For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அடுத்த 10 நாட்கள் முக்கியம்.. வுஹனிலிருந்து தொடங்குவோம்.. 1.1 கோடி பேருக்கு சோதனை.. சீனா செம பிளான்

Google Oneindia Tamil News

பெய்ஜிங்: சீனாவில் இருக்கும் வுஹன் மாகாணத்தில் இருக்கும் எல்லா நபர்களுக்கும் கொரோனா சோதனைகளை நடத்த அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது. முக்கியமான திட்டங்களை மனதில் வைத்து சீனா இந்த முடிவை எடுத்துள்ளது.

Recommended Video

    எல்லோருக்கும் கொரோனா சோதனை... சீனா எடுத்த அதிரடி முடிவு

    சீனாவில் இருக்கும் வுஹன் மாகாணத்தில்தான் முதலில் கொரோனா வைரஸ் தாக்குதல் நடைபெற்றது. அங்கு கடந்த வருடம் டிசம்பர் மாதம் வைரஸ் தாக்குதல் நடந்தது. வுஹன் மார்க்கெட் மூலம் இந்த வைரஸ் தாக்குதல் நடந்து இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

    இந்த நிலையில் தற்போது உலகம் முழுக்க இந்த வைரஸ் பரவி உள்ளது. உலகின் மிக மோசமான வைரஸ் தாக்குதலாக இந்த கொரோனா வைரஸ் மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

    கொரோனா தடுப்பூசி ஆராய்ச்சியை திருடும் சீனா.. அமெரிக்கா வெளியிடும் ஆதாரம்.. தொடங்கியது சைபர் வார்? கொரோனா தடுப்பூசி ஆராய்ச்சியை திருடும் சீனா.. அமெரிக்கா வெளியிடும் ஆதாரம்.. தொடங்கியது சைபர் வார்?

    திறக்கப்பட்டது

    திறக்கப்பட்டது

    இந்த நிலையில் கொரோனா வைரஸ் காரணமாக கடந்த ஜனவரி 23ம் தேதி வுஹன் மூடப்பட்டது. அதன்படி ஏப்ரல் 8ம் தேதி வுஹன் திறக்கப்பட்டது. இங்கு மட்டும் சுமார் 55 ஆயிரம் பேர் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டார்கள். அங்கு கொஞ்சம் கொஞ்சமாக புதிய கேஸ்களின் எண்ணிக்கை குறைய தொடங்கியது. அதோடு வரிசையாக பலர் டிஸ்சார்ஜ் ஆனார்கள். இதனால் வுஹன் மொத்தமாக திறக்கப்பட்டது.

    மீண்டும்

    மீண்டும்

    ஆனால் வுஹன் திறக்கப்பட்டு சில நாட்களில் மீண்டும் அங்கு கேஸ்கள் வர தொடங்கி உள்ளது. கடந்த ஐந்து நாட்களில் 10 புதிய கேஸ்கள் வந்துள்ளது. வுஹன் மாகாணத்தில் புதிய கேஸ்கள் வருவதற்கான அபாயம் அதிகரித்துள்ளது. இந்த புதிய 10 பேருக்கு எப்படி கொரோனா வந்தது என்று தெரியவில்லை. இதனால் வுஹன் மாகாணத்தில் மீண்டும் கொரோனா செகண்ட் வேவ் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கும் என்கிறார்கள்.

    சீனா புதிய திட்டம்

    சீனா புதிய திட்டம்

    இதை தடுக்க அந்நாட்டு அரசு புதிய முடிவு எடுத்துள்ளது. சீனாவில் இருக்கும் வுஹன் மாகாணத்தில் இருக்கும் எல்லா நபர்களுக்கும் கொரோனா சோதனைகளை நடத்த அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது. அங்கு மொத்தம் 1.1 கோடி மக்கள் வசிக்கிறார்கள். இதில் கொரோனவால் ஏற்கனவே பாதிக்கப்பட்ட நபர்களை தவிர்த்து மற்ற எல்லோரையும் சோதனை செய்ய அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான பணிகள் நடந்து வருகிறது.

    பல கோடி பேருக்கு சோதனை

    பல கோடி பேருக்கு சோதனை

    வேகமாக எல்லோருக்கும் சோதனை செய்ய வேண்டும். இல்லையென்றால் கொரோனா பலருக்கு பரவும். இதனால் அங்கு 10 நாட்களில் எல்லோருக்கும் சோதனை செய்ய திட்டமிட்டுள்ளனர். அதாவது 10 நாட்களில் அங்கு 1 கோடி பேருக்கு சோதனை செய்ய திட்டமிட்டு இருக்கிறார்கள். இதற்காக ரேபிட் டெஸ்ட் மற்றும் பிசிஆர் டெஸ்ட் இரண்டு டெஸ்ட்களையும் செய்ய உள்ளனர். வீடு வீடாக சென்று சோதனை செய்ய இருக்கிறார்கள்.

    மக்களை வகைப்படுத்தி சோதனை

    மக்களை வகைப்படுத்தி சோதனை

    முதல் 5 நாட்கள் கொரோனா பாதிக்க அதிக வாய்ப்புள்ள நபர்களிடம் சோதனை செய்ய உள்ளனர். அதாவது கொரோனா பாதிக்கப்பட்ட நபர்களோடு தொடர்பு கொண்டவர்கள், காய்ச்சல் உள்ளவர்கள், கொரோனா பாதிக்கப்பட்ட இடங்களில் வசிப்பவர்கள், முன்னிலை பணியாளர்கள் ஆகியோருக்கு சோதனை செய்ய உள்ளனர். மற்றவர்களுக்கு அடுத்த ஐந்து நாட்கள் சோதனை செய்வார்கள்.

    எத்தனை குழுக்களுக்கு சோதனை

    எத்தனை குழுக்களுக்கு சோதனை

    12 குழுவாக மக்களை பிரித்து சோதனை செய்ய உள்ளனர். வுஹனில் மட்டும் மொத்தம் 130 கொரோனா சோதனை மையங்கள் உள்ளது. இங்கு தினமும் 47000 பேரை சோதனை செய்து வருகிறது. இதை ஒரு நாளுக்கு 10 லட்சம் சோதனைகள் என்ற வீதத்திற்கு உயர்த்த உள்ளனர். இன்றில் இருந்து இந்த வுஹன் சோதனை தொடங்கும். அடுத்த 10 நாட்களில் மொத்தமாக 1.1 கோடி பேருக்கும் வுஹனில் சோதனை செய்யப்பட்டுவிடும் என்று கூறுகிறார்கள்.

    English summary
    Coronavirus: The China to test all people in Wuhan in next 10 days.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X