'உரிய விலை கொடுக்க வேண்டியிருக்கும்'.. பெய்ஜிங் ஒலிம்பிக்கை புறக்கணிக்கும் நாடுகளுக்கு சீனா வார்னிங்
பெய்ஜிங்: 2022 பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக்கைப் புறக்கணிக்கப்போவதாக பல்வேறு நாடுகளும் அறிவித்து வரும் நிலையில், செய்யும் தவறுக்கு நிச்சயம் உரிய விலை கொடுக்க வேண்டியிருக்கும் என்று சீனா எச்சரித்தது.
Recommended Video
குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் அடுத்தாண்டு சீன தலைநகர் பெய்ஜிங் நகரில் நடைபெறுகிறது. அடுத்த ஆண்டு பிப்ரவரி 4 முதல் 20ஆம் தேதி வரை இந்த போட்டிகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளன.
அடுத்த ஆண்டுக்குள் கொரோனா குறையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது ஓமிக்ரான் கண்டறியப்பட்டுள்ளது. இருப்பினும், கொரோனா பரவலுக்கு மத்தியில் போட்டிகளை நடத்த அனைத்து நடவடிக்கைகளையும் சீனா எடுத்து வருகிறது.

உலக நாடுகள் அறிவிப்பு
இந்தச் சூழலில் சீனாவில் நடைபெறும் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளைப் புறக்கணிக்கவுள்ளதாகக் கடந்த சில நாட்களுக்கு முன் அமெரிக்கா அறிவித்தது. சீனாவின் சின்ஜியாங் பகுதியில் உய்குர் முஸ்லிம்களுக்கு எதிரான இனப்படுகொலை சீனா ஈடுபட்டுள்ளதாகக் குற்றஞ்சாட்டிய அமெரிக்கா, இதன் காரணமாகக் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளைப் புறக்கணிக்கவுள்ளதாக அறிவித்தது. அமெரிக்காவைத் தொடர்ந்து ஆஸ்திரேலியா, பிரிட்டன் மற்றும் கனடா நாடுகளும் புறக்கணிப்பதாக அறிவித்துள்ளன.

சீனா பதிலடி
அதாவது இந்த நாடுகள் பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கத் தனது தூதரக அதிகாரிகளை அனுப்பாது. இருப்பினும், வீரர்கள் எப்போதும் போல ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கலாம் இந்நிலையில், இதற்குச் சீன அரசு பதிலடி கொடுத்துள்ளது. இது தொடர்பாகச் சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் வாங் வென்பின் கூறுகையில், "அமெரிக்கா, ஆஸ்திரேலியா, பிரிட்டன் மற்றும் கனடா நாடுகள் தங்கள் அரசியல் காரணங்களுக்காக ஒலிம்பிக் போட்டிகளைப் பயன்படுத்துகின்றன. இந்த நாடுகள் செய்யும் தவறுக்கு நிச்சயம் உரிய விலை கொடுக்க வேண்டியிருக்கும்" என்றார்.

மனித உரிமை அமைப்புகள்
அதேநேரம் சர்வதேச மனித உரிமை அமைப்புகள் ஒலிம்பிக் போட்டிகளைப் புறக்கணிக்கும் முடிவுகளுக்கு வரவேற்பைத் தெரிவித்துள்ளன. இது குறித்து மனித உரிமைகள் அமைப்பின் சீன இயக்குநர் சோஃபி ரிச்சர்ட்சன் கூறுகையில், "உய்குர் மற்றும் பிற துருக்கிய சமூகங்களைக் குறிவைத்து சீன அரசு மோசமான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. சீனாவின் நடவடிக்கைகளுக்குச் சவால் விடுக்கும் வகையில் உலக நாடுகளின் இந்த முடிவு அமைந்துள்ளது" என்றார்.

