ஒரே ஒரு மெயில்தான்.. மொத்த அமெரிக்க சிஸ்டத்தையே ஆட்டிப்படைக்கும் எலான் மஸ்க்.. கதறும் அதிகாரிகள்
சென்னை: அமெரிக்க அரசின் DOGE துறை தலைவராக செயல்படும் எலான் மஸ்க் அங்கே தேசிய அரசு அதிகாரிகளுக்கு அனுப்பி உள்ள மெயில் ஒன்று கடுமையான விவாதங்களை எழுப்பி உள்ளது. அவர் அனுப்பிய மெயில் மிகவும் சாதாரண மெயில்தான்.. ஆனால் அதன் வீரியம் மிக தீவிரமானது.
அதன்படி.. நீங்கள் கடந்த ஒரு மாதங்களில் எவ்வளவு வேலை பார்த்து உள்ளீர்கள். உங்கள் வேலை என்ன? அதில் எதை எல்லாம் முடித்து உள்ளீர்கள்? என்பதை லிஸ்ட் போட்டு மெயிலில் அனுப்ப வேண்டும் என்று மஸ்க் கூறி உள்ளார். அப்படி அனுப்பாதவர்கள்.. அரசு வேலையில் இருந்து விலகியதாக கருத்தில் கொள்ளப்படும்.

அப்படி இல்லாமல் சிலர்.. அனுப்பும் மெயில் திருப்தி அளிக்கவில்லை என்றாலும் அவர்கள் வேலையில் இருந்து நீக்கப்பட்டதாக கருத்தில் கொள்ளப்படும் என்று மஸ்க் எச்சரிக்கை விடுத்துள்ளார். அந்நாட்டு அரசு ஊழியர்களுக்கு 48 மணி நேரம் கொடுத்துள்ளார் மஸ்க். 48 மணி நேரத்திற்குள் கடந்த வாரத்தில் என்ன மாதிரியான பணிகளை செய்தார்கள் என்று அவர்கள் மெயிலில் அப்டேட் அளிக்க வேண்டும். அப்படி அளிக்காத பட்சத்தில்.. அல்லது அவர்கள் தந்த விளக்கம் ஏற்றுக்கொள்ளும்படியாக இல்லாத பட்சத்தில், அவர்கள் மீது ஆக்சன் எடுக்கப்படும் . அதாவது அவர்கள் பணியில் இருந்து நீக்கப்படுவார்கள் என்று மஸ்க் தெரிவித்து உள்ளார்.
மஸ்க்கை விமர்சனம் செய்த டிரம்ப்
அவர் கொடுத்த நேரம் இன்றோடு முடிகிறது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்.. DOGE தலைவர் எலான் மஸ்கை விமர்சனம் செய்துள்ளார். எலான் மஸ்க் வேலை பார்க்கிறார். ஆனால் அவர் இன்னும் தீவிரமாக பணிகளை செய்ய வேண்டும் என்று டிரம்ப் விமர்சனம் வைத்துள்ளார். இதையடுத்து . DOGE தலைவர் எலான் மஸ்க்.. நான் இனி என் வேகத்தை அதிகரிப்பேன் என்று என்று உறுதி அளித்துள்ளார். ஏற்கனவே அமெரிக்க அதிபர் டிரம்ப் எடுத்த முக்கியமான ஒரு முடிவால் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனர் எலான் மஸ்க் கடுப்பாகி உள்ளதாக கூறப்படுகிறது.
எதிர்பார்த்தபடியே.. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்.. எலான் மஸ்க்கிற்கு அரசாங்கத் திறன் துறை ("DOGE") தலைவர் பொறுப்பை வழங்கி உள்ளார். இதன் மூலம் அரசில் உள்ள பல நிர்வாகிகளை எலான் மஸ்க் விரைவில் நீக்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ட்விட்டர் நிறுவனத்தை மஸ்க் கையில் எடுத்த போது.. அதில் இருந்த பலர் நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. அதேபோல் மஸ்க் அரசு நிர்வாகத்திலும் பலரை நீக்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எலான் மஸ்க் இந்த முறை நேரடியாக டிரம்பிற்கு தேர்தலில் ஆதரவு கொடுத்தார். ஒரு காலத்தில் தீவிர ஜனநாயக கட்சி ஆதரவாளராக இருந்தவர் எலான் மஸ்க். கடந்த சில வருடங்களாக அவரின் அரசியல் கொள்கை வலதுசாரியாக மாறிவிட்டது.
முக்கியமாக பல விஷயங்களில் தற்போதைய அதிபர் பிடனுக்கும்.. அதிபர் வேட்பாளர் கமலா ஹாரிஸுக்கும் எதிரான முடிவுகளை எலான் மஸ்க் எடுத்துள்ளார். இவர்களை கடுமையாக எலான் மஸ்க் எதிர்த்து வந்துள்ளார். இந்த முறை டிரம்ப்பை எலான் மஸ்க் ஆதரித்துள்ளார்.
அதோடு தேர்தல் செலவிற்கான நிதி உதவிகளையும் எலான் மஸ்க் கொட்டிக்கொடுத்துள்ளார். இந்த நிலையில்தான் இவருக்கு டிரம்ப் அமைச்சரவை பதவி வழங்கி உள்ளார். ஆட்சியை சிறப்பாக நடத்துவதற்கான புதிய அமைச்சரவை உருவாக்கப்பட்டு உள்ளது. இந்த அமைச்சரவைதான் DOGE ஆகும். அதாவது அரசாங்கத் திறன் துறை அல்லது Department of Efficiency ஆகும்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications