For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

2 நாளில் ரூ.2 லட்சம் கோடியை இழந்த கோடீஸ்வரர்.. சீன பணக்காரர்களுக்கு செக் வைத்த ஜின்பிங்.. எப்படி?

Google Oneindia Tamil News

பெய்ஜிங்: சீன அதிபர் ஜி ஜின்பிங் கொண்டு வந்த புதிய விதிமுறைகள் மற்றும் கொள்கைகளால் அந்நாட்டு கோடீஸ்வரர்கள் பெரிய அளவில் இழப்பை சந்திக்க தொடங்கி உள்ளனர். அந்த நாட்டின் டாப் 10 கோடீஸ்வரர்கள் பெரிய அளவில் பொருளாதார ரீதியான இழப்பை சந்தித்து உள்ளனர். அதிலும் ஒரு கோடீஸ்வரர் 2 லட்சம் கோடி ரூபாய் வரை இழப்பை சந்தித்துள்ளார்.

ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் வெற்றிபெற்று அங்கு எப்படி பெரிய அரசியல் மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றதோ அதேபோல் சீனாவில் ஆட்சி மாற்றம் ஏற்படாமலே மிகப்பெரிய அரசியல் மாற்றம் ஏற்பட்டு வருகிறது. அந்நாட்டு அதிபர் ஜி ஜின்பிங் பல்வேறு புதிய விதிகளை அமல்படுத்தி இருக்கிறார். சீன ஆண்கள் சிலர் தென்கொரியா பிடிஎஸ் ஸ்டைல் பாப் பாடல்களை, நடனங்களை ஆடுவதால் அது தொடர்பான நடன நிகழ்ச்சிக்கு தடை விதித்துள்ளார்.

ஆண்கள் பெண்கள் போல லிப் ஸ்டிக் எல்லாம் போடுவதாக குற்றஞ்சாட்டி இந்த தடையை அதிபர் விதித்துள்ளார். அதோடு குழந்தைகள் கேம் ஆடும் நேரத்தை வாரத்திற்கு மூன்று மணி நேரம் என்று குறைத்துள்ளார். இப்படி பல விசித்திரமான விதிமுறைகளை அதிபர் ஜின்பிங் விதித்துள்ளார். அதில் ஒரு முக்கியமான விதிதான் சமமான பொருளாதாரம் அல்லது பொதுவான வளம் தொடர்பான சட்டம்.

பாஜக அரசை நாங்கள் எதிர்க்க இது தான் காரணம்... நீங்களும் தெரிந்துகொள்ளுங்கள் மக்களே -தமிழக காங்கிரஸ் பாஜக அரசை நாங்கள் எதிர்க்க இது தான் காரணம்... நீங்களும் தெரிந்துகொள்ளுங்கள் மக்களே -தமிழக காங்கிரஸ்

என்ன சட்டம்

என்ன சட்டம்

பொதுவான வளம் என்பது ஜின்பிங் பல ஆண்டுகளாக சொல்லி வரும் கொள்கை ஆகும். அதை கடந்த 5 மாதமாகவே அவர் செயல்படுத்தி வருகிறார். இந்த சட்டத்தின்படி பணக்காரர்கள், கோடீஸ்வரர்களுக்கு அதிக வரி வசூலிப்பது. மக்களுக்கான அடிப்படை ஊதியத்தை உயர்த்துவது. பணக்காரர்களுக்கு விதிக்கப்பட்ட சலுகைகளை மொத்தமாக தடை செய்வது. அரசின் நலத்திட்டங்களில் பணக்காரர்களை முதலீடு செய்ய வைப்பது என்ற பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அதாவது பணக்காரர்களிடம் இருக்கும் பணத்தை பிடுங்கி அரசு செலவுக்கு பயன்படுத்துவது அல்லது மக்களுக்கு கொடுப்பது.

