For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஒரு டாலருக்கு 3.75 லிட்டர் பெட்ரோல்: அமெரிக்க அதிபர் வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப்!

By Shankar
Google Oneindia Tamil News

சார்ல்ஸ்டன்(யு.எஸ்): அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சியின் சார்பில் உட்கட்சி தேர்தலில் போட்டியிடும் டொனால்ட் ட்ரம்ப் ஒரு டாலருக்கு ஒரு காலன் பெட்ரோல் தருவதாக வாக்குறுதி அளித்துள்ளார்.

குடியரசுக் கட்சியின் உட்கட்சி தேர்தலில் டொனால்ட் ட்ரம்ப் முன்னணியில் இருக்கிறார். பிரபல தொழிலதிபரான இவருடைய அதிரடி அணுகுமுறையால் அமெரிக்க தேர்தல் களம் அதகளப்பட்டுக் கொண்டிருக்கிறது. இவர் வல்லவரா ? அல்லது வடிவேலுவா? என்று பொதுமக்களும் ஊடகங்களும் குழம்பிப் போய் கிடக்கிறார்கள்.

Donald Trump promises 1 gallon gas for 1 dolllar

முதலில் யாருமே சீரியஸாக கண்டுகொள்ளாத இவர், ஒருவேளை வெற்று பெற்று அதிபரும் ஆகி விடுவாரோ என்ற நிலை தற்போது நிலவுகிறது.

டொனால்ட் ட்ரம்ப் அதிரடி பேச்சுகளில் நம்ம ஊர் அரசியல்வாதிகளுக்கு எந்த விதத்திலும் சளைத்தவர் இல்லை . முன்னதாக இஸ்லாமியர்களை அமெரிக்காவுக்குள் அனுமதிக்கக் கூடாது என்று கூறி பரபரப்பு ஏற்படுத்தினார்.

'நான் அதிபர் ஆனால் ஒரு டாலருக்கு ஒரு காலன் பெட்ரோல் தருகிறேன்' என்று தற்போது புதிய பரபரப்பை கிளப்பியுள்ளார். ஒரு டாலர் என்பது அமெரிக்காவில் குறைந்த பட்ச 'டிப்ஸ்' தொகையாகும். இன்றைய ரூபாய் மதிப்பில் 68 ரூபாய். நம்ம ஊர் கணக்கில் 68 ரூபாய்க்கு 3.75 லிட்டர் பெட்ரோல் தருகிறேன் என்று சொல்கிறார்.

இது எப்படி சாத்தியம் என்று கேட்டால், சவுதி அரேபியா அமெரிக்காவுக்கு தரவேண்டியதைத் தந்தால் இது சாதாரணமான ஒன்று என்கிறார். சவுதி அரேபியாவிடம் அமெரிக்கா சரியாக 'டீல்' செய்தால் கிடைக்க வேண்டியது கிடைக்கும் என்றும் சொல்கிறார். தொழிலதிபரான தனக்கு வியாபார டீல் என்பது கை வந்த கலை. மற்ற அதிபர் வேட்பாளார்களுக்கு அது தெரியாது.

மேலும் ஐஎஸ் ஐஎஸ் வசம் உள்ள பெட்ரோலை கைப்பற்றுவேன். அதன் மூலம் பெட்ரோல் விலை 50 சென்ட்கள் (அரை டாலர்) வரை குறையும். அமெரிக்கர்களின் பணம் அனாவசியமாக பெட்ரோலுக்காக விரயமாயவதை தடுக்கப் போகிறேன் என்று டொனால்ட் கூறுகிறார்.

அமெரிக்காவில் கார் என்பது கால்கள் மாதிரி. பெரும் நகரங்கள் தவிர, மற்ற ஊர்களில் வீட்டை விட்டு வெளியே போக வேண்டும் என்றால் கார் இல்லாமல் நகர முடியாது. தமிழகத்தில் அரிசிப் பிரச்சனை மாதிரி, பெட்ரோல் விலை சாமானிய அமெரிக்கர்களின் அன்றாட பிரச்சனை.

நம்ம ஊரில் ரூபாய்க்கு 3 படி அரிசி, கிலோ ஒரு ரூபாய் அரிசி, இப்போது இலவச அரிசி திட்டங்கள் மாதிரிதான் அமெரிக்காவில் இந்த ஒரு காலன் ஒரு டாலர் அறிவிப்பும்.

இரண்டாண்டுகளுக்கு முன்னால் மூன்று டாலருக்கும் அதிகமாக விற்ற ஒரு காலன் பெட்ரோல் இப்போது ஒன்றரை டாலருக்கும் குறைவாக கிடைக்கிறது. இதை ஒபாமா ஆட்சியின் சாதனையாக ஜனநாயகக் கட்சி விளம்பரம் செய்கிறது.

உலக சந்தையில் பெட்ரோல் விலை அடிமாட்டு விலைக்கு குறைந்துள்ள நிலையில், தானகாவே ஒரு டாலருக்கு விலை குறைந்தாலும் ஆச்சரியமில்லை. இந்த போக்கு தொடர்ந்தால 'வாரத்திற்கு பத்து காலன் இலவச பெட்ரோல் தருகிறேன்' என்று கூட டொனால்ட் ட்ரம்ப் வாக்குறுதி தரக்கூடும்!

உலகம் பூராவும் பெட்ரோல் விலை இப்படி தாறுமாறாகக் குறைந்து வரும் நிலையில், நம்ம ஊரில் மட்டும் ஏறிய விலை இறங்க மாட்டேங்குது. அடுத்த பிரதமர் வேட்பாளர் கவனிப்பாரா!

-இர தினகர்

English summary
Republican candidate Donald Trump told a group of supports that when he is President, “I will cap gas prices at $1 per gallon.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X