சைபர் போருக்குத் தயாராகும் சீனா.. உலகின் சோஷியல் மீடியா நிறுவனங்களைக் கட்டுப்படுத்த புதிய திட்டம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

பெய்ஜிங்: 3ம் உலகப் போர் என்ற ஒன்று நடந்தால் கண்டிப்பாக அது அணு ஆயுத போராக இருக்குமா என்று தெரியவில்லை. ஒரு வேலை சைபர் போராக இருக்க வாய்ப்பு இருக்கிறது.

சரியாகச் சொல்ல வேண்டும் என்றால் இப்போதே சைபர் போர் ஆரம்பித்துவிட்டது. ரஷ்யா ஏற்கனவே இதில் முக்கியமான இடத்தில் இருக்கிறது.

இதனால் உலகில் இருக்கும் சோஷியல் மீடியா நிறுவனங்களைக் கட்டுப்படுத்த சீனா புதிய திட்டம் உருவாக்கி இருக்கிறது. பாஜக கட்சி குஜராத் மாடல் என்று பிரச்சாரம் செய்தது போலவே தற்போது சீனா ரஷ்யா மாடலை உருவாக்கி இருக்கிறது.

ரஷ்யா ஆட்டம்

ரஷ்யா ஆட்டம்

அமெரிக்க அதிபர் தேர்தலில்தான் ரஷ்யா இந்த வேலையைச் செய்தது. பேஸ்புக் விளம்பரங்களில் எந்த அதிபர் வேட்பாளருக்கு எதிராகக் கருத்து வர வேண்டும், யாருக்கு ஆதரவாக வர வேண்டும் என்று பேஸ்புக்கை ரஷ்யா கட்டுப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் டிரம்ப்பிற்கும், ரஷ்யாவிற்கும் இடையில் தொடர்பு இருக்கிறது என்றும் கூறப்பட்டது.

சீனா பாதுகாப்பு

சீனா பாதுகாப்பு

இது போன்ற பிரச்சனைகள் வரக்கூடாது என்றுதான் சீனா தனியாகச் சமூக வலைத்தளம் வைத்துள்ளது. யு டியூப், கூகுள், பேஸ்புக், வாட்ஸ் ஆப் என எதுவுமே அந்த நாட்டில் கிடையாது. அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் 5க்கும் குறைவான சமூக வலைத்தளங்கள் மட்டும் அங்கு இருக்கிறது.

பிரச்சனை

பிரச்சனை

ஆனால் ரஷ்யா இங்கேயும் வேலையைக் காட்டியது. சில மாதங்கள் முன்பு சீனாவின் உயரிய அதிகாரிகள் குறித்த புகார் கட்டுரைகள் அந்நாட்டுச் சமூக வலைத்தளங்களில் வந்தது. அதைப் பரப்பியதே ரஷ்யாதான் என்று சீனா பின்பு குற்றச்சாட்டு வைத்தது. இதை எப்படியாவது தடுக்க வேண்டும் என்றும் நினைத்தது.

திட்டம்

திட்டம்

தற்போது ரஷ்யா போலவே சீனாவும் மற்ற நாட்டுச் சமூக வலைத்தளங்களைக் கட்டுப்படுத்த இருக்கிறது. மேலும் தங்கள் நாட்டுச் சமூக வலைத்தளங்களைப் பாதுகாக்கவும் 11 பில்லியின் டாலர் வரை ஒதுக்கி இருக்கிறது. இது இணையப் பாதுகாப்பிற்காக இந்த ஆண்டு பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட தொகை ஆகும்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
China decides to increase the strength of its social media sites. In order escape from the Russia attack China decides this new technology.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற