For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

விஸ்வரூபம் எடுக்கும் தைவான் பிரச்சனை.. இந்தியாவிடம் பேசிய அமெரிக்கா.. கோபமாக வெளியேறிய சீனா

Google Oneindia Tamil News

புனோம் பென்: நேற்று கம்போடியாவில் நடைபெற்ற ஆசியான் என அழைக்கப்படும் தென்கிழக்கு ஆசிய நாடுகளின் (ASEAN) வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தில் இலங்கை மற்றும் தைவான் பிரச்னை குறித்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் ஆகியோர் கலந்துரையாடினர்.

சமீபத்தில் சீனா கட்டுப்பாட்டில் உள்ள தைவானுக்கு அமெரிக்கா தரப்பிலிருந்து அந்நாட்டு நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலுச்சி சென்றிருந்தது அமெரிக்க-சீனா இடையே பதற்றத்தை உருவாக்கியுள்ள நிலையில் இந்த கூட்டம் நடத்தப்பட்டுள்ளது.

இதில் பங்கேற்க வந்த சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி, அமெரிக்காவின் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்து கூட்டம் தொடங்குவதற்கு முன்னரே வெளியேறினார்.

400 பணியாளர்கள், ஏவுகணை-செயற்கைகோள் கண்காணிப்பு கருவிகளுடன் இலங்கையை நோக்கி சீனா உளவு கப்பல் பயணம் 400 பணியாளர்கள், ஏவுகணை-செயற்கைகோள் கண்காணிப்பு கருவிகளுடன் இலங்கையை நோக்கி சீனா உளவு கப்பல் பயணம்

 வெளிநடப்பு

வெளிநடப்பு

கம்போடியா தலைநகர் புனோம் பென்னில் தென்கிழக்கு ஆசிய நாடுகளின் (ASEAN) வெளியுறவு அமைச்சர்களுக்கான கூட்டம் ஒன்று நேற்று நடைபெற்றது. தைவான் விவகாரத்தில் அமெரிக்கா-சீன உரசல்கள் அதிகரித்துள்ள இந்த சூழலில் இக்கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்தின் போது இரவு விருந்து நடத்தப்பட்டது. ஆனால் இதில் சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி பங்கேற்காமல் திடீரென வெளியேறி காரில் சென்றுவிட்டதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் தெரிவித்துள்ளன.

 கலந்தாலோசனை

கலந்தாலோசனை

இந்த கூட்டத்தில் இந்தியா சார்பில் பங்கேற்றிருந்த வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், "பயங்கரவாத அச்சுறுத்தல், உக்ரைன் மற்றும் மியான்மரில் நடந்து வரும் ராணுவ நடவடிக்கைகளுக்கு எதிராக மற்ற நாடுகளுடன் உறுதியாக கைகோர்ப்பதாக" தெரிவித்தார். இந்த நாடுகள் கொரோனா தொற்று பாதிப்பு எதிர்ப்பு, இணைய பாதுகாப்பு உள்ளிட்ட அம்சங்களில் இதே போன்று இணைந்து செயல்படுவதாக உறுதி எடுத்திருக்கின்றன. இந்த சந்திப்பில் அமெரிக்காவுக்கு ஆதரவாக இந்தியா மற்றும் ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் பங்கேற்றுள்ளன. இதில் இந்தோ-பசிபிக் பிராந்தியத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சி தொடர்பாக கலந்தாலோசனை நடைபெற்றது.

ஐநா கடல் சட்டம்

ஐநா கடல் சட்டம்

அதேபோல சீனாவுக்கு எதிராக சில அம்சங்களும் முன்வைக்கப்பட்டன. குறிப்பாக, தென் சீனக் கடல் பிராந்தியத்தில் ஐ.நா.வின் கடல் சட்டத்தின் (UNCLOS) கொள்கைகளை பின்பற்ற வேண்டியதன் அவசியம் வலியுறுத்தப்பட்டது. அதவது ஐநாவின் இந்த கடல் சட்டத்தின்படி ஒரு நாட்டின் தரை பரப்பிலிருந்து சுமார் 12 நாட்கள் மைல் தொலைவில் உள்ள கடல் பரப்புகள் அந்த நாட்டின் வான்வழி போக்குவரத்து இதர மீன்பிடி உரிமை கொண்ட நிலப்பரப்பாகும். இது அதிகபட்சமாக 24 மைல் நாட்டிக்கல் தொலைவு வரை நீண்டிருக்கும். இதற்கும் அப்பால் உள்ள 200 மைல் நாட்டிக்கல் தொலைவானது சிறப்பு பொருளாதார மண்டலமாகும். இவ்வாறு ஐநா கடற்பரப்பை பிரித்துள்ளது.

சீனாவை வற்புறுத்தும் அமெரிக்கா

சீனாவை வற்புறுத்தும் அமெரிக்கா

இதை தென் சீனக் கடல் பிராந்தியத்தில் அமல்படுத்த வேண்டும் என அமெரிக்கா எதிர்பார்க்கிறது. ஆனால் சீனா தைவானை சொந்தம் கொண்டாடுவதால் தைவான் கடற்கரையிலிருந்து இந்த அளவீடுகளை மேற்கொண்டுள்ளது. அதேபோல இந்த கூட்டத்தில் உக்ரைன் மீது ரஷ்யா மேற்கொண்ட தாக்குதல் குறித்து இந்தியா ரஷ்யாவுக்கு கண்டனம் தெரிவிக்க வேண்டும் என அமெரிக்கா எதிர்பார்த்திருந்தது. ஆனால் இந்தியா அப்படி எதுவும் செய்யவில்லை. இலங்கை பொருளாதார பிரச்னைகள் குறித்த அளவில், அந்நாடு ஜனநாயக வழியில் இந்த பாதிப்பிலிருந்து மீண்டு வர வேண்டும் என அமெரிக்கா எதிர்பார்ப்பாதாக தெரிவித்துள்ளது.

English summary
The ASEAN is considered one of the most influential groupings in the region. India and several other countries, including the US, China, Japan and Australia, are its dialogue partners
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X