Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஏஏ.. ஆமாங்க.. 9 மனைவிகளுடன் படுக்கை பகிர்வு இப்படிதான்.. ஆனாலும்.. இளைஞர் பகீர்.. கடைசியில் ஹைலைட்

10வதாக இன்னொரு திருமணம் செய்ய போவதாக பிரேசில் இளைஞர் அறிவித்துள்ளார்

Subscribe to Oneindia Tamil

பிரஸ்ஸில்லா: டைம்டேபிள் போட்டு, 9 மனைவிகளுடன் குடும்பம் நடத்திவந்த உர்சோவை ஞாபகம் இருக்கா? அவர் இப்போது புதிய முடிவை எடுத்து, உலக மக்களையே வெலவெலக்க வைத்துள்ளார்..!!!

சில தினங்களுக்கு முன்பு, ஆர்தர் ஓ உர்சோ என்பவரை பற்றி செய்திகள், மீடியாவை ஆக்கிரமித்தன.. பிரேசில் நாட்டில் சாவ் பாவ்லோ நகரில் இவர் வசித்து வருகிறார்.

இவருக்கு மொத்தம் 9 மனைவிகள் இருக்கிறார்கள்.. லுவானா கஜகி என்பவர்தான் இவரது முதல் மனைவி. அதற்கு பிறகு நிறைய பெண்களுடன் உர்சோவுக்கு தொடர்பு இருந்துள்ளது.

 1 டூ 10

1 டூ 10

ஆனால் என்ன ஒரு சிக்கல் என்றால், அந்த பெண்களை எல்லாம் உர்சோவுக்கு பிடித்து போய்விட்டது.. இருந்தாலும் எல்லாரையுமே திருமணம் செய்ய முடியாது என்பதால், அவர்களில் 8 பேரை தேர்ந்தெடுத்து, கல்யாணமும் செய்து கொண்டார்.. மொத்தம் 9 மனைவிகளுடன் மகிழ்ச்சியான வாழ்க்கையை நடத்தினார்.. அன்பை சுதந்திரமுடன் கொண்டாட வேண்டும் என்று உர்சோ நம்புகிறாராம்.. அதுமட்டுமல்ல, ஒரே நேரத்தில், ஒரு துணையுடன் வாழ்வது என்பதற்கு எதிரான போராட்டத்தின் அடையாளம் என்றும் உர்சோ நம்புகிறார்.

கிப்ட்ஸ்

கிப்ட்ஸ்

ஆனாலும் உர்சோ திருப்தியாகவில்லை.. 10வதாக ஒரு கல்யாணம் செய்யலாமா? என்று யோசிக்கிறார். 9 மனைவிகள் இருந்தபோதும், இவருக்கு ஒரே ஒரு மகள் மட்டுமே இருக்கிறார்.. இந்த 9 மனைவிகளுடனும் இவர் எப்படி சண்டை வராமல், ஒன்றாக குடித்தனம் நடத்துகிறார் என்ற ஆச்சரியம் எழுந்தது.. அதற்கு உர்சோவோ பதில் சொல்கிறார், "மனைவிகளில் ஒருவர் என் மீது எப்படி அன்பு செலுத்துகிறார் என்பது பற்றியெல்லாம் மற்ற மனைவிகளுக்கு கவலை ஏற்பட்டதே இல்லை.. ஆனால், பரிசு தரும்போது மட்டும், அவர்களுக்குள் பொறாமை வந்துவிடுகிறது..

"டைம்டேபிள்"

ஆரம்பத்தில், தாம்பத்யத்திற்கான நேர அனுமதி கிடைத்த பிறகே அது நடந்தது... இந்த நேரத்தில் இவருடன் என "டைம்டேபிள்" போட்டுதான் தாம்பத்யத்தில் ஈடுபட்டு வந்துள்ளேன்.. அப்படி இருந்தும் நிறைய சிக்கல்கள் வந்தன.. ஒரு சந்தோஷமே இல்லாமல், ஏதோ டைம்டேபிள் போட்டுவிட்டதற்காகவே தாம்பத்யத்தில் ஈடுபடுகிறோமோ என்று நினைத்தேன்.. அதனால், சில சமயங்களில், ஒருவரை நினைத்து கொண்டே இன்னொருவருடன் தாம்பத்யத்தில் ஈடுபட வேண்டிய நிலைமையும் எனக்கு வந்தது.. அதனால் டைம்டேபிள் முறை வேஸ்ட் ஆகிவிட்டது" என்கிறார் உர்சோ.

