27 லட்சம் பேர் பாதித்து இருக்கலாம்.. நியூயார்க்கை கலங்க வைத்த கொரோனா ரிப்போர்ட்.. பெரும் சிக்கல்!
அமெரிக்காவில் நியூயார்க்கில் மட்டும் கொரோனா காரணமாக மொத்தம் 27 லட்சம் பேர் வரை பாதிக்கப்பட்டு இருக்கலாம் என்று அம்மாகாண கவர்னர் ஆண்ட்ரு க்யுமோ அச்சம் தெரிவித்துள்ளார்.
Recommended Video
நியூயார்க்: அமெரிக்காவில் நியூயார்க்கில் மட்டும் கொரோனா காரணமாக மொத்தம் 27 லட்சம் பேர் வரை பாதிக்கப்பட்டு இருக்கலாம் என்று அம்மாகாண கவர்னர் ஆண்ட்ரு க்யுமோ அச்சம் தெரிவித்துள்ளார்.
கொரோனாவிற்கு எதிரான போராட்டத்தில் அமெரிக்கா தோல்வியை சந்திக்க தொடங்கி உள்ளது. அமெரிக்காதான் கொரோனா காரணமாக உலகிலேயே மிக மோசமாக பாதிக்கப்பட்டு உள்ளது. அமெரிக்காவில் கொரோனா காரணமாக 886,709 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மொத்தம் 50,243 பேர் அமெரிக்காவில் பலியாகி உள்ளனர். நியூயார்க்கில் மட்டும் 20851 பேர் பலியாகி உள்ளனர். அங்கு 268,581 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

நியூயார்க் பாதிப்பு
இந்த நிலையில் அமெரிக்காவில் நியூயார்க்கில் மட்டும் கொரோனா காரணமாக மொத்தம் 27 லட்சம் பேர் வரை பாதிக்கப்பட்டு இருக்கலாம் என்று அம்மாகாண கவர்னர் ஆண்ட்ரு க்யுமோ அச்சம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், கொரோனா ஒருவரை தாக்கினால் அவரின் உடலில் ஆண்டிபாடிகள் ஏற்படும். இந்த ஆண்டிபாடி சோதனையை நியூயார்க்கில் சோதனை செய்து பார்த்தோம். நியூயார்க்கில் இந்த சோதனையை ரேண்டம் சோதனையாக செய்து பார்த்தோம்.

எத்தனை பேருக்கு சோதனை
இதில் நாங்கள் சோதனை செய்த 14% பேருக்கு கொரோனாவிற்கான ஆண்டிபாடி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மொத்தம் 3000 பேருக்கு சோதனை செய்தோம். இதில் 14% பேருக்கு கொரோனா ஆண்டிபாடி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் மொத்தமாக நியூயார்க்கில் 27 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு இருக்கலாம் என்று கூறுகிறார்கள். நியூயார்க்கின் பாதிப்பு விகிதத்தை வைத்து இந்த முடிவை எடுத்துள்ளோம். நியுயார்க்கில் தற்போது இறப்பு சதவிகிதம் 0.5% என்ற நிலையில் உள்ளது.

வரும் நாட்களில் அதிகரிக்கும்
ஆனால் இது வரும் நாட்களில் அதிகரிக்கிறது. இந்த சோதனைகளை செய்த நேரத்தில், ஆண்டிபாடி சோதனையில் கொரோனா இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படும் நபர்கள் எல்லாம் வெளியே சுற்றும் நபர்கள் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதாவது கடைகளுக்கு பொருட்கள் வாங்க செல்லும் நபர்கள், வாக்கிங் செல்லும் நபர்கள் ஆகியோர்தான் இப்படி ஆண்டிபாடி சோதனையில் பாசிட்டிவ் என்று வந்துள்ளது.

மிக கடினம்
ஆனால் இது எப்படி பரவியது என்று சொல்ல முடியாது. இது தொடர்பாக விசாரணை செய்வது கடினம். அதேபோல் நியூயார்க்கில் தற்போது இறந்தவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருக்கிறது. வரும் நாட்களில் உண்மையான இறப்பு எண்ணிக்கை தெரியும். பலர் மருத்துவமனைக்கு வெளியில் மரணம் அடைந்து உள்ளனர். அவர்களை கணக்கில் கொண்டால் இந்த எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என்று அச்சப்படுகிறோம்.

குறைவான நபர்களுக்கு சோதனை
நாங்கள் குறைவான நபர்களுக்குத்தான் சோதனை செய்து இருக்கிறோம். இன்னும் வரும் நாட்களில் இந்த ஆண்டிபாடி சோதனையை மேலும் பலருக்கு செய்வோம். ஆஃப்ரோ அமெரிக்கன் மற்றும் ஹிஸ்பானிக் மக்களிடம் அதிகம் சோதனை செய்ய இருக்கிறோம் . அவர்களுக்குத்தான் அதிகமாக கொரோனா தாக்குகிறது என்பதால் அவர்களிடம் அதிகமாக கொரோனா சோதனைகளை செய்ய இருக்கிறோம், என்று கவர்னர் ஆண்ட்ரு க்யுமோ தெரிவித்துள்ளார்.
-
அமெரிக்காவின் புதிய வரி.. இந்தியாவுக்கு சுத்தி சுத்தி ஏகப்பட்ட 'அடி'.. திருப்பூர் மட்டும் எஸ்கேப்! -
இந்தியா மீது 12.5% கூடுதல் வரி விதிக்கும் டிரம்ப்.. பூதாகரமாக வெடிக்கும் Section 301 பிரச்சனை! -
73 ஏவுகணை தாக்குதல்.. 656 ட்ரோன்.. சைரன் சத்தம்.. பெண்கள், குழந்தை கதறல்.. உக்ரைனை துவம்சம் செய்த ரஷ்யா! -
பைத்தியக்காரனா நீ? நெதன்யாகுவை திட்டி தீர்த்த டிரம்ப்.. இஸ்ரேல் செய்த வேலையால் ஈரான் எடுத்த முடிவு! -
அந்தர் பல்டி அடிக்கும் டிரம்ப்.. 25% வரி 15 சதவீதமாக குறைப்பு.. வழிக்கு வந்த அமெரிக்கா! -
ஆட்டத்தை மொத்தமாக கலைத்த இஸ்ரேல்.. டிரம்ப்-க்கு செக்.. போருக்கு ரெடியாகும் ஈரான்! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications