இப்டித்தான் போகுது லாக்டவுன் பிறந்தநாள்கள்.. பார்க்கும் போதே‘குமட்டும்’ கேக் செய்து வைரலான பெண்!
லாக்டவுண் மூலம் பேக்கரி தொழிலில் பிரபலமாகி இருக்கிறார் அமெரிக்கப் பெண் ஒருவர்.
பீனிக்ஸ்: அமெரிக்காவில் மருத்துவத் துறையைச் சேர்ந்த ஒரு பெண் கொரோனா ஊரடங்கால் அடுமனை கலைஞராக மாறி வித்தியாசமான மாடல்களில் செய்து அசத்தி வருகிறார். அதிலும் அவர் செய்த டாய்லெட் பேப்பர் ரோல் கேக் அவரை இணையத்தில் வைரலாக்கி விட்டது.
உலக நாடுகளை எல்லாம் ஆட்டம் காண வைத்து வரும் கொரோனா வைரஸ், அமெரிக்காவில் தனது கோர முகத்தை காட்டி வருகிறது. ஏழு லட்சத்துக்கும் அதிகமான மக்கள் கொரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். 37,175 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.
கொரோனா வைரஸ் பரவலை தடுக்க அமெரிக்கா முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. மக்கள் வீடுகளில் இருக்க முடியாமல் வெளியே வந்து போராட்டங்களில் ஈடுபடும் சூழல் உருவாகியுள்ளது. உலக நாடுகளை எல்லாம் மிரட்டி மருந்து வாங்கும் வேலைகளில் அதிபர் டிரம்ப் ஈடுபட்டு வருகிறார்.
இத்தனை களேபரங்களுக்கு மத்தியிலும் அந்நாட்டை சேர்ந்த பெண் ஒருவர் 'கொரோனா' கேக் விற்பனை செய்து பிஸியாக இருக்கிறார் என்றால் நம்ப முடிகிறதா? ஆமாங்க.. அப்படி ஒரு பெண் அமெரிக்காவில் இருக்கிறார்.

கேக் ஸ்பெஷலிஸ்ட்
அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தில் உள்ள பீனிக்ஸ் எனும் நகரை சேர்ந்தவர் ரெனி ப்ரிவெட். அடிப்படையில் மருத்துவ துறையை சேர்ந்தவரான ரெனி, கேக் செய்வதில் ஸ்பெஷலிஸ்ட். எனவே கொரோனா ஊரடங்கில் கிடைத்த நேரத்தை பயனுள்ள வகையில் பயன்படுத்தியுள்ள ரெனி, தனது கவனத்தை கேக் செய்வதில் செலுத்தியுள்ளார்.

டாய்லெட் பேப்பர்
எதேர்ச்சையாக தோழி ஒருவர் போன் செய்து, தனது கணவரின் பிறந்தநாளுக்கு கேக் செய்து தரமுடியுமா என ரெனியிடம் கேட்டிருக்கிறார். உடனே ஒகே சொன்ன ரெனி, தனது கிரியேட்டிவிட்டியைப் பயன்படுத்தி கழிவறை டிஷ்யூ பேப்பர் ரோல் போல் வெண்ணிலா கேக் செய்து, கோவிட்19 காரணமாக பிறந்தநாள்கள் எல்லாம் நாசமாய் போய்விட்டது என எழுதி தோழியிடம் கொடுத்தார்.
பிஸியோ பிஸி
இந்த கேக்கை போட்டோ எடுத்து முகநூல் பக்கத்தில் ரெனி பதிவிட, நெட்டிசன்கள் அதை வைரலாக்கிவிட்டனர். ரெனி இப்போது பிஸியான பேக்கராகிவிட்டார். அதே மாடலில் கேக் செய்து தரச் சொல்லி, ரெனியை கஸ்டமர்கள் நச்சரித்து வருகின்றனர். மார்ச், ஏப்ரல் மாத ஆர்டர்கள் ஏற்கனவே நிரம்பி விட்டதாகக் கூறியுள்ளதாக ரெனி, அடுத்து மே மாத ஆர்டர்கள் குவிந்து வருவதாகக் கூறியுள்ளார்.
Recommended Video

இப்டித்தான் போகுது
ஆனால் சம்பந்தப்பட்ட அந்த கேக்கில் எழுதியுள்ள வசனமும், ஓரத்தில் வைக்கப்பட்டிருக்கும் கிரிமின் வடிவமும் தான் குடலை புரட்டுகிறது. ஆமாங்க... உண்மையில் அந்த கேக்கில் "கொரோனாவால் பிறந்தநாள்கள் எல்லாம் மலம் போல் ஆகிவிட்டது", என ஆங்கிலத்தில் எழுதி ஓரத்தில் மலம் போன்றே கொஞ்சம் கிரிமையும் வைத்துள்ளார். இதை எப்படி இத்தனை பேர் ஆர்டர் செய்கிறார்கள் என்பதை நினைத்தாலே குமட்டுகிறது. நீங்களும் அந்த கேக்கை பார்த்துட்டு எப்படி ஃபீல் பண்றீங்கன்னு கமெண்ட் பண்ணுங்க மக்களே.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications