For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கொரோனாவை தடுக்க வேறுவழியில்லை.. சீனா எடுத்த முடிவு.. கொதிக்கும் மக்கள்!

Google Oneindia Tamil News

பெய்ஜிங்: சந்திர புத்தாண்டு கொண்டாட்டங்கள் சீனாவில் கொண்டாடப்பட உள்ள நிலையில், திடீரென சீனாவில் மீண்டும் அதிகரித்து வரும் கொரோனா நோய்த்தொற்றுகளை கட்டுப்படுத்த சீன அதிகாரிகள் கடுமையாக போராடி வருகிறார்கள். இந்நிலையில் சீன அதிகாரிகள் மலவாய் பரிசோதனை என்ற கொரோனா வைரஸ் பரிசோதனையாக அறிமுகப்படுத்தியுள்ளது, இது வைரஸை இன்னும் துல்லியமாகக் கண்டறிய உதவுகிறது.

கொரோனா தொற்றை கண்டுபிடிக்க ஆசன வாய் துவாரத்தில் இருந்து மாதிரிகள் எடுக்கும் சீன அரசின் செயலுக்கு, அந்நாட்டு மக்களிடையே கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

உலகில் முதல் முதலாக கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்ட சீனாவில் கட்டுப்படுத்தப்பட்ட கொரோனா, மீண்டும் 2வது அலை பரவ தொடங்கி உள்ளது. இதை கட்டுப்படுத்த சீன அதிகாரிகள் கடுமையாக போராடி வருகிறார்கள்,.

மல துவாரம்

மல துவாரம்

பொதுவாக கொரோனா வைரசை கண்டுபிடிக்க மூக்கு, தொண்டையில் இருந்து சளி மாதிரிகள் எடுத்து பரிசோதிக்கப்படுகிறது. ரத்த மாதிரி, உமிழ் நீர் மூலமும் தொற்று கண்டறியப்படுவது வழக்கம் ஆகும். ஆனால், இந்த பரிசோதனைகளை விட வினோதமான ஒரு பரிசோதனையை சீனா தனது நாட்டில் அறிமுகம் செய்திருக்கிறது. மல துவாரத்தில் பரிசோதனை செய்வதாகும்.

கண்டுபிடிப்பது சுலபம்

கண்டுபிடிப்பது சுலபம்

உடலில் இருந்து கழிவுகள் வெளியேறும் பகுதியில் கொரோனா நீண்ட நேரம் உயிருடன் இருக்கும் என்பதால், அதை கண்டுபிடிப்பது சுலபம் என்று இதற்கான காரணத்தை கூறி சீன சுகாதாரத்துறை அதிகாரிகள் மல துவாரத்தின் மூலம் கொரோனா வைரஸை துல்லியமாக கண்டுபிடிக்கிறார்கள்.

2006 ல் முடிவு

2006 ல் முடிவு

இது பற்றி சீனாவின் சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறுகையில், '''கடந்த 2006ம் ஆண்டில் சார்ஸ் தொற்று ஏற்பட்டபோது இந்த மலவாய் பரிசோதனை முறை கடைபிடிக்கப்பட்டபோது நல்ல பலன் கிடைத்தது. அதனால், மீண்டும் மலத் துவார பரிசோதனையை பயன்படுத்த முடிவு செய்துள்ளோம்.

சீனர்கள் கடும் எதிர்ப்பு

சீனர்கள் கடும் எதிர்ப்பு

மற்ற பரிசோதனைகளை விட இதில் துல்லியமான முடிவுகள் கிடைக்கும். வெளிநாடுகளில் இருந்து சீனா திரும்புகிறவர்களுக்கும், கொரோனா அதிகம் பரவும் அபாயகரமான பகுதிகளில் வசிப்பவர்களுக்கும் இந்த பரிசோதனை நடத்தப்படும்,'' என்றார்கள் இதற்கு, சீனர்கள் இடையே கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
இந்த பரிசோதனையால் அசவுகரியமான நிலை ஏற்படுவதாக எதிர்ப்பு கிளம்பி உள்ளது

வெற்றிகரமாக பரிசோதனை

வெற்றிகரமாக பரிசோதனை

எனினும் சீன மலவாய் பரிசோதனையில் உறுதியாக உள்ளது. கொரோனா மீண்டும் பரவுவதைத் தடுக்க சீனா இத்தகைய உச்சபட்ச நடவடிக்கைக்கு தயராக உள்ளது வெளிநாட்டில் இருந்து வருபவர்களை நீண்ட காலத்திற்குத் தனிமைப்படுத்துகிறது மற்றும் கட்டாய சோதனை முறைகளை அமல்படுத்தி வருகிறது. இந்த அணுகுமுறை பெரும்பாலும் வெற்றிகரமாக இருப்பதாக கூறுகிறது. உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட சீனாவில் அதிக எண்ணிக்கையிலான பாதிப்பு மற்றும் இறப்பு எண்ணிக்கையைத் தவிர்க்க கடுமையாக நடவடிக்கையால் மட்டுமே சாத்தியப்படுத்த முடிந்ததாக சீனா நம்புகிறது. சந்திர புத்தாண்டு கொண்டாட்டம் தொடங்க உள்ள நிலையில் கடுமையாக சோதனைகள் மூலம் பரவலை தடுக்க பணிகளை சீன அரசு முடுக்கிவிட்டுள்ளது.

English summary
As Chinese authorities struggle to contain rising Covid-19 infections ahead of the Lunar New Year celebrations, Beijing has introduced anal swabs as a new type of coronavirus test that could detect the virus more accurately.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X