For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சீனாவை மிரட்டும் டைபூன் இன் ஃபா - விமானம், ரயில், கப்பல் போக்குவரத்து ரத்து

கடலில் மையம் கொண்டுள்ள டைபூன் இன் ஃபா புயல் இன்று மாலையில் ஜெஜியாங் பகுதியில் தாக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளதால் ரயில், கப்பல், விமான போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது.

Google Oneindia Tamil News

ஷாங்காய்: சீனக்கடலில் மையம் கொண்டுள்ள டைபூன் இன் ஃபா புயல் இன்று மாலையில் ஜெஜியாங் பகுதியில் தாக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்தப் புயல் கரையைக் கடக்கும் போது காற்றின் வேகம் 155 முதல் 191 கி.மீ வரையில் வீசக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளதால் ரயில், கப்பல், விமான போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது.

மத்திய சீனா பகுதியில் பெய்த வரலாறு காணாத மழையின் காரணமாக அந்நாடு மிகப்பெரிய பாதிப்புகளை எதிர்கொண்டுள்ளது. ஹெனான் மாகாணத்தில் பெய்த வரலாறு காணாத மழையின் காரணமாக 58 பேர் வரை மரணமடைந்தனர்.

ஆகஸ்ட் 2-ல் சென்னை வரும் குடியரசுத் தலைவர்.. சிறப்பான வரவேற்பு.. தீவிர பாதுகாப்பு.. இறையன்பு ஆலோசனை!ஆகஸ்ட் 2-ல் சென்னை வரும் குடியரசுத் தலைவர்.. சிறப்பான வரவேற்பு.. தீவிர பாதுகாப்பு.. இறையன்பு ஆலோசனை!

மழை வெள்ளத்தில் சிக்கி நூற்றுக்கணக்கானோர் மாயமானார்கள். லட்சக்கணக்கான மக்கள் தங்கள் வாழ்வாதாரங்களை இழந்து பாதிக்கப்பட்டனர்.

சீனாவை மிரட்டும் புயல்

சீனாவை மிரட்டும் புயல்

இந்தநிலையில், கடலில் மையம் கொண்டுள்ள டைபூன் இன் ஃபா புயல் இன்று மாலையில் ஜெஜியாங் பகுதியில் தாக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்தப் புயலின் வேகம் 155 முதல் 191 கி.மீ வரையில் இருக்கும்என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொட்டும் கனமழை

கொட்டும் கனமழை

கடலில் மையம் கொண்டுள்ள புயல் காரணமாக அலைகள் உயர்ந்துவருகின்றன. பல பகுதிகளில் கடும் மழை பெய்துவருகிறது. இந்த மழையால் எந்த உயிரிழப்பும் கணக்கிடப்படவில்லை. இந்த புயல் மற்றும் மழையின் காரணமாக நிலச்சரிவு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ரயில்கள் ரத்து

ரயில்கள் ரத்து

புயல் எச்சரிக்கையின் காணமாக சிஜியாங் பகுதியில் பள்ளிகள், மார்கெட், கடைகள் உள்ளிட்டவைகளை அடைப்பதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தேவைப்பட்டால் சாலைப் போக்குவரத்தும் மூடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த டைபூன் புயலின் காரணமாக இந்தப் பகுதியில் இயக்கப்படவிருந்த 100க்கும் மேற்பட்ட ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

விமான சேவைகள் ரத்து

விமான சேவைகள் ரத்து

சிஜியாங் மாகாணத்தின் தலைநகரான ஹாங்ஷூவா விமான நிலையத்தில் 90 சதவிகிதத்துக்கும் அதிகமான விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. கூடுதலாக மேலும் பல விமானங்களுக்கும் ரத்து செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் பகுதியிலுள்ள துறைமுகத்தில் சரக்கு மற்றும் பயணக் கப்பல்கள் நிறுத்தப்பட்டுள்ளன. இந்தப் பகுதியிலிருந்து கப்பல் வேறு இடத்துக்கு நகர்த்தப்பட்டுள்ளன.

அருங்காட்சியகம் மூடல்

அருங்காட்சியகம் மூடல்


புயல் மையம் கொண்டுள்ளதால் துறை முகப்பகுதிகளில் உச்சபட்ச எச்சரிக்கையான மூன்றாம் நிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பொது இடங்களில் மக்கள் கூடுவதைத் தவிர்ப்பதற்காக பூங்காங்கள், அருங்காட்சியகங்கள் மூடப்பட்டுள்ளன.

English summary
Typhoon In-fa centered in the China Sea, is forecast to hits east coast region this evening. Train, shipping and air services have been canceled as winds of 155 to 191 kmph were reported as the storm crossed the coast.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X