For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இந்தியாவுக்கு வார்னிங்.. ஏவுகணை இடைமறிப்பு தொழில்நுட்பமும் ரெடி.. அதிர வைக்கும் சீனாவின் திட்டம்!

Google Oneindia Tamil News

பெய்ஜிங்: ஏவுகணை இடைமறிப்பு தொழில்நுட்பத்தை வெற்றிகரமாக சோதனை செய்துள்ளதாக சீனா அறிவித்துள்ளது.

எதிரி நாட்டு ஏவுகணைகள் தாக்க வந்தால், அதை தடுத்து நிறுத்தி இடைமறித்து தாக்கி அழிக்கும் தொழில்நுட்பத்தை சீனா இதன் மூலம் வெற்றிகரமாக பரிசோதித்துள்ளது.

அமெரிக்காவிற்கு ஏவுகணை இடைமறிப்பு தொழில்நுட்பம் கொண்ட இரண்டாவது நாடு என்று பெருமையை சீனா பெற்றுள்ளது.

இதனிடையே எந்த ஒரு நாட்டையும் குறிவைத்த நாங்கள் இடைமறிப்பு ஏவுகணைகளை பயன்படுத்த மாட்டோம் என்றும், தற்காப்புக்காக மட்டுமே பயன்படுத்துவோம் என்றும் சீனாவின் பாதுகாப்பு அமைச்சகம் கூறியுள்ளது.

எப்போது சோதனை

எப்போது சோதனை

ரஷ்யாவுடனான முக்கிய அணு ஆயுதக் கட்டுப்பாட்டு ஒப்பந்தத்தை நீட்டிக்க அமெரிக்காவின் பிடன் நிர்வாகம் ஒப்புதல் அளித்தது. இதன்படி அணுசக்தி அபாயக் குறைப்பு மற்றும் ஆயுதக் கட்டுப்பாடு குறித்து சீனா உறுதிமொழி அளித்தது. அந்தவாக்குறுதி அளித்த ஒரே நாளில் சீன ஏவுகணை இடைமறிப்பு தொழில்நுடபத்தை வெற்றிகரமாக பரிசோதித்துள்ளது. இந்த பயிற்சி குறித்த தொழில்நுட்ப விவரங்களை சீனா இதுவரை வெளியிடப்படவில்லை.

இந்தியாவிற்கு வார்னிங்

இந்தியாவிற்கு வார்னிங்

இந்த சோதனை எந்தவொரு குறிப்பிட்ட நாட்டையும் குறிவைக்கவில்லை என்று சீன பாதுகாப்பு அமைச்சகம் கூறியிருந்தாலும், பி.எல்.ஏ-க்கு(சீன மக்கள் ராணுவததிற்கு நெருக்கமான ஒரு வட்டாரங்கள் கூறுகையில், இந்த மிட்கோர்ஸ் பாலிஸ்டிக் எதிர்ப்பு ஏவுகணை சோதனை என்பது நம்மை நோக்கி வரும் அணு ஆயுத ஏவுகணைகளை தடுத்து நிறுத்தக்கூடியது. இது இந்தியாவுக்கு ஒரு எச்சரிக்கையாக கூட கருதலாம் என்றார்கள்.

இந்தியா திட்டம்

இந்தியா திட்டம்

இந்த ஆண்டு அக்னி-வி என்ற தனது மிக நீண்ட, மிக சக்திவாய்ந்த அணுசக்தி திறன் கொண்ட ஏவுகணையை நிலைநிறுத்த இந்தியா திட்டமிட்டுள்ளதாக பாதுகாப்பு ஆதாரங்களை மேற்கோள் காட்டி பிரபல ஆங்கில நாளிதழில் ஜனவரி மாதம் செய்தி வெளியானது.. சீனா-இந்தியா எல்லையில் ஏற்பட்ட மோதல்களை அடுத்து இந்தியா இந்த முடிவை எடுக்க உள்ளதாக செய்திகள் வெளியாகின.

ரெடியாகும் சீனா

ரெடியாகும் சீனா

இதன்படி அக்னி-வி ஏவுகளை 5,000 கி.மீ. தூரம் சென்று தாக்கும் வல்லமை கொண்டதாகும். தற்போது சீனா கண்டறித்துள்ள ஏவுணை இடைமறிப்பு தொழில்நுட்பம்
என்பது சீனா நீண்ட காலமாக ஆராய்ச்சி தொழில்நுட்பமாகும். நேற்று சோதனை நடத்தியன் மூலம் இந்தியாவை எச்சரிப்பதை நோக்கமாகக் கொண்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. சீனா இந்தியாவை அச்சுறுத்தும் யுக்தியாக நேற்று சோதித்து இருக்கலாம் என்கிறார்கள். இந்த பிரச்சினையின் தீவிரமாக சீன ராணுவட்டாரத்தினர் அதன் பெயரை குறிப்பிடவில்லை.

English summary
China tested its capability of knocking out an incoming missile during midflight on Thursday, with the defence ministry declaring the exercise a success. It is the second country to develop the technology after the US.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X