எப்படிதான் பரவுகிறது?.. சீனாவில் அதிகாரிகளை திகைக்க வைத்த கொரோனா.. 14 பெரிய நகரங்கள் பாதிப்பு
பெய்ஜிங்: சீனாவில் மீண்டும் கொரோனா கேஸ்கள் உயர தொடங்கி உள்ளது. திடீரென சீனாவில் கேஸ்கள் உயர்ந்து வருவது அந்நாட்டு அதிகாரிகளை குழப்பி உள்ளது.
உலகம் முழுக்க பல்வேறு நாடுகளில் மூன்றாம் அலை கொரோனா பரவல் ஏற்பட்டுள்ளது. அமெரிக்கா, ரஷ்யா, யுகே உள்ளிட்ட பல நாடுகளில் தினசரி கேஸ்கள் 40 ஆயிரத்திற்கும் அதிகமாக பதிவாகி வருகிறது. பல நாடுகளில் A.Y 4.2 வகை கொரோனா பரவ தொடங்கி உள்ளது.
ரஷ்யா, யுகே, இந்திய உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் A.Y 4.2 வகை கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. பல நாடுகளில் இந்த புதிய வகை வைரஸ் மூன்றாம் அலையை தூண்டி விடுமோ என்ற அச்சத்தை எழுப்பி உள்ளது.

சீனா
இந்த நிலையில்தான் சீனாவில் திடீரென கொரோனா கேஸ்கள் அதிகரிக்க தொடங்கி உள்ளது. கடந்த 13 நாட்களில் அங்கு 377 கொரோனா கேஸ்கள் பதிவாகி உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 74 கேஸ்கள் ஏற்பட்டுள்ளது. கடந்த ஒன்றரை வருடத்தில் பதிவான கேஸ்களில் இதுதான் அதிகமான இரண்டு வார கேஸ்களாக பார்க்கப்படுகிறது. சீனாவில் புதிய கொரோனா அலையை இது ஏற்படுத்தி உள்ளதோ என்ற அச்சத்தை அந்நாட்டு மக்கள் இடையே ஏற்படுத்தி உள்ளது.

உலக நாடுகள்
உலக நாடுகளுடன் ஒப்பிடும் போது இது குறைவாக தெரிந்தாலும், சீனாவின் கட்டுப்பாட்டு விதிகளுக்கு இடையில் இந்த வைரஸ் எப்படி பரவியது என்பது பெரிய கேள்வியாகி உள்ளது. அந்நாட்டு அதிகாரிகளுக்கு இது பெரிய குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறதாம். வைரஸ் எங்கிருந்து மீண்டும் தோன்றியது, எப்படி திடீரென பரவுகிறது என்று தெரியாமல் அதிகாரிகள் குழம்பி வருகிறார்கள்.

லாக்டவுன்
கடந்த 14 நாட்களில் இதனால் 14 பெரிய நகரங்கள் சீனாவில் லாக்டவுனில் மூழ்கி உள்ளது. இந்த 14 நகரங்களில் புதிய கொரோனா கேஸ்கள் பதிவாகி உள்ளது. இந்த கொரோனா பரவல் நினைத்ததை விட வேகமாக இருப்பதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முக்கியமாக சீனாவின் வடகிழக்கு பகுதியில் புதிய கேஸ்கள் முதலில் தோன்றியது.

எப்படி வந்தது?
அதன்பின் தற்போது தென் கிழக்கு பகுதியில் கொரோனா கேஸ்கள் பதிவாகி வருகிறது. இது இரண்டும் சீனாவின் இரண்டு எதிர் எதிர் பகுதிகள் ஆகும். இதனால் சீனாவில் இரண்டு வெவ்வேறு சோர்ஸ்கள் மூலம் கொரோனா பரவல் ஏற்படுகிறதோ என்ற அச்சம் எழுந்துள்ளது. இரண்டு வெவ்வேறு பகுதிகளில் சம்மந்தமே இன்றி கொரோனா பரவுவது அதிகாரிகளை குழப்பி உள்ளது.

யோசனை
அண்டை நாடுகளில் இருந்து இந்த வைரஸ் பரவி இருக்கலாம் என்று கூறப்படுகிறது. அண்டை நாடுகளின் எல்லை பகுதிகளில் கொரோனா கேஸ்கள் அதிகம் கண்டறியப்பட்ட நிலையில் அதன் காரணமாக இப்படி கேஸ்கள் பரவி இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
-
90% பேருக்கு தெரியாது.. கலர் கலராக இருக்கும் ரயில்கள்.. ஒவ்வொன்றுக்கும் என்ன அர்த்தம் தெரியுமா! -
பெட்ரோல் விலை பிச்சுகிட்டு போக போகுது..வேலையைக் காட்டிய ரஷ்யா! இந்தியாவுக்கு காத்திருக்கும் சிக்கல்! -
ரஷ்யா எடுத்த அதிரடி முடிவு.. உச்சத்துக்கு போகும் பெட்ரோல், டீசல் விலை! இந்தியாவுக்கு நெருக்கடி! -
அதிகாலையில் வந்த அறிவிப்பு! மோடியே சொன்னாலும்.. குறையாத பெட்ரோல், டீசல் விலை! -
தடுமாறுதே தங்க சந்தை.. மாறி மாறி சரிந்து எகிறும் தங்கத்தின் விலை! இப்போ வாங்கலாமா? வேண்டாமா? -
பெட்ரோல், டீசலுக்கு தட்டுப்பாடு என வட மாநிலங்களில் பரவும் வதந்தி..பங்குகளை நோக்கி படையெடுத்த மக்கள்! -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம்












Click it and Unblock the Notifications