 பங்குச்சந்தை

பங்குச்சந்தை

இந்த நடவடிக்கையால் சீனாவின் மொத்த பங்கு சந்தையும் புதிய சரிவை சந்தித்துள்ளது. அங்கு பங்கு சந்தையில் அரசு எடுத்த நடவடிக்கையால் பெரிய நிறுவனங்களின் மதிப்பு பெரிய சரிவை சந்தித்துள்ளது. இதனால் சீனாவின் பெரிய நிறுவனங்கள் பல லட்சம் கோடிகளை பங்கு சந்தையிலும், சந்தைக்கு வெளியிலும் இழந்து வருகிறார்கள். பொதுவான வளம் தொடர்பான சட்டம் காரணமாக 500 நிறுவனங்கள் இதுவரை அங்கு பல ஆயிரம் கோடி ரூபாய் இழப்புகளை சந்தித்து இருக்கிறது.

இழப்பு

இழப்பு

இந்த நிலையில்தான், சீனாவை சேர்ந்த கோலின் ஹயான் என்ற கோடீஸ்வரர் அங்கு 2 லட்சம் கோடி ரூபாய் வரை கடந்த இரண்டு நாட்களில் இழப்பை சந்தித்துள்ளார். இவரின் நிறுவனம் பங்கு சந்தையிலும், பங்கு சந்தைக்கு வெளியிலும் இவ்வளவு இழப்பை சந்தித்துள்ளது. அவர் பின்டியோடியோ என்ற ஆன்லைன் வர்த்தக நிறுவனத்தை நடத்தி வருகிறார். அங்கு பொதுவான வளம் தொடர்பான சட்டம் மூலம் ஆன்லைன் வர்த்தகம் பெரிய அடி வாங்கி உள்ளது. பொருட்களின் விலை குறைந்துள்ளது.

Recommended Video

    India- Russia கூட்டு ராணுவ பயிற்சி.. வேடிக்கை பார்த்த China, Pakistan
     மோசம்

    மோசம்

    இதன் காரணமாக அலி பாபா உள்ளிட்ட பல்வேறு ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள் இழப்பை சந்தித்து வருகிறது. அதன் ஒரு கட்டமாகவே கோலின் ஹயானுக்கு சொந்த பின்டியோடியோ நிறுவனமும் 2 லட்சம் கோடி ரூபாய் கடந்த இரண்டு நாட்களில் இழந்து உள்ளது. இந்த நிறுவனம்தான் ஜி ஜின்பிங் விதியால் சீனாவில் அதிக அளவு இழப்பை சந்தித்த நிறுவனம் ஆகும். இழப்பை சந்தித்த 500 நிறுவனங்களில் இதுதான் டாப் நிறுவனம் ஆகும். இன்னொரு நிறுவனமான ஹாய் கா யான் என்ற கோடிஸ்வரருக்கு சொந்தமான எவர்கிராண்டே குரூப் என்ற நிறுவனம் 1.17 லட்சம் கோடி ரூபாயை இழந்துள்ளது.

     மற்ற நிறுவனங்கள்

    மற்ற நிறுவனங்கள்

    இதனால் இந்த நிறுவனங்களின் அமெரிக்க கிளைகளின் பங்குகளும், மற்ற நாடுகளில் உள்ள பங்குகளும் சரிவை சந்தித்தனர். அலிபாபா நிறுவனம் மொத்தமாக 33 சதவிகித இழப்பை சந்தித்தது. டென்சென்ட் நிறுவனம் 20 சதவிகிதம் இழப்பை சந்தித்துள்ளது. சீனாவின் டாப் 10 கோடீஸ்வரர்கள் எல்லோரும் இழப்பை சந்தித்துள்ளனர். உலகில் பல்வேறு காரணங்களால் இழப்பை சந்தித்த டாப் 10 கோடீஸ்வரர்களில் 6 பேர் சீனாவை சேர்ந்தவர்கள். அந்த அளவிற்கு ஜின்பிங் கொண்டு வந்த புதிய விதிகள் காரணமாக இப்படி வரிசையாக அங்கு கோடீஸ்வரர்கள் இழப்பை சந்தித்து வருவது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    English summary
    Chinese Billionaire lost almost 2 Lakh Crores due to new common prosperity rule by president Xi Jinping.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X