உருத்தெரியாமல் சிதையும் நகரங்கள்..ரத்த சகதியை கண்ணீரால் கழுவும் மக்கள்.. உக்ரைனுக்கு தேவை நேசக்கரம்
கீவ் : ரஷ்யாவின் மூர்க்கமான போர் தாக்குதல் காரணமாக உக்ரைன் நகரங்கள் உருதெரியாமல் சிதைந்து கொண்டிருக்கும் மக்கள் தங்கள் உயிரையும் உடமையையும் காத்துக் கொள்ள நகரங்களை விட்டு கால்நடையாகவே வெளியேறி வருகின்றனர். உக்ரைனின் போரை நிறுத்த உலக நாடுகள் முன்வர வேண்டுமென்ற கோரிக்கை வலுத்து வருகிறது.
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினின் போர்ப் பிரகடனத்தைத் தொடர்ந்து ரஷ்யா வியாழன் அன்று உக்ரைன் மீது தரை, வான் மற்றும் கடல் என மும்முனைகளில் தனது படையெடுப்பைத் தொடங்கியது.
தலைநகர் கீவ் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் குண்டு வீச்சு மற்றும் துப்பாக்கிச் சூடு காரணமாக சுமார் 100,000 பேர் நகரங்களை விட்டு ஓடிவிட்டனர். மேலும் மக்கள் தொடர்ந்து வெளியேறி வருகின்றனர்.

3ஆம் நாள் தாக்குதல்
உக்ரைன் மீதான3ம் நாள் போரை ரஷ்யா தொடங்கியுள்ள நிலையில், உக்ரைன் தலைநகர் கீவ் மீது குண்டுகள் வீசி தாக்குதல் நடத்தி வருகின்றனர். ரஷ்ய ராணுவத்தினர். தலைநகர் கீவ்வில் இருந்து கிராமங்களை நோக்கி கார்கள் உள்ளிட்ட வாகனங்களில் மக்கள் செல்வதால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. அமெரிக்கா மற்றும் உக்ரேனிய அதிகாரிகள், ரஷ்யா கீவ்வைக் கைப்பற்றி அரசாங்கத்தைக் கவிழ்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்று கூறுகின்றனர்.

வோலோடிமிர் ஜெலன்ஸ்கி
100 போர் வீரர்கள் சுற்றிவளைக்க நிர்கதியாய் நடுவில் நின்ற ஒருவர் சொன்னாராம், "உங்கள் துப்பாக்கிக்கு ஒரு பக்கமே குறி ஆனால் என்னுடைய துப்பாக்கிக்கு நாலாபுறமும் குறி" என்று. தன் நாட்டை விட வலிமை வாய்ந்த நாடாக ரஷ்யா இருந்தாலும் கடைசி வரை எதிர்க்கும் தைரியம் தான் நம்மை அடுத்த கட்ட நகர்விற்கு வழிகாட்டும் என்ற கொள்கையில் உறுதியாய் உள்ளார். கவச உடை அணிந்து களத்தில் ஒரு ராணுவ வீரராகவே உள்ளார் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி. அவரது புகைப்படங்கள் இணையத்தில் உலா வந்து பலரது வீர வணக்கங்களை பெற்று வருகிறது.

சொல்ல முடியாத துயரம்
பேச்சுவார்த்தைக்கு தயார் என ஒரு புறம் கூறினாலும் மற்றொருபுறம் உக்ரைன் மீது உக்கிரமான தாக்குதலை நடத்தி வருகிறது ரஷ்ய ராணுவம். மூன்றாவது நாள் போர் வரை நூற்றுக்கணக்கான உயிரிழந்த நிலையில் பல நகரங்கள் உருத் தெரியாமல் சிதைந்து போயுள்ளன வானளவு உயர்ந்து நின்ற கட்டடங்கள் மண்ணோடு மண்ணாக கலந்துள்ளன. மெட்ரோ ரயிலில் குழந்தை பிறக்கிறது, தன் தந்தையை பிரிய மனமின்றி ஒரு பெண் குழந்தை அழுகிறது, மறுபுறம் நாட்டுக்காக ஆண்கள் ஆயுதம் ஏந்திப் போராட தயாராகி விட்டனர் இப்படி ஒவ்வொரு நாளும் சொல்ல முடியாத துயரங்களை சந்தித்து வருகிறது உக்ரைன்.

வோலோடிமிர் ஜெலன்ஸ்கி
அடுத்தடுத்த கட்ட தாக்குதலை எப்படி சமாளிப்பது என தெரியாவிட்டாலும் அடைந்தால் மகாதேவி இல்லையேல் மரணதேவி என்ற ரீதியில் உள்ளனர் உக்ரேனிய வீரர்கள். 3,500க்கும் மேற்பட்ட ரஷ்ய வீரர்களை கொன்று குவித்துள்ளதாக உக்ரைன் அரசு அறிவித்துள்ளது. நான் உக்ரைன் ராணுவத்தை சரணடைய சொல்லிவிட்டதாக சில வதந்திகள் கிளப்பப்பட்டிருக்கிறது. நாங்கள் எங்கள் ஆயுதங்களை கீழே போட போவதில்லை. எங்கள் நாட்டை விட்டுக் கொடுக்க போவதில்லை. இது எங்கள் நாடு என ஜெலன்ஸ்கி மீண்டும் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.
Recommended Video

வலுக்கும் கோரிக்கை
போர் நாளுக்கு நாள் தீவிரமடைந்துள்ள நாளுக்கு நாள் போர் தீவிரமடைந்து வரும் நிலையில் போரை நிறுத்த உலக நாடுகள் முன்வர வேண்டும் இல்லையேல், உக்ரைனுக்கு ஆதரவாக ராணுவத்துடன் களமிறங்கி தாக்குதல் நடத்த வேண்டும் என கோரிக்கை வலுத்து வருகிறது. #saveukraine என்று ஹேஸ்டேக் உடன் ஆயிரக்கணக்கான ட்விட்கள் போடப்பட்டு வருகிறது. எந்த சமூகவலை தளத்தை எடுத்துக் கொண்டாலும் அதில் உக்ரைன் மக்களை காக்க வேண்டும் என்ற பதிவுகளை அதிகம் பார்க்க முடிகிறது. உக்ரைனுக்கு ஆதரவாக களமிறங்கும் என உறுதியளித்த அமெரிக்கா கைவிட்டுவிட்ட நிலையில் ஐநா பாதுகாப்பு படை அனுப்பி, கையறு நிலையில் உள்ள உக்ரைன் மக்களுக்கு உதவ வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து வருகிறது.


Click it and Unblock the Notifications
