எனக்கு “எண்டே” கிடையாது.. ஹாங்காங்கை பிடிச்சுட்டோம்.. அடுத்த “எய்ம்” தைவான் - ஜி ஜின்பிங் அதிரடி
பெய்ஜிங்: சீன ராணுவம் அதிபரை சிறைபிடித்துவிட்டதாக கடந்த சில நாட்களுக்கு முன் செய்தி வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் மூன்றாவது முறையாக ஜி ஜின்பிங் இன்று சீன அதிபர் பதவியை தொடர உள்ளார்.
சீனாவில் பல ஆண்டுகளாக அதிகாரத்தை கையில் வைத்திருக்கும் கம்யூனிஸ்டு கட்சியின் மாநாடு 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். அந்த வகையில் இன்று சீனாவில் கம்யூனிஸ்டு கட்சியின் மாநாடு நடைபெற இருக்கிறது.
தொழில்நுட்பம், தொழில் வளர்ச்சியில் அமெரிக்காவுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்து வரும் சீனாவில் மற்ற ஜனநாயக நாடுகளைபோல் தேர்தல் நடத்தி ஆட்சியாளர்கள் தேர்வு செய்யப்படுவது இல்லை. இப்படி 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறக்கூடிய கம்யூனிஸ்டு கட்சியின் மாநாட்டிலேயே புதிய அதிபர் யார் என்ற அறிவிப்பு வெளியாகும்.

சீன அதிபர்
இந்த நிலையில் கடந்த 2 முறை அதிபராக தேர்வு செய்யப்பட்ட ஜி ஜின்பிங்கே 3 வது முறையாக அதிபராக சீன கம்யூனிஸ்டு கட்சி மாநாட்டில் தேர்வு செய்யப்பட இருக்கிறார். சீனாவில் ஒருவர் 2 முறைதான் அதிபராக பதவி வகிக்க முடியும் என்ற சட்டம் இருந்து வந்தது. எந்த தலைவரும் சீனாவில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக அதிபராக பதவி வகித்தது இல்லை,

ஜின்பிங்கின் தந்திரம்
ஆனால், கடந்த 2017 ஆம் ஆண்டு சீனாவின் அதிபராக 2 வது முறையாக தேர்வு செய்யப்பட்ட ஜி ஜின்பிங் 2018 ஆம் ஆண்டிலேயே அந்த சட்டத்தை நீக்கினார். எனவே இன்று மூன்றாவது முறையாக அதிபராக பதவியேற்கப்போகும் ஜி ஜின்பிங் சீன கம்யூனிஸ்டு அரசின் வரலாற்றில் 10 ஆண்டுகளுக்கு மேல் அதிபராக பதவியேற்ற முதல் நபர் என்ற பெருமையை பெறுகிறார்.

கொரோனா
69 வயதாகும் ஜி ஜின்பிங் அதிபரான பிறகு சீனா உலக அரங்கில் மாபெரும் வல்லரசாக உருவெடுத்ததாக கூறப்படுகிறது. ஆனால் கடந்த 2019 ஆம் ஆண்டு சீனாவிலிருந்து பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் தொற்றால் ஜி ஜின்பிங் மீது சர்வதேச அரங்கில் அவப்பெயர் ஏற்பட்டது. ஆனால், முதல் அலைக்கு பிறகு சீனாவும் கொரோனாவை ஓரளவு கட்டுப்படுத்திவிட்டது.

வதந்தி
கடந்த சில நாட்களுக்கு முன் ஜி ஜின்பிங்கை சீன ராணுவம் கைது செய்துவிட்டதாக தகவல் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால், அடுத்த சில நாட்களிலேயே அது வதந்தி என்பது தெரியவந்துள்ளது. இந்த குழப்பத்துக்கு இன்று முதல் முறையாக பொதுமேடையில் தோன்றினார் ஜி ஜின்பிங்.

ஹாங்காங்கை
இந்த மாநாட்டில் பேசிய அவர், ஹாங்காங்கின் முழு அதிகாரத்தையும் சீனா கைப்பற்றிவிட்டது. விரைவில் தைவானையும் முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவோம் என்றார். தைவான் பிரச்சனையை சீன மக்கள் சரி செய்வோம். பருவநிலை மாற்றத்துக்கு எதிரான உலக நாடுகளின் முயற்சியில் சீனாவும் அங்கம் வகிக்கும்." என்றார்.
-
ஏசியை 18 டிகிரியில் வைத்தால் கரண்ட் பில்லில் இவ்வளவு மாற்றமா?.. தமிழக மின்சார வாரியம் கணக்கு இதோ -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன் -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
மகளிரை கவர சூப்பர் வாக்குறுதி.. ரூ.5 லட்சம் வரை சுய உதவி குழு பெண்களுக்கு கடன்.. ஸ்டாலின் அறிவிப்பு -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை!












Click it and Unblock the Notifications