For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மாஜி அமைச்சர் கைது.. ஊழல் புகாரில் வசமாக சிக்கியது அம்பலம்.. சீன அரசு அதிரடி நடவடிக்கை

ஊழல் குற்றச்சாட்டில் சீனாவின் மாஜி அமைச்சர் கைதானார்

Google Oneindia Tamil News

பெய்ஜிங்: மாஜி அமைச்சர் ஒருவரை ஊழல் குற்றச்சாட்டில் சீன அரசு அதிரடியாக கைது செய்துள்ளது.

கொரோனா வைரஸ் பல நாடுகளையும் முற்றிலுமாக புரட்டிப் போட்டு வருகிறது. சீனாவின் வூஹான் நகரிலுள்ள வைராலஜி மையத்திலிருந்து கொரோனா பரவியிருக்கலாம் என்று கூறப்பட்டது.

வூஹான் நகரத்தில் இருந்துதான், மற்ற நாடுகளுக்கும் பரவியதாக சொல்லப்பட்ட நிலையில், அதற்குள் அந்த நாடு தடுப்பு நடவடிக்கைகளில் இறங்கியமுத. வீதரிமான முனனெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டது.

 China arrests ex-minister who had ‘deserted’ post during Covid outbreak in Wuhan

ஆனால் அதற்குள் கொத்து கொத்தாக மக்கள் விழுந்து இறந்தனர்.. ஒருகட்டத்தில் தொற்றை கட்டுப்படுத்திவிட்டாலும், உயிரிழப்புகளை குறைக்க முடியாமல் போய்விட்டது.. இப்படி சீனா திணறி கொண்டிருந்த நேரத்தில் ஒரு முக்கிய சம்பவம் அங்கு நடந்தது. அப்போதைய பாதுகாப்பு துறை அமைச்சராக இருந்தவர் பெயர் சன்லிஜுன்..

இவர் ஏகப்பட்ட ஊழல்களை செய்து வந்திருக்கிறார். இது தொடர்பான விஷயங்கள் மெல்ல மெல்லதான் அரசுக்கு தெரியவந்துள்ளது. எனவே, அதுகுறித்து விசாரணயை மேற்கொண்டது.. கிட்டத்தட்ட ஒரு வருடமாகவே இந்த விசாரணை நடந்து வருகிறது.. ஆனால்,விசாரணை துரிதமாவதை கண்டதுமே, சுதாரித்து கொண்ட அந்த அமைச்சர் திடுதிப்பென்று தலைமறைவானார்..

தொற்றை கட்டுப்படுத்த அரசு இயந்திரம் மும்முரமாகி கொண்டிருக்கும்போது, ஒரு பாதுகாப்பு அமைச்சரே தலைமறைவானது பரபரப்பாக பேசப்பட்டது.. இதையடுத்து, அந்த பதவியில் இருந்து அவரை அதிகாரப்பூர்வமாக கம்யூனிஸ்ட் கட்சி நீக்கி உத்தரவிட்டது. மேலும் தொடர்ந்து அந்த ஊழல் தொடர்பான விசாரணையும் நடந்து வந்த நிலையில், தற்போது அந்த புகார் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.. அமைச்சரின் ஊழலும் அம்பலமாகி உள்ளது..

இதையடுத்து, லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் அவரை கைது செய்துள்ளனர் அந்நாட்டு அரசு. அதாவது மாஜி அமைச்சர், அங்கீகாரம் இல்லாமல் ரகசிய பொருட்களை வைத்திருந்ததாகவும் நீண்ட காலமாக மூடநம்பிக்கை நடவடிக்கை செயல்களில் ஈடுபட்டு வந்ததாகவும் இவர் மீது மேலும் புகார்கள் உள்ளன..

உயிரைப்பறித்த தீபாவளி மது விருந்து ... மதுபானம் அருந்திய 3 நண்பர்கள்... அடுத்தடுத்து பலி உயிரைப்பறித்த தீபாவளி மது விருந்து ... மதுபானம் அருந்திய 3 நண்பர்கள்... அடுத்தடுத்து பலி

அதுமட்டுமல்ல, கட்சியின் கொள்கைகளுக்கும், அரசுக்கும் நம்பிக்கையாக சன் ஒருபோதும் இருந்ததில்லை என்றும், மிக மோசமான அரசியல் நேர்மையையே வெளிப்படுத்தி வந்ததாகவும், கட்சியின் கொள்கைகள் மீது ஆதாரமற்ற விமர்சனங்களை வெளியிட்டதுடன், அரசியல் வதந்திகளை பரப்பினார் என்றும் இவர் மீது ஏகப்பட்ட புகார்கள் உள்ளன. மிக முக்கிய துறையில் இருந்த மாஜி அமைச்சர் கைதாகி உள்ளது சீன அரசியலில் பரபரப்பை தந்து வருகிறது.

English summary
China arrests ex-minister who had ‘deserted’ post during Covid outbreak in Wuhan
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X