For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மாயமான விமானம்.. சிஐஏ- போயிங் எதையோ மறைக்கின்றன: முன்னாள் மலேசிய பிரதமர்

By Siva
Google Oneindia Tamil News

கோலாலம்பூர்: மாயமான மலேசிய விமானம் எங்கோ உள்ளது. ஆனால் அது குறித்த தகவலை சிஐஏ மற்றும் போயிங் நிறுவனம் மறைக்கிறது என்று முன்னாள் மலேசிய பிரதமர் மகாதிர் முகமது தெரிவித்துள்ளார்.

கடந்த மார்ச் மாதம் 8ம் தேதி 239 பேருடன் மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீன தலைநகர் பெய்ஜிங்கிற்கு சென்ற மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் எம்.ஹெச். 370 மாயமானது. பின்னர் அது இந்திய பெருங்கடலில் விழுந்து மூழ்கிவிட்டதாக மலேசிய அரசு அறிவித்தது. இதையடுத்து இந்திய பெருங்கடலில் விமானத்தை தேடும் பணி 2 மாதங்களுக்கும் மேலாக நடந்து வருகிறது.

இந்நிலையில் இது குறித்து முன்னாள் மலேசிய பிரதமர் மகாதிர் முகமது தனது பிளாக்கில் கூறியிருப்பதாவது,

விமானம்

விமானம்

மாயமான விமானம் எங்கோ உள்ளது. அதன் மீதுள்ள மலேசியன் ஏர்லைன்ஸ் என்ற பெயர் இல்லாமல் இருக்கலாம்.

வீண்

வீண்

விமானம் எங்கோ உள்ள நிலையில் அதன் பாகங்களை கருப்புப் பெட்டியில் இருந்து வரும் சிக்னல் கிடைத்த இடத்தில் தேடுவது நேரம் மற்றும் பணத்தை வீணாக்கும் செயல்.

மாயம்

மாயம்

விமானங்கள் திடீர் என்று மாயமாகாது. அதுவும் தொலைத்தொடர்பு சிஸ்டம்கள், ரேடியோ மற்றும் சாட்டிலைட் என்று அதிநவீன கருவிகள் உள்ள காலத்தில் மாயமாவது சாத்தியம் அல்ல.

சிஐஏ

சிஐஏ

போயிங் நிறுவனம் மற்றும் சிஐஏ எதையோ மறைக்கிறது. ஏதோ காரணத்திற்காக போயிங் மற்றும் சிஐஏ ஆகியவற்றின் தொடர்பு குறித்து மீடியாக்கள் எதுவும் வாய் திறக்க மாட்டேன் என்கின்றன.

போயிங்

போயிங்

விமானத்தில் உள்ள தொலைத்தொடர்பு மற்றும் ஜிபிஎஸ் கருவிகளை போயிங் நிறுவனம் தான் பொருத்தியுள்ளது. அவை செயல் இழந்தாலோ, செயல் இழக்கச் செய்யப்பட்டாலோ அது எப்படி நடந்திருக்கும் என்பது போயிங் நிறுவனத்திற்கு கண்டிப்பாகத் தெரியும்.

கட்டுப்பாடு

கட்டுப்பாடு

விமானத்தை தீவிரவாதிகள் கடத்த முயன்றிருந்தால் தூரத்தில் இருந்து கொண்டே ரேடியோ அல்லது சாட்டிலைட் தொடர்புகள் மூலம் சிஐஏ போன்ற அரசு ஏஜென்சிகள் அதை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்திருக்க முடியும் என்று மகாதிர் தனது பிளாக்கில் தெரிவித்துள்ளார்.

English summary
Former Malaysian PM Mahathir Mohamad wrote in his blog that CIA and Boeing are covering up something about the missing Malaysian plane. He even wrote that the plane is somewhere.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X