For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கிம் ஜோங்கிற்கு ஏதாவது ஆனால்.. சீனாவை துரத்தும் ஆபத்து.. கொரோனாவிற்கு இடையே புதிய பிரச்சனை!

வடகொரியா அதிபர் கிம் ஜோங் உன்னின் உடல்நிலை மோசமாகி வருவதாக வெளியாகும் தகவல்களால் சீனா கடும் பதற்றத்தில் இருக்கிறது.

Google Oneindia Tamil News

பெய்ஜிங்: வடகொரியா அதிபர் கிம் ஜோங் உன்னின் உடல்நிலை மோசமாகி வருவதாக வெளியாகும் தகவல்களால் சீனா கடும் பதற்றத்தில் இருக்கிறது. வடகொரியாவை விட சீனாவிற்குதான் தற்போது கிம் ஜோங் உன் அதிகம் தேவை என்பது குறிப்பிடத்தக்கது.

Recommended Video

    சுற்றி நிற்கும் எதிரிகள்.. அண்ணனைப் போல அசகாயம் காட்டுவாரா கிம் தங்கை!

    வடகொரியா அதிபர் கிம் ஜோங் உன் மிக மோசமான உடல்நிலையுடன் இருப்பதாக அமெரிக்கா செய்தி ஊடகமான சிஎன்என் செய்தி வெளியிட்டு இருந்தது. அவரின் உடல்நிலை மோசமடைந்து இருக்கிறது, இதய அறுவை சிகிச்சை ஒன்றின் காரணமாக அவரின் உடல்நிலை மிக மோசமாக உள்ளது என்று செய்தி வெளியிட்டு இருந்தது.

    இவருக்கு கடந்த 12ம் தேதி அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அதன்பின் அவர் வெளியே எங்கும் வரவில்லை. இதனால்தான் இந்த சந்தேகம் அதிகரிக்க தொடங்கி உள்ளது.

    கிம் உடல்நிலை.. இப்போதான் சந்தேகம் அதிகரிக்கிறது.. நைசா நழுவும் வட கொரிய ஊடகங்கள் கிம் உடல்நிலை.. இப்போதான் சந்தேகம் அதிகரிக்கிறது.. நைசா நழுவும் வட கொரிய ஊடகங்கள்

    சீனாவின் நிலை

    சீனாவின் நிலை

    கிம் ஜோங் உன்னின் உடல்நிலை மோசமாகி வருவதாக வெளியாகும் தகவல்களால் சீனா கடும் பதற்றத்தில் இருக்கிறது. சீனா இவரின் உடல்நிலையை தீவிரமாக கண்காணிக்க தொடங்கி உள்ளது. வடகொரியாவை விட சீனாவிற்குதான் தற்போது கிம் ஜோங் உன் அதிகம் தேவை என்பது குறிப்பிடத்தக்கது. சீனாவும் வடகொரியாவும் மிகவும் நெருக்கமான நட்பு நாடுகள், பல விஷயங்களில் ஒன்றாக கரம் கோர்த்து இருக்கும் நாடுகள் என்பது குறிப்பிடத்தக்கது.

    ஒன்றாக இணையும் புள்ளி

    ஒன்றாக இணையும் புள்ளி

    சீனாவும், வடகொரியாவும் ஒன்றாக இணையும் புள்ளி என்று பார்த்தால் அது அமெரிக்க எதிர்ப்புதான். வடகொரியாவிற்கும் அமெரிக்கா என்றால் ஆகாது, சீனாவிற்கும் அமெரிக்கா என்றால் ஆகாது. இந்த நிலையில் தற்போது கொரோனா காரணமாக சீனா பெரிய சிக்கலில் மாட்டிக்கொண்டு உள்ளது. கொரோனா உருவாக சீனாதான் காரணம், சீனாதான் இந்த வைரஸை பரப்பியது என்று அமெரிக்கா கூறி வருகிறது.

    உலக நாடுகள் கோபம்

    உலக நாடுகள் கோபம்

    அமெரிக்கா இதற்கான விசாரணையை தொடங்கிவிட்டது என்றும் கூட கூறலாம். சீனாவிற்கு இதனால் அழுத்தம் அதிகரிக்க தொடங்கி உள்ளது. இன்னொரு பக்கம் சீனாவில் இருந்து ஜெர்மனி, பிரான்ஸ், ஜப்பான், ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகள் தங்கள் நிறுவனங்களை வெளியேற்ற தொடங்கிவிட்டது. தங்கள் முதலீடுகளை வெளியே எடுக்க தொடங்கி விட்டது. சீனாவின் மிக நெருக்கமான நட்பு நாடுகள் கூட சீனாவிற்கு எதிராக திரும்பி உள்ளது.

