Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கனடாவில் இந்திய மாணவர்களுக்கு ஸ்கெட்ச்.. ஏஜென்சியை ரவுண்டு கட்டும் போலீஸ்.. பகீர் புகார்கள்

போலி ஆவணங்களுடன் கனடா சென்ற இந்திய மாணவர்களை மீண்டும் இந்தியாவுக்கு நாடு கடத்த கனடா அரசு உத்தரவிட்டுள்ளது

Subscribe to Oneindia Tamil

ஒட்டாவா: கனடாவில் உயர்கல்வி பயில சென்ற இந்தியாவை சேர்ந்த மாணவர்கள் சுமார் 700 பேரை அந்நாட்டு அரசு இந்தியாவுக்கு திருப்பி அனுப்ப திட்டமிட்டுள்ளது. இதனால் இந்திய மாணவர்கள் கடும் அதிருப்தியடைந்துள்ளனர்.

இந்தியாவில் உயர்கல்வி பயில்வதைவிட வெளிநாடுகளுக்கு தங்கள் குழந்தைகளை உயர்கல்வி பயில அனுப்ப இந்திய பெற்றோர்கள் அதிக அளவில் ஆர்வம் காட்டி வருகின்றனர். தேசிய அளவில் போதுமான அளவு கல்வி நிறுவனங்கள் இருந்தாலும் தரத்தின் அடிப்படியில் இந்த நிறுவனங்கள் போதுமான அளவில் இல்லையென்று பெற்றோர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். எனவே இவ்வளவு செலவு செய்து இந்த கல்வி நிறுவனங்களில் அவர்களை சேர்ப்பதை விட இன்னும் கொஞ்சம் கூடுதலாக செலவு செய்தால் வெளிநாட்டில் ஒரு தரமான கல்வி நிலையங்களில் குழந்தைகளை சேர்த்துவிடலாம் என்கிற யோசனையில்தான் இந்திய மாணவர்கள் வெளிநாட்டில் சென்று படிப்பது அதிகரித்து வருகிறது.

மற்றொரு காரணம் மருத்துவக்கல்லூரிகள். உக்ரைன்-ரஷ்யா போர் விஷயத்தில் இந்த விவகாரம் வெளியில் தெரிய வந்தது. அதாவது உக்ரைன் நாட்டில் மருத்துவம் பயில இந்திய மாணவர்கள் பலர் சென்றிருந்தனர். காரணம் இந்தியாவில் போதுமான அரசு மருத்துவக்கல்லூரிகள் கிடையாது என்பதுதான். அதேபோல கனடாவுக்கு உயர்கல்வி பயில சென்ற மாணவர்கள் தற்போது சிக்கலில் மாட்டியுள்ளனர். சுமார் 700 இந்திய மாணவர்களை மீண்டும் இந்தியாவுக்கே அனுப்ப கனடா நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது.

 நிரந்தர குடியுரிமை

நிரந்தர குடியுரிமை

அதாவது இந்தியாவிலிருந்து கடந்த 2018-2019ம் ஆண்டு உயர் கல்விக்காக சில மாணவர்கள் கனடா சென்றிருந்தனர். இவர்களை பஞ்சாபின் ஜலந்தரை சேர்ந்த விசா ஏஜென்டான பிரிஜேஷ் மிஸ்ராதான் அனுப்பி வைத்துள்ளார். இவர் கடந்த 10 ஆண்டுகளாக இதுபோன்று மாணவர்களை உயர் கல்விக்காக வெளிநாடுகளுக்கு அனுப்பி வைத்திருக்கிறார். சரி இதில் என்ன பிரச்னை என்று கேட்கிறீர்களா? அதாவது கடந்த 2018-2019ம் ஆண்டு கனடா சென்ற இந்திய மாணவர்கள் தங்கள் கல்வியை முடித்துவிட்டு வேலை தேடி வந்துள்ளனர். அதேபோல அந்நாட்டின் நிரந்தர குடியுரிமைக்காகவும் விண்ணப்பித்துள்ளனர். அப்போது கனடா எல்லைப் பாதுகாப்பு ஏஜென்சி இவர்களின் ஆவணங்களை பரிசோதித்துள்ளது.