சீனா விளக்கம்
சின்ஜியாங் பகுதியில் உள்ள சிறப்பு முகாம்களில் குறைந்தபட்சம் 10 லட்சம் உய்குர் உட்பட பிற சிறுபான்மை இன முஸ்லீம்கள் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த சிறப்பு முகாம்களில் பெண்களுக்கு வலுக்கட்டாயமாகக் கருத்தடை ஆப்ரேசன்கள் செய்யப்படுவதாகவும் வேலை செய்யக் கட்டாயப்படுத்தப்படுவதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இருப்பினும், இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்த சீனா இஸ்லாமிய தீவிரவாதத்தை நோக்கி இளைஞர்கள் சென்றுவிடக் கூடாது என்பதற்காகவே இதுபோன்ற பயிற்சி மையங்களை நடத்தி வருவதாக விளக்கம் அளித்துள்ளது.

அமெரிக்கா, பிரிட்டன்
பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டிகளை புறக்கணிக்கப் போவதாக அறிவித்த 4 நாடுகளும் கடந்த சில ஆண்டுகளாகவே சீனா உடன் நல்ல ஒரு உறவைக் கொண்டிருக்கவில்லை. பிரிட்டன் ஹாங்காங்கில் சீனாவின் அடக்குமுறைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தது. அதேபோல சீனாவின் முக்கிய டெக் நிறுவனமான ஹூவாய் நிறுவனத்தின் 5G பிராட்பேண்ட் வெளியீட்டில் தடுத்த அமெரிக்கா, ஹூவாய் நிறுவனம் அமெரிக்கர்கள் தரவுகளைச் சேகரிப்பதாகக் குற்றஞ்சாட்டியது.

கனடா, ஆஸ்திரேலியா
அதேபோல ஹூவாய் நிறுவனத்தின் நிர்வாகி Meng Wanzhou என்பவரை அமெரிக்க கேட்டுக் கொண்டதன்படி கடந்த டிசம்பர் 2018இல் கனடா கைது செய்தது. இதன் பிறகு இரண்டு கனடா நாட்டின் பிரஜைகளை சீனா தடுத்தது. இது இருநாடுகளுக்கும் இடையேயான சிக்கலை அதிகப்படுத்தியது. அதேபோல ஹூவாய் நிறுவனத்திற்கு ஆஸ்திரேலியா விதித்த கட்டுப்பாடுகளைத் தொடர்ந்து, சீனாவும் ஆஸ்திரேலியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்குக் கூடுதல் கட்டுப்பாடுகளை அறிவித்தன.
-
"டார்க்" பாதை.. ஹார்முஸ் ஜலசந்தி வழியாக சீக்ரெட்டாக போன 70+ கப்பல்கள்.. இது எப்படி சாத்தியம்? -
Kuwait மீது திடீர் தாக்குதல் நடத்திய ஈரான்.. திரும்பும் பக்கமெல்லாம் ஏவுகணை சந்தம்.. பீதியில் மக்கள்! -
அமெரிக்காவில் 30 இந்தியர்கள் கைது.. உடனடியாக நாடுகடத்த உத்தரவு "Operation Checkmate".. என்ன நடந்தது? -
இனி சீனாவுக்கு தெரியாமல் அணுவும் அசையாது.. எதிர்காலத்தை கணிக்கும் AI சாப்ட்வேர்.. திக்திக் ஆய்வு -
அந்தர் பல்டி அடிக்கும் டிரம்ப்.. 25% வரி 15 சதவீதமாக குறைப்பு.. வழிக்கு வந்த அமெரிக்கா! -
ஈரானின் முதுகெலும்பில் தாக்கிய CENTCOM.. டிரம்ப் போட்டுக்கொடுத்த பிளான்..? கச்சிதமாக முடித்த US Army! -
அமெரிக்காவில் ஹைதராபாத் இளைஞர் ஜாலி சுற்றுலா.. 3 பேரை காப்பாற்றியவருக்கு கனவிலும் நினைக்காத சம்பவம் -
இந்தியர்களுக்கு நிம்மதி! இனி அமெரிக்காவை விட்டு வெளியேற தேவையில்லை! கிரீன் கார்டு விதிகளில் விளக்கம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்












Click it and Unblock the Notifications