 நோ நோ சான்ஸ்

நோ நோ சான்ஸ்

இந்நிலையில், 9 பேரில் ஒரு மனைவியான அகத்தா என்பவர், உர்சோவை விட்டு பிரிவது என முடிவு செய்துள்ளாராம்.. இதற்கு காரணம் என்னவென்றால், உர்சோ தனக்கு மட்டும்தான் சொந்தமாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறாராம்.. இந்த விஷயத்தை அகத்தா, உர்சோவிடம் சொன்னதற்கு, "என்னது ஒரே மனைவியா? நோ சான்ஸ்" என்று அதிர்ச்சியுடன் மறுத்துவிட்டாராம்.. அதனால்தான் அகத்தா, அவரை விட்டு விலக முடிவு செய்துள்ளார்.. மேலும், சாதனை செய்வதற்காகவே தன்னை திருமணம் செய்து கொண்டதாகவும் அகத்தா கணவர் மீது குற்றஞ்சாட்டுகிறார்..

 1 + 10 புகைச்சல்

1 + 10 புகைச்சல்

அக்கத்தாவை போலவே, மற்ற மனைவிகளும் நினைக்க தொடங்கிவிட்டார்களாம்.. அதனால், மேலும் 4 மனைவிகள் இப்போது அவரிடம் விவாகரத்து கேட்டு நிற்கிறார்களாம்.. உர்சோ தன்னுடைய 9 மனைவிகளில் 4 பேரை விவாகரத்து செய்ய இருப்பதாக அறிவித்து, உலகம் முழுவதும் மறுபடியும் பேசுபொருளாகி இருக்கிறார்.. அதுமட்டுமல்ல, 10வதாக இன்னொரு கல்யாணம் செய்ய போவதாக அறிவித்து அதற்கு மேலும் அதிரவைத்துள்ளார்.. இதெல்லாம் கேள்விப்பட்டு, ஒரே ஒரு கல்யாணத்துக்கே வழியில்லாமல் திண்டாடிவரும் நம்ம 90'கிட்ஸ்களின் காதுகளில் புகைச்சல் எக்கச்சக்கமாக வந்து கொண்டிருக்கிறது.

சமாளிப்பு

சமாளிப்பு

இதில் இன்னொரு தகவலும் வெளியாகி உள்ளது.. 9 மனைவிகளுடன் ஆரம்பத்தில் மட்டும்தான் இவரால் நிம்மதியாக இருந்திருக்க முடிந்துள்ளது.. ஆனால், ஒருசில நாட்களிலேயே மனக்கசப்பு வந்துவிட்டதாம்.. எல்லா மனைவியரையும் சமாளிக்க முடியாமல் திணறியுள்ளார்.. எனவே அப்போதே ஒரு மனைவி, இவரை விட்டு பிரிந்துவிட்டாராம்.. மேலும், 9 பேருடன் குடும்பம் நடத்தி வந்ததால், உள்ளூர்வாசிகளும் இவருடன் இணக்கமாக நடந்து கொள்ளவில்லையாம்..

10வது மனைவி

10வது மனைவி

இவர் அதிக மனைவிகளோடு வாழ்வது பிடிக்காமல் துன்புறுத்த தொடங்கி உள்ளதாக உர்சோ சொல்கிறார். அப்படி இருந்தும்கூட 10வது மனைவிக்கு ஆசைப்படுகிறார்.. "வருங்காலத்தில் புதிய மனைவிகள் எனக்கு நிறைய கிடைக்கலாம். ஆனால் அது எப்போது நடக்கும் என்று தெரியாது.. ஆனால் மறுபடியும் கல்யாணம் செய்து கொள்வேன்.. ஏன் என்றால், எனக்கு பெண்கள் வேண்டும்... என்னுடைய பெரிய வீட்டில், பெரிய கட்டில் உண்டு, அந்தப் படுக்கை நிரம்பி இருக்க வேண்டும்...

ஹைலைட்

ஹைலைட்

ஒருதார திருமணம் செய்து கொள்வதற்கு எதிராக என்னுடைய பலதார திருமண பயணத்தைத் தொடங்கி இருக்கேன்" என்று தத்துவமாய் உதிர்க்கிறார்.. இதில் ஹைலைட் என்னவென்றால், பிரேசிலை பொறுத்தவரை, பலதார மணம் செய்துகொள்வது சட்டத்துக்குப் புறம்பானது.. அதனால், இவர் செய்து கொண்ட எந்த கல்யாணமும் சரி, டைவர்ஸும் சரி, எதுவுமே சட்டப்படி நடக்கவில்லையாம்.. அப்படின்னா, 9 மனைவிகள் கல்யாணம் செய்திருந்தாலும் உர்சோ இனிமேல்தான் நிஜமாகவே மாமியார் வீட்டுக்கு போக போகிறார் போல..!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+