 போலி ஆவணங்கள்

போலி ஆவணங்கள்

இந்த சோதனையில் முக்கிய ஆவணங்கள் சில போலியானவை என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அதாவது இவர்களுக்கு கனடாவில் கல்வி பயில ஒரு ஆஃபர் லெட்டர் கிடைத்திருக்கிறது. இந்த லெட்டரை அடிப்படையாக கொண்டுதான் இவர்கள் அனைவரும் கனடாவுக்கு வந்திருக்கின்றனர். இதனை ஏற்பாடு செய்து கொடுத்தது ஜலந்தரின் விசா ஏஜென்சிதான். இந்த ஏஜென்சி கல்வி மற்றும் விடுதி செலவுக்காக ஒவ்வொரு மாணவர்களிடமிருந்தும் ரூ.16 லட்சத்திற்கும் அதிகமான தொகையை வசூலித்துள்ளது. இப்படியாக சுமார் 700 மாணவர்கள் வரை கனடா வந்திருக்கின்றனர். இங்கு வந்த பின்னர், ஆஃபர் லெட்டர் வந்த கல்வி நிறுவனத்தில் மாணவர் சேர்க்கை முடிந்துவிட்டது என்றும் இதில் பயில வேண்டுமெனில் மேலும் ஒரு செமஸ்டர் வரை காத்திருக்க வேண்டும் எனவும் இந்திய மாணவர்களிடம் சொல்லப்பட்டுள்ளது.

 விசாரணை

விசாரணை

ஆனால் மாணவர்களால் 6 மாதம் வரை காத்திருக்க முடியாது என்பதால் எந்த கல்லூரியில் வாய்ப்பிருக்கிறதோ அதில் சேர்ந்து படிக்க ஆயத்தமாகிவிடுவார்கள். அதேபோல ஜலந்தர் நிறுவனம் தான் பெற்ற கட்டணத்தில் ஏறத்தாழ அனைத்தையும் திருப்பி கொடுத்துவிடும். எனவே மாணவர்களுக்கு இந்த ஏஜென்சி மீது சந்தேகம் எழவில்லை. இப்படியாக ஒரு வழியாக படித்து முடித்து பின்னர் வேலை தேடி வேலை தேடும்போது இந்த மாணவர்கள் நிரந்தர குடியுரிமைக்கு விண்ணப்பித்துள்ளனர். அப்படி விண்ணப்பித்தபோதுதான் தொடக்கத்தில் மாணவர்கள் கனடா வர காரணமாக இருந்த ஆஃபர் லெட்டர்கள் போலியானவை என்று கனடா அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.

 நாடு கடத்துதல்

நாடு கடத்துதல்

இது தண்டனைக்குரிய குற்றமாகும். ஆனால் இந்த மாணவர்களின் எண்ணிக்கையானது அதிக அளவில் இருப்பதால் கனடா அரசு அவர்களை இந்தியாவுக்கு திருப்பி அனுப்ப திட்டமிட்டுள்ளது. இருப்பினும் மாணவர்கள் இந்தியா திரும்புவதை எதிர்த்து அந்நாட்டு நீதிமன்றத்தை நாட முடிவெடுத்துள்ளனர். மறுபுறம் ஜலந்தர் ஏஜென்சி மீதான குற்றம் என்பது நிரூபிக்க முடியாத அளவில் இருப்பதாக காவல்துறை அதிகாரிகள் கூறுகின்றனர். ஏனெனில் எல்லா நிபந்தனைகளுக்கும் மாணவர்களிடம் இந்த ஏஜென்சி கையெழுத்து வாங்கியிருப்பது, வழக்கின் போக்கை மாற்றிவிடும் என சட்ட வல்லுநர்கள் கூறியுள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+