Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

'ஆப்கன் மீண்டும் பயங்கரவாதிகள் கூடாரம் ஆகக்கூடாது.. பாகிஸ்தானும் நாங்களும் உதவுவோம்..' சீனா தடாலடி

Subscribe to Oneindia Tamil

பெய்ஜிங்: ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சிக்கு அமைத்துள்ள நிலையில், ஆப்கன் மீண்டும் பயங்கரவாதிகளின் கூடாரம் ஆகிவிடக்கூடாது என்றும் பயங்கரவாதிகளை ஒடுக்கும் நடவடிக்கைகளைத் தாலிபான்கள் எடுக்க வேண்டும் என்றும் சீனா தெரிவித்துள்ளது.

கடந்த 20 ஆண்டுகளாக ஆப்கானிஸ்தானில் அமெரிக்கப் படைகள் இருந்த வரை தாலிபான்கள் அமைதி காத்து வந்தனர். ஆனால், அமெரிக்கப் படைகள் வெளியேறத் தொடங்கியதுமே தாலிபான்கள் தங்கள் தாக்குதலைத் தீவிரப்படுத்தினர்.

இதனால் வெறும் சில வாரங்களிலேயே ஒட்டுமொத்த தேசத்தையே தாலிபான்கள் கைப்பற்றினர். ஆப்கன் அதிபராக இருந்த அஸ்ரப் கானி இப்போது ஐக்கிய அமீரகத்தில் தஞ்சம் புகுந்துள்ளார்.

அண்டை நாடுகள்

அண்டை நாடுகள்

புதிதாக அமைந்துள்ள தாலிபான்களின் ஆட்சிக்கு பல்வேறு நாடுகளும் வெளிப்படையாக ஆதரவு அளித்துள்ளன. இந்தியா உள்ளிட்ட சில நாடுகள் இந்த விஷயத்தில் வெளிப்படையாக எந்தவொரு முடிவையும் இதுவரை அறிவிக்கவில்லை. அதேநேரம் ஆப்கனில் முக்கிய அண்டை நாடுகளான சீனாவும், பாகிஸ்தானும் தாலிபான்களுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்துள்ளன. புதிதாக அங்கு அமைந்துள்ள ஆட்சியைச் சீனா தொடர்ந்து தீவிரமாக கண்காணித்து வருகிறது.

ஐநா அறிக்கை

ஐநா அறிக்கை

சமீபத்தில் வெளியான ஐநா அறிக்கையில், கிழக்கு தர்கிஸ்தான் இஸ்லாமிய இயக்கத்தை (ETIM) சேர்ந்த நூற்றுக்கணக்கான பயங்கரவாதிகள் ஆப்கானிஸ்தானில் ஊடுருவி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐநாவின் இந்த அறிக்கை குறித்து சீனா கவலை தெரிவித்துள்ளது. பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையைத் தாலிபான்கள் எடுக்கத் தொடங்க வேண்டும் என்றும் சீனா வலியுறுத்தியுள்ளது.

உய்கூர் முஸ்லீம் தீவிரவாத குழுக்கள்

உய்கூர் முஸ்லீம் தீவிரவாத குழுக்கள்

முன்னதாக கடந்த சில வாரங்களுக்கு முன் சீனா சென்றிருந்த தாலிபான்கள் அந்நாட்டின் முக்கிய அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர். அப்போது சீன அரசுக்கு எதிராகப் புரட்சி செய்து வரும் உய்கூர் முஸ்லீம் தீவிரவாத குழுவை ஆப்கன் நாட்டிற்குள் இருந்து இயக்க அனுமதிக்க மாட்டோம் என்று தாலிபான்கள் உறுதியளித்தது. இருந்தாலும்கூட, இந்த விஷயத்தில் சீனா மிகவும் எச்சரிக்கையுடனே உள்ளது.

பாகிஸ்தானுடன் ஆலோசனை

பாகிஸ்தானுடன் ஆலோசனை

சீனா வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் இ கடந்த சில நாட்களுக்கு முன் பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் ஷான் மஹ்மூத் குரேஷியுடன் ஆப்கன் விவகாரம் குறித்து தொலைப்பேசியில் ஆலோசனை நடத்தினார். அண்டை நாடுகள் என்ற அடிப்படையில் ஆப்கானிஸ்தானுடன் சீனாவுக்கும் பாகிஸ்தானும் இணைந்து செயல்பட வேண்டும் என்றும் ஆப்கனை மீண்டும் கட்டமைப்பதில் உறுதுணையாக இருக்க வேண்டும் என்றும் சீன வெளியுறவுத் துறை அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்

பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கை

பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கை

இது குறித்து சீனா வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஆப்கான் ஒற்றுமையை வலுப்படுத்த வேண்டும். அங்குள்ள நிலைமைக்கு ஏற்ப மக்கள் ஆதரவு அளிக்கும் வகையிலான ஒரு அரசியல் கட்டமைப்பை நிறுவ உதவ வேண்டும். மேலும், பயங்கரவாதிகளுக்கு எதிராகத் தாலிபான்கள் நடவடிக்கை எடுப்பதற்கு நாம் உதவ வேண்டும். ஆப்கானிஸ்தான் மீண்டும் பயங்கரவாதிகள் ஒன்றுகூடும் ஒரு கூடாரம் ஆகிவிடக்கூடாது" எனச் சீன வெளியுறவுத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். இதற்குப் பாகிஸ்தான் தரப்பிலும் ஒப்புக்கொள்ளப்பட்டதாகச் சீனா அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Recommended Video

    Afghan-ல் 2 Indian Consulates-களை சூறையாடிய தாலிபான் | Oneindia Tamil
    உள்நாட்டுப் போர்

    உள்நாட்டுப் போர்

    ஆப்கனில் இருந்து வரும் அகதிகளுக்கு ஆதரவு அளிப்பீர்களா என்ற கேள்விக்குப் பதிலளித்த சீனா வெளியுறவுத் துறை செய்தித்தொடர்பாளர் ஹுவா சுன்யிங், "ஆப்கானிஸ்தான் பிரச்சினையில் சீனாவின் நிலைப்பாடு தெளிவானது. ஆப்கானிஸ்தான் அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கிய ஒரு அரசாக மாற வேண்டும். தற்போது இருக்கும் சூழலில் அங்குள்ள அனைத்து தரப்பு மக்களுக்கும் உதவ வேண்டும் என்பதே சர்வதேச சமூகத்திற்கு நோக்கம். மனித உரிமை மீறல், தேவையற்ற உயிரிழப்புகள், அதிகளவிலான அகதிகள், புதியதொரு உள்நாட்டுப் போர் ஆகியவற்றைத் தடுப்பதே இப்போது எங்களது நோக்கம். அதற்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்வோம்" என்றார்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+