திடீரென நடனமாடிய டொனால்ட் டிரம்ப்.. அரசு கொடுத்த வரவேற்பால் உற்சாகம்.. மலைத்துபோன மலேசியா
கோலாலம்பூர்: 2025 ம் ஆண்டுக்கான ஆசியான் உச்சி மாநாடு மலேசியாவில் இன்று தொடங்கி நடந்து வருகிறது. இந்த மாநாட்டில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பங்கேற்றுள்ளார். அவருக்கு சிவப்பு கம்பளத்துடன் பாரம்பரிய முறையில் வரவேற்பு கொடுக்கப்பட்டது. அதனை பார்த்து உற்சாகமடைந்த டொனால்ட் டிரம்ப் நடனடிமாடியது அனைவரையும் கவர்ந்தது.
உலக நாடுகள் ஒவ்வொன்றும் பிற நாடுகளுடன் சேர்ந்து கூட்டமைப்புகளை உருவாக்கி உள்ளது. அப்படி ஒன்று தான் தென்கிழக்கு ஆசிய நாடுகளின் கூட்டமைப்பு. ஆங்கிலத்தில் இதனை ASEAN என்று அழைப்பார்கள். தென்கிழக்கு ஆசிய நாடுகளின் பொருளாதாரம், அரசியல், பாதுகாப்பு உள்ளிட்டவற்றை பாதுகாக்க வேண்டும் என்ற அடிப்படையில் இந்த கூட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த கூட்டமைப்பில் மொத்தம் 10 நாடுகள் உள்ளன. புருனே தாருஸ்ஸலாம், பர்மா, கம்போடியா, இந்தோனேசியா, லாவோஸ், மலேசியா, பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், தாய்லாந்து மற்றும் வியட்நாம் உள்ளிட்ட நாடுகள் உறுப்பு நாடுகளாக உள்ளன. இந்த ஆசியான் கூட்டமைப்பின் உச்சி மாநாடு ஒவ்வொரு 2 ஆண்டுகளுக்கும் ஒருமுறை நடக்கும்.
ஒவ்வொரு முறையும் உச்சி மாநாட்டுக்கு ஒவ்வொரு நாடுகள் தலைமை தாங்கும். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான உச்சி மாநாடு மலேசியாவில் தொடங்கி நடந்து உள்ளது. இதில் உறுப்பு நாடுகளை தவிர மாநாட்டை தலைமையேற்று நடத்தும் நாட்டு தலைவர்களின் அழைப்பின்பேரில் அதன் நட்பு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்பது வழக்கம்.
இந்த மாநாட்டில் பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் அவர் செல்லவில்லை. காணொலி காட்சி மூலமாக மாநாட்டில் பங்கேற்றுள்ளார். அதேவேளையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நேரடியாக மாநாட்டில் பங்கேற்றுள்ளார். முன்னதாக அவர் ‛ஏர் போர்ஸ் ஒன்' விமானத்தில் அமெரிக்காவில் இருந்து மலேசியா வந்தார். கோலாலம்பூர் விமான நிலையத்தில் மலேசியா அரசு சார்பில் சிவப்பு கம்பள வரவேற்பு வழங்கப்பட்டது. மலேசியா பிரதமர் அன்வர் இப்ராஹிம் மற்றும் அமைச்சர்கள் டொனால்ட் டிரம்பை வரவேற்றனர்.
மேலும் பாரம்பரிய முறையில் வாத்தியங்கள், இசை நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தன. நடன கலைஞர்கள் நடனமாடி டிரம்பை வரவேற்றனர். இதனை பார்த்து உற்சாகமான டொனால்ட் டிரம்ப் விமானத்தில் இருந்து இறங்கி நேரடியாக நடன கலைஞர்கள் அருகே சென்று நடனமாடினார். அவருடன் சேர்ந்து மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிமும் நடனமாடினார். இந்த வீடியோ தற்போது இணையதளங்களில் வெளியாகி அனைவரையும் கவர்ந்துள்ளார்.
டொனால்ட் டிரம்ப் பொது வெளியில் இப்படி நடனமாடுவது இது முதல் முறையல்ல. அமெரிக்க அதிபர் தேர்தல் பிரசாரம் மற்றும் தேர்தலில் வெற்றி பெற்ற பிறகும் கூட டொனால்ட் டிரம்ப் நடனமாடி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருந்தார். அதேபோல் மலேசியா வந்த அதிபர் டிரம்புக்கு அந்த நாட்டின் ராணுவம் சார்பில் அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது. மலேசியாவின் போர் விமானங்கள் டிரம்பின் ‛ஏர் போர்ஸ் ஒன்' விமானத்தின் இருபுறமும் சூழ்ந்து பறந்து வந்து அமெரிக்கா, மலேசியாவின் உறவை காட்டும் வகையில் இருநாடுகளின் கொடியையும் வானில் பறக்க விட்டது அனைவரையும் கவர்ந்தது.
இந்த மாநாட்டில் அதிபர் டொனால்ட் டிரம்ப் பல்வேறு நாடுகளின் தலைவர்களை சந்தித்து பேச உள்ளார். அதேபோல் மலேசியா பிரதமர் உடனும் இருநாடுகளின் உறவு பற்றி அவர் விவாதிக்க உள்ளார். மலேசியா சுற்றுப்பயணத்தை முடிக்கும் டொனால்ட் டிரம்ப் அங்கிருந்து நேரடியாக ஜப்பான் செல்கிறார்.
ஜப்பான் புதிய பிரதமர் சானே தகைசியை அவர் சந்தித்து பேச உள்ளார். பிறகு தென்கொரியா சென்று அங்கு சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்தித்து இருநாடுகள் இடையேயான வர்த்தகம் பற்றி விவாதிக்க உள்ளார். அதேபோல் வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன்-னை கூட அவர் சந்தித்து பேசலாம் என்று கூறப்படுகிறது. தென்கொரியாவும், அமெரிக்காவும் எதிரி நாடாக உள்ள நிலையில் டிரம்பின் இந்த சுற்றுப்பயணம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications