட்டதாக தெரியவந்துள்ளது... புதுக்காதலனுடன் காரில் இருந்த காதலியின் வயிற்றில் துறவியின் 8 மாத குழந்தை வளர்ந்து வந்ததாம்!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+