For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இலங்கையில் இந்தியாவுடன் போட்டியிடவில்லையாம்.. சீன நாளிதழ் வெளியிட்ட செய்தி

Google Oneindia Tamil News

பீஜிங்: இலங்கையில் இந்தியாவுடன் போட்டி போடவில்லை என்று சீன நாட்டு முன்னணி நாளிதழ் தெரிவித்துள்ளது.

இலங்கையில் பிரதமராக இருந்த ரணில் விக்கிரமசிங்கேவை நீக்கிவிட்டு முன்னாள் அதிபர் ராஜபக்சேவை பிரதமராகி உள்ளார், அந்த நாட்டு அதிபர் மைத்திரிபால சிறிசேனா.

2015ஆம் ஆண்டு பொதுத் தேர்தலின் போது ராஜபக்சேவை எதிர்த்தவர் மைத்திரிபால சிறிசேனா. ஆனால் இப்போது அவருடன் திடீரென கூட்டணி அமைத்துக் கொண்டுள்ளார்.

இலங்கை தெருக்கள் ரத்தத்தால் நிறையும்.. மக்களை எச்சரிக்கும் சபாநாயகர்.. என்ன நடக்க போகிறது? இலங்கை தெருக்கள் ரத்தத்தால் நிறையும்.. மக்களை எச்சரிக்கும் சபாநாயகர்.. என்ன நடக்க போகிறது?

பின்னணியில் சீனா

பின்னணியில் சீனா

சிறிசேனாவின் திடீர் முடிவுகளுக்கு பின்னணியில் சீனா உள்ளது என்று இந்திய ஊடகங்களும், மேல்நாட்டு ஊடகங்களும் செய்திகளை வெளியிட்டு வருகின்றன. ரணில் விக்கிரமசிங்கே இந்தியா ஆதரவு நிலைப்பாட்டை எடுத்த நிலையில், மஹிந்த ராஜபக்சே சீனாவுக்கு நெருக்கமாக அறியப்பட்டவர். எனவே இது போன்ற யூகங்கள் எழுவது என்பது தவிர்க்க முடியாததாக உள்ளது.

உள்நாட்டு விவகாரம்

உள்நாட்டு விவகாரம்

அதேநேரம் சீனாவோ, இந்த விவகாரத்தில் இருந்து தள்ளி நிற்பது போல காட்டிக் கொண்டு உள்ளது. இலங்கையில் நடப்பது அந்த நாட்டு உள் விவகாரம் என்றும், சம்பந்தப்பட்ட கட்சியினர் பேச்சுவார்த்தை மூலமாக தங்கள் பிரச்சனையை தீர்த்துக்கொள்ள வேண்டும் என்று சீனா ஏற்கனவே தெரிவித்திருந்தது.

சீன பத்திரிகை

சீன பத்திரிகை

இதனிடையே, சீன நாட்டு பத்திரிகையான 'குளோபல் டைம்ஸ் யுனிவர்சிட்டி' பீஜிங்கில் உள்ள, சிங்குவா பல்கலைக்கழகத்தின் தேசிய ஸ்டேட்டர்ஜி இன்ஸ்ட்டிடியூட் ஆய்வு மாணவர் கியான் பெங்க் கூறியதாக ஒரு கருத்தை வெளியிட்டுள்ளது. அதில் அவர் கூறுகையில், டசில வெளிநாட்டு ஊடகங்கள் மற்றும் அதிகாரிகள் இலங்கையில் நடைபெறும் ஒவ்வொரு அரசியல் அல்லது பொருளாதார பிரச்சினைகளுக்கு சீனாவை கைகாட்டுவது வழக்கமாகிவிட்டது. இது பொறுப்பற்றது. எந்த பலனும் விளைவிக்காத குற்றச்சாட்டு" என்று தெரிவித்துள்ளார்.

அபத்தமாம்

அபத்தமாம்

சீன நாட்டின் மற்றொரு ஆய்வாளர் லியு ஜியாகுயி, கூறுகையில், ராஜபக்சே பிரதமரானதும், இந்தியாவிடமிருந்து சீனாவை நோக்கி இலங்கையை கொண்டு செல்வார் என்பது, அபத்தமானது என்று கூறியுள்ளார். இந்த தகவலும் அந்த நாளிதழில் வெளியாகியுள்ளது.

English summary
While the Indian establishment watched alarmingly the sudden political transition that took place in Sri Lanka on October 26, when the president of the island-nation, Maithripala Sirisena, sacked his ally Ranil Wickremasinghe as the prime minister and replaced him with former president Mahinda Rajapaksa. In the presidential elections of 2015, Sirisena and Wickremasinghe came together to oust Rajapaksa, who is seen by many as pro-China.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X