For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மனிதர் உணர்ந்து கொள்ள இது 'மனிதக்காதல்' அல்ல.....!

Google Oneindia Tamil News

கோரா, கென்யா: நேற்று உலக கட்டிப்பிடி தினம்.. இந்த நாளில் ஒரு உருக்கமான பாசக்காட்சி கென்யா காட்டில் அரங்கேறி உள்ளது.

அந்த நாளில் ஒரு சிங்கம் தன்னை சிறு வயதில் வளர்த்துப் பின்னர் காட்டில் விட்ட இருவரை சரியாக அடையாளம் கண்டு கொண்டு, கட்டிப்பிடித்து அன்பை வெளிக்காட்டிய நிகழ்ச்சி அனைவரையும் நெகிழ்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

கட்டிப்பிடித்து அன்பை செலுத்துதல் பல அர்த்தங்களைப் பிரதிபலிப்பதாக உள்ளது. ஆனால்,தன்னுடைய செல்ல பிராணியிடம் இருந்து அப்படி கிடைத்த அன்பின் மூலம் அகமகிழ்ந்து உள்ளனர் இரண்டு நண்பர்கள். இப்போது இந்த வீடியோ யூடியூபில் பிரபலமாகியுள்ளது.

சிங்க குட்டி கிறிஸ்டி:

சிங்க குட்டி கிறிஸ்டி:

நம்மில் பலர் நாய் மற்றும் பூனைகளை செல்லப்பிராணிகளாக வளர்ப்பது வழக்கம்.ஆனால்,அதற்கு மாறாக ஒரு சிங்கத்தை "கிறிஸ்டியன்" என பெயரிட்டு தங்களது செல்ல பிராணியாக வளர்த்து வந்தனர் ஏஸ் போர்க் மற்றும் ஜான் ராண்டல் என்ற இரு நண்பர்கள்.

லண்டன் ஹாரோட்ஸ் அண்ணாச்சி கடையில்:

லண்டன் ஹாரோட்ஸ் அண்ணாச்சி கடையில்:

1969ஆம் ஆண்டு கிறிஸ்டியனை லண்டனில் உள்ள பிரபலமான ஹாரோட்ஸ் பல் பொருள் அங்காடியிலிருந்து (அப்போது சிங்கத்தையும் கூட அவர்கள் விற்றுள்ளனர்!) வாங்கியுள்ளனர் அவர்கள்.அவர்களுடைய லண்டன் வீட்டில் கிறிஸ்டியனை பெரியவனாகும் வரை வளர்த்துள்ளனர்.

நான் வளர்ந்துட்டேன் மம்மி:

நான் வளர்ந்துட்டேன் மம்மி:

ஆனால், கிறிஸ்டியன் பெரிதாக வளர்ந்ததால் அதைத் தொடர்ந்து வீட்டில் வைக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து ஜார்ஜ் ஆடம்சன் என்பவரை அணுகினர். அவர் எலிசா என்ற சிங்கத்தை வளர்த்து வந்தார்.

காட்டுக்குப் பயணம்:

காட்டுக்குப் பயணம்:

இதையடுத்து கிறிஸ்டியனை கென்யா காட்டில் கொண்டு போய் விட்டனர். இந்த நிலையில், 9 மாதங்கள் கழித்து போர்க் மற்றும் ராண்டல் கென்யா சென்று கிறிஸ்டியனை பார்க்க நினைத்த போது ஆடம்சன் அவர்களை தற்போது காட்டில் வாழும் கிறிஸ்டியன் நினைவில் வைத்திருக்காது என எச்சரித்துள்ளார்.

ஒன்று சேர்ந்த அன்பு மாறுமா:

ஒன்று சேர்ந்த அன்பு மாறுமா:

ஆனால் நடந்ததோ வேறு...ஆம் கிறிஸ்டியன், ஜான் மற்றும் ராண்டலை பார்த்ததும் அவர்களை ஆரத்தழுவி தனது அன்பை வெளிப்படுத்தியது.

கல்லுக்குள் ஈரம்:

கல்லுக்குள் ஈரம்:

மனிதர்களை மனிதர்களே மறந்து போகும் இக்காலத்தில் ,கொடுமையான விலங்காக கருதப்படும் சிங்கம் தனது அன்பை மறவாமல் வெளிப்படுத்தியது மனிதர்களுக்கு அன்பை விளக்க ஒரு சிறந்த உதாரணம்.

English summary
On Hug Day, let's be thankful for those hugs that mean a lot but we might take for granted - the ones from our pets. While many of us count cats and dogs as loved family members, Ace Bourke and John Rendall had a very unusual 'pet' - Christian the lion.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X