For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சீன அதிபராக ஜி ஜிங்பிங் ஒருமனதாக மீண்டும் தேர்வு! ஊழல் ஒழிப்பு 'சூறாவளி' வாங் குயிஷான் துணை அதிபர்

By Veera Kumar
Google Oneindia Tamil News

Recommended Video

    சீன அதிபராக மீண்டும் ஜி ஜிங்பிங் தேர்வு- வீடியோ

    பீஜிங்: சீனாவின் அதிபராக ஜி ஜிங்பிங் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற தேர்வு நடைமுறையில் அவருக்கு அனைத்து உறுப்பினர்களும் ஒரு மனதாக ஆதரவு தெரிவித்து மீண்டும் அதிபராக தேர்ந்தெடுத்தனர்.

    சீனாவில், கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த, ஜி ஜிங்பிங் அதிபராக உள்ளார். சீனாவில் ஒரே நபர் தொடர்ந்து இரு முறைக்கு மேல் அதிபர் பதவி வகிக்கக் கூடாது என சட்டம் இருந்தது.

    இந்த நிலையில், அதிபர் பதவி என இருக்கும் கால அளவை ரத்து செய்யும்படி, சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய கமிட்டி கோரிக்கை வைத்ததையடுத்து, கட்சியின் உயர்மட்ட குழு கூடி அதை ஏற்று கொண்டது. இததொடர்ந்து, அதிபர் பதவிக்கு காலவரையரையை ரத்து செய்யும் முடிவுக்கு நாடாளுமன்றமும் ஒப்புதல் அளித்தது

    அதிபர் பதவியில் தொடருவார்

    அதிபர் பதவியில் தொடருவார்

    எனவே, ஜி ஜிங்பிங், 2023க்கு பின்னும் தொடர்ந்து அதிபர் பதவியில் தொடர முடியும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து இன்று முறைப்படி மீண்டும் சீன அதிபராக ஜி ஜிங்பிங் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    கட்சி தேர்ந்தெடுப்பு

    கட்சி தேர்ந்தெடுப்பு

    தலைநகர் பீஜிங்கில் நடந்த கட்சி மாநாட்டில், இரண்டாவது முறையாக ஜி ஜிங்பிங் அதிபர் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு ஆதரவாக 2,958 ஓட்டுகளும், எதிராக 2 வாக்குகளும் கிடைத்தன. இந்த மாநாட்டில் துணை அதிபர் வேட்பாளராக வாங் குயிஷான் தேர்வு செய்யப்பட்டார்.

    ஒரு மனதாக தேர்வு

    ஒரு மனதாக தேர்வு

    இந்த நிலையில், சீன நாடாளுமன்றத்தில் இன்று வாக்கெடுப்பு நடைபெற்றது. இதில் ஜி ஜிங்பிங் அதிபராக மொத்தமுள்ள 2970 உறுப்பினர்களும் ஒருமித்து வாக்களித்தனர். எனவே ஒருமனதாக ஜி ஜிங்பிங் மீண்டும் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதேநேரம் வாங் குயிஷானுக்கு எதிராக ஒரு உறுப்பினர் வாக்களித்தார், எனவே, அவருக்கு 2,969 வாக்குகள் கிடைத்தன.

    ஊழல் ஒழிப்பாளர்

    ஊழல் ஒழிப்பாளர்

    வாங் குயிஷான், அதிபர் ஜி ஜிங்பிங்கிற்கு நெருக்கமானவர். 2017 வரை, சீனாவின் ஊழல் ஒழிப்பு துறையில் பணியாற்றியவர். அவரது பதவிக்காலத்தில், சுமார் 15 லட்சம் அரசு அதிகாரிகள் ஊழல் குற்றச்சாட்டுக்கு உட்படுத்தப்பட்டனர். சுமார் 100 அமைச்சர்களும் ஊழலுக்காக சிக்கி தண்டனை அனுபவித்தனர். சீனாவின் சமீபத்திய வரலாற்றில் ஊழலுக்கு எதிராக எடுக்கப்பட்ட மிகப்பெரிய நடவடிக்கை அதுவாகும். இந்த நிலையில்தான், லி யுவான்சாவுக்கு பதிலாக, வாங் குயிஷானை துணை அதிபராக உயர்த்தியுள்ளார் ஜி ஜிங்பிங்.

    English summary
    Xi Jinping was re-elected as the Chinese President unanimously with all 2,970 votes in his favor at the National People’s Congress on Saturday.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X