For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கொரோனாவில் இருந்து மீண்ட 103 வயது மூதாட்டி.. எப்படி சாத்தியம்.. மருத்துவர்கள் வியப்பு

Google Oneindia Tamil News

பெய்ஜிங்: வயதானவர்களை கொரோனா தாக்கினாலும் மரணமில்லை என்பதற்கு இந்த 103 வயது பாட்டி உதாரணம் ஆவார். இவர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளார். இதை கண்டு மருத்துவர்களே ஆச்சர்யம் அடைந்துள்ளனர்.

60 வயதுக்கு மேற்பட்டவர்களை கொரோனா தாக்கினாலே மரணம் ஏற்படும் என்கிற நிலையில். சீனாவில் 103 வயது பாட்டி கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிர் பிழைத்துள்ளார். இது எப்படி சாத்தியமானது என்பதை இப்போது பார்ப்போம்.

சீனாவின் வுகானில் இருந்து தான் முதல் முதலாக கொரோனா வைரஸ் பரவ தொங்கியது. இதுவரை சீனாவில் 80,881 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டனர். 3226 பேர் உயிரிழந்தனர். இதவரை 68,688 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். மற்றவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது உயிரிழப்புகளும் பாதிப்புகளும் சீனாவில் வெகுவாக குறைந்துள்ளது.

குணமாகினார்

குணமாகினார்

இந்நிலையில் சீனாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளில் ஒருவர் ஜாங் குவாங்பென் என்ற 103 வயது மூதாட்டி. இவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மூச்சுக்குழாய் அழற்சியால் தவித்தார். வுகானில் உள்ள ஒரு மருத்துவமனையில் வெறும் ஆறு நாட்கள் மட்டுமே சிகிக்சை பெற்று குணமாகி வீடு திரும்பி உள்ளார். இது தொடர்பாக வீடியோ ஒன்றும் வெளியாகி வைரலாகி வருகிறது.

ஆபத்தான நிலை

ஆபத்தான நிலை

103 வயது மூதாட்டி ஜாங் குவாங்பெனுக்கு சிகிச்சை அளித்த மருத்துவக்குழுவினர் பாட்டி நலமுடன் இருப்பதை உறுதி செய்துள்ளனர். கடந்த மார்ச் 1ம்தேதி உடல் நலம் பாதிக்கப்பட்ட மூதாட்டி ஜாங் குவாங்பென், மருத்துவமனையில் சேர்க்கப்படும் போது உயிருக்கு ஆபத்தான நிலையில் தான் இருந்தார்.அவர் தனக்கு என்ன ஏற்பட்டது என்பதை மருத்துவர்களிடம் வாய்திறந்து சொல்லக்கூடிய முடியாத நிலையில் இருந்தார்.

ரத்த அழுத்தம்

ரத்த அழுத்தம்

ஆனால் அவர் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மீண்டது சீன மருத்துவர்களிடையே விவாதத்தையும் ஆச்சர்யத்தையும் ஏற்படுத்தி உள்ளது. இத்தனைக்கும் மூதாட்டிககு உயர் ரத்த அழுத்தம் , இதய செயலிழப்பு உள்ளிட்ட பிரச்சகைள் இருந்திருக்கிறது. அத்துடனே அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். ஆனாலும்அவர் முழுமையாக குணமானது ஆச்சர்த்தை ஏற்படுத்தி உள்ளது.

உயிர் பிழைப்பது கடினம்

உயிர் பிழைப்பது கடினம்

தற்போது உள்ள மருத்துவ ஆய்வுகள் மற்றும் தரவுகளின்படி 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டால் உயிர் பிழைப்பது கடினம் என்ற நிலை உள்ளது இதுவே பொதுவான கருத்தாக உள்ளது. ஏனெனில் இதவரை இறந்தவர்களில் பெரும்பாலானோர் 60 வயதை கடந்தவர்கள் ஆவார். ஆனால் திடீர் திருப்பமாக கடந்த வாரம் வயதானவர்கள் அதிக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு பின்னர் உயிர் தப்பி உள்ளார்கள். இந்த தகவலை கிறிஸ் விட்டி என்பவர் தெரிவித்துள்ளார்.

பொதுமக்கள் வாழ்த்து

பொதுமக்கள் வாழ்த்து

ஏற்கனவே கடந்த வாரம் சீனாவின் வுகானைச் சேர்ந்த 101 வயதான ஒருவர் கொரோனா வைரஸ் காய்ச்சலில் இருந்து தப்பினார்.. இப்போது கெரோனா பிடியில் 103 வயது மூதாட்டி ஜாங் குவாங்பென் தப்பியது மக்களிடையே புதிய நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது. அவருக்கு உலகம் முழுவதில் இருந்தும் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

English summary
. Zhang Guangfen , 103-year-old Chinese woman to survived after coronavirus attack
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X