குளோனிங் முறையில் பிரமாண்ட நாய்கள்.. அடுத்து போர் வீரர்கள்தான்.. அச்சுறுத்தும் சீனா!

Posted By:
Subscribe to Oneindia Tamil

பெய்ஜிங்: சீனா குளோனிங் முறையில் பல மடங்கு வலிமையான நாய்களை உருவாக்கியுள்ளது. இதே தொழில்நுட்பத்தை வைத்து படைவீரர்களை உருவாக்க சீனா முடிவு செய்துள்ளது.

அறிவியல் வளர்ச்சியில் நாளும் ஒரு கண்டுபிடிப்பில் ஈடுபட்டு வரும் மனிதகுலம் மனித சக்திக்கு மாற்றாக பல மடங்கு வேகத்துடன் செயல்படும் ரோபோக்களை கண்டுபிடித்துள்ளது. சீனா ஜப்பான் , அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் ரோபோக்கள் வீட்டு வேலைகளை செய்ய பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

சில நாடுகளில் ரோபோக்கள் மருத்துவமனைகளில் உதவிக்காக வைக்கப்பட்டிருந்தாலும் ஒரு சில நாடுகளில் ரோபோக்களே ஆப்ரேஷன் செய்யும் அளவுக்கு உருவாக்கப்பட்டுள்ளன. இதுவரை மாற்று சக்தியை மட்டுமே உருவாக்கிய மனிதர்கள் தற்போது மாற்று உயிரையும் உருவாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர்.

வலிமையான சூப்பர் நாய்கள்

வலிமையான சூப்பர் நாய்கள்

அதாவது சீனாவில் குளோனிங் முறையில் நாய்களை உருவாக்கியுள்ளது. இயற்கையான நாய்களை விட பல மடங்கு வலிமையான தசைநார்களுடன் உள்ள இந்த நாய்கள் பல மடங்கு வேகத்துடனும் சக்தியுடனும் செயல்படுகின்றனர்.

லிட்டில் லாங் லாங்

லிட்டில் லாங் லாங்

27 சூப்பர் நாய்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அவற்றில் மரபணு இல்லாமல் உருவாக்கப்பட்டுள்ள சூப்பர் நாய்க்கு லிட்டில் லாங் லாங் என பெயரிடப்பட்டுள்ளது. தென்கொரியாவுக்குப் பிறகு குளோனிங் முறையில் வலிமை வாய்ந்த சூப்பர் நாய்களை வெற்றிகரமாக உருவாக்கியுள்ளது சீனா என்பது குறிப்பிடத்தக்கது.

சூப்பர் மேன்களை உருவாக்க முடிவு

சூப்பர் மேன்களை உருவாக்க முடிவு

இந்த பிரமாண்ட நாய்களின் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வலிமை வாய்ந்த சூப்பர் மேன்களை உருவாக்க சீனா முடிவு செய்துள்ளது. அவர்களை படை வீரர்களாக ராணுவத்தில் பயன்படுத்தவும் சீனா திட்டமிட்டுள்ளது.

அடங்காத சீனா

அடங்காத சீனா

சீனர்கள் விஞ்ஞானத்திலும் தொழில்நுட்பத்திலும் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் அவர்கள் எந்த கட்டுப்பாட்டுக்கும் அடங்கமாட்டார்கள் என விஞ்ஞானிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

A Video Clip on the Chinese army forcibly entered in Sikkim border-Oneindia Tamil
கடினமாக இருக்காது

கடினமாக இருக்காது

குளோனிங் தொழில்நுட்பத்தில் மரபணு மாற்றத்தின் மூலம் அதிக பலம் வாய்ந்த சூப்பர் மேன்களை உருவாக்க வேண்டும் என்பதில் சீன அரசு தீர்க்கமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. குளோனிங் முறையில் நாய்களை உருவாக்குவதுதான் கடினம் என்ற நிலையில் சீனா குளோனிங் நாய்களை உருவாக்கியுள்ளதால் மனிதர்களை உருவாக்குவது கடினமாக இருக்காது என்றும் மரபணு விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
The dogs, which are test tube bred in a lab, have twice the muscle mass of their natural counterparts and are considerably stronger and faster. The canine genome has been especially difficult to engineer and replicate – but its close similarity to the human genome means it has long been the prize of geneticists.
Please Wait while comments are loading...