    உலக பொருளாதார தடை

    உலக பொருளாதார தடை

    அதேபோல வரிசையாக முக்கியமான நாடுகள் கொரோனா பரவலுக்கு சீனாவை குற்றஞ்சாட்ட தொடங்கி உள்ளது. இந்தியாவும் சீனாவின் முதலீட்டை தடுக்கும் வகையில் அந்நிய முதலீட்டு விதியில் கட்டுப்பாடுகளை கொண்டு வந்துள்ளது. விரைவில் சீனாவிற்கு எதிராக ஏதாவது ஒரு நாடு பொருளாதார தடையை கொண்டு வர வாய்ப்புள்ளது என்கிறார்கள். சீனா மீது இதனால் கடுமையான அழுத்தம் திணிக்கப்பட்டு உள்ளது.

    சீனாவிற்கு யாரும் இல்லை

    சீனாவிற்கு யாரும் இல்லை

    ஜப்பானும் சீனாவில் இருந்து முதலீடுகளை திரும்ப பெற தொடங்கி உள்ளது. இதனால் சீனாவிற்கும் உதவ யாரும் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. முக்கியமாக சீனாவிற்கு பாகிஸ்தான் கூட உதவ முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கொரோனாவால் மத்திய கிழக்கு நாடுகளில் எண்ணெய் வர்த்தகம் சரிந்து உள்ளது. இதனால் மத்திய கிழக்கு நாடுகள் சீனாவை எதிர்க்க தொடங்கி உள்ளது. மத்திய கிழக்கு நாடுகளுக்கு நெருக்கமாக இருக்கும் பாகிஸ்தானும் சீனாவை ஆதரிக்க முடியாது.

    சீனாவிற்கு சிக்கல்

    சீனாவிற்கு சிக்கல்

    இதனால்தான் சீனாவிற்கு தற்போது வடகொரியாவின் உதவி அதிகம் தேவைப்படுகிறது. சீனாவின் அதிபர் ஜி ஜிங்பிங் மற்றும் வடகொரியாவின் அதிபர் கிம் ஜோங் உன் இருவரும் ஒரே குணம் கொண்டவர்கள். அதேபோல் மிகவும் நெருக்கமான நண்பர்கள். வடகொரியா மீது அமெரிக்கா பொருளாதார தடை விதித்த போது கூட சீனா வடகொரியாவிற்கு உதவி செய்தது. இதற்கு முக்கிய காரணம் ஜிங்பிங் மற்றும் கிம் ஜோங்கின் நட்புதான் காரணம்.

    என்ன உடல்நிலை

    என்ன உடல்நிலை

    இதனால்தான் கிம் ஜோங் உன்னின் உடல்நிலை குறித்து சீனா கவலை அடைய தொடங்கி உள்ளது. இவரின் உடல் நிலை குறித்து தீவிரமாக கண்காணித்து வருகிறோம். சில விஷயங்களை நம்ப முடியவில்லை. அதனால் இதுகுறித்து கூற முடியாது. இது தொடர்பாக ஆலோசனை செய்து வருகிறோம் என்று சீனாவின் வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது. ஒருவேளை வடகொரியாவின் அதிபர் மாறினால் சீனாவை அது நேரடியாக பாதிக்கும்.

    நண்பன் இல்லாத நிலை

    நண்பன் இல்லாத நிலை

    வடகொரியாவின் அணு ஆயுத சக்தி தங்களுக்கு உதவும் என்ற சீனாவின் கனவு தவிடுபொடியாகும் நிலை ஏற்பட்டுள்ளது. வடகொரியாவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டால், புதிய அதிபர் சீனாவுடன் நெருக்கமாக இருப்பார் என்று கூற முடியாது. உலகம் முழுக்க இருக்கும் நாடுகளை சீனா பகைத்துக் கொண்டு இருக்கிறது. தற்போது வடகொரியாவிலும் ஆட்சி மாற்றம் ஏற்படும் நிலை உள்ளதால் சீனா பெரும் கலக்கத்தில் உள்ளது.

    English summary
    Coronavirus: China may face problems due to Kim Jong Un Health, Here is why?
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X