கொரோனா வைரஸ்.. பிலிப்பைன்ஸின் லூசன் தீவில் தனிமைப்படுத்தப்பட்ட 5.7 கோடி மக்கள்
மணிலா: கொரோனா வைரஸ் நாடு முழுவதும் பரவுவதை தடுக்க பிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ டுடெர்டே, வரும் ஏப்ரல் 12ம் தேதி வரை லூசன் தீவு தனிமைப்படுத்தப்படும் என்று அறிவித்துள்ளார். அங்கு 5.7 கோடி மக்கள் வசிக்கிறார்கள்.
Recommended Video
சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் தொற்று உலகின் 100 நாடுகளுக்கு மேல் பரவி உள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றால் 164000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 6500 பேர் இதுவரை கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் உலகின் பல நாடுகளை தாக்கிய கொரோனா வைரஸ் பிலிப்பைன்ஸ் நாட்டையும் விட்டு வைக்கவில்லை.

பிலிப்னைஸில் இதுவரை 142 பேருக்கு கொரோனா வைரஸ் பாதித்து உள்ளதாகவும் இதுவரை 12 பேர் இறந்துள்ளதாகவும் அந்நாட்டு சுகாதார அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது
இந்நிலையில் கொரோனா வைரஸ் நாடு முழுவதும் பரவுவதை தடுக்க பிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ டுடெர்டே நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சியில் தோன்றி முக்கிய அறிவிப்பை வெளியிட்டார். இதன்படி கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள லூசன் தீவு வரும் ஏப்ரல் 12ம் தேதி வரை தனிமைப்படுத்தப்படும் என்று அறிவித்துள்ளார்.
மிகப்பெரிய அந்த தீவில் சுமார் 5.7 கோடி மக்கள் வசிக்கிறார்கள். அந்த தீவில் வாழும் மக்கள் உணவு மருந்து உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வாங்க மட்டுமே வெளியே வர வேண்டும். தேவையில்லாமல் வரவேண்டாம் என்று அறிவித்தார். உணவு மருந்து உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை விற்கும் கடைகள் மட்டுமே லூசன் தீவில் திறந்திருக்க வேண்டும் என்று மற்ற அனைத்தும் மூடப்பட வேண்டும் என்றும் அதிபர் அறிவித்துள்ளார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications