For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஹெச் 1 பி விசாவுக்குத் தடை விதிங்க!: குடியரசுக் கட்சி வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப் கோரிக்கை

By Shankar
Google Oneindia Tamil News

மயாமி(யு.எஸ்): ஃப்ளோரிடாவில் நடைபெற்ற குடியரசுக்கட்சி அதிபர் வேட்பாளர்கள் விவாத்த்தில், ஹெச் 1 பி விசாக்களை முற்றிலும் தடை செய்ய வேண்டும் என்று டொனால்ட் ட்ரம்ப் கூறியுள்ளார்.

Donald Trump vows to stop H1B visas completely

குடியரசுக் கட்சியின் 12வது அதிபர் வேட்பாளர்கள் விவாதம் மயாமியில் நடைபெற்றது. தற்போது களத்தில் இருக்கும் டொனால்ட் ட்ரம்ப், டெட் க்ரூஸ், மார்க்கோ ரூபியோ மற்றும் ஜான் கேசிக் பங்கேற்றனர்.

Donald Trump vows to stop H1B visas completely

குழாயடிச் சண்டை

இந்தத் தேர்தலில், முதன் முறையாக எந்த வித தனிப்பட்ட தாக்குதல் இல்லாமல் குடியரசுக் கட்சி விவாதம் நடைபெற்றது ஆச்சரியத்துடன் பார்க்கப்படுகிறது.

ட்ரம்ப் மற்றவர்களை விளாசுவதும் கேலி பண்ணுவதும், மற்றவர்கள் பதில் தாக்குதல் நட்த்துவதுமாக இருந்து வந்த விவாதங்கள் கடைசி நேரத்தில் சற்று ஆரோக்கிய பாதைக்கு திரும்பியுள்ளது.

Donald Trump vows to stop H1B visas completely

ஆனாலும் கொள்கை அளவில் ஏனைய மூவரும் ட்ரம்ப் -ன் அணுகுமுறைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஒபாமாவின் கொள்கைகளையே ட்ரம்ப் பின் தொடர விரும்புகிறார் என்றும் குற்றம் சாட்டினர்.

Donald Trump vows to stop H1B visas completely

ஹெச் 1 பி விசா வேண்டாம்

இந்திய ஐடி நிறுவன்ங்களுக்கு வரப்பிரசாதமாக விளங்கும் ஹெச் 1 விசாவுக்கு, குடியரசுக் கட்சியினர் ஆதரவானவர்கள். ஜார்ஜ் புஷ் ஆட்சிக் காலத்தில்தான் எச்1 பி விசா சுமார் மும்மடங்காக அதிகரிக்கப்பட்டது.

அமெரிக்க நிறுவனங்களுக்கும் குறைந்த சம்பளத்தில் திறமையான ஊழியர்கள் கிடைப்பதால் இதற்கு பெரும் ஆதரவு உண்டு.

பிரபல தொழிலதிபரான டொனால்ட் ட்ரம்ப்-ம் தனது நிறுவனங்களில் ஏராளமான ஹெச் 1 பி விசா ஊழியர்களைப் பணியில் அமர்த்தியுள்ளதை விவாதத்தில் தெரிவித்தார். ஆனாலும், தனக்கு ஏராளமான லாபம் சம்பாதித்து தந்த ஹெச் 1 பி விசா சட்டம், அமெரிக்கர்களுக்கு எதிரானது. நான் அதிபர் ஆனால் ஹெச் 1 விசாவை முற்றிலும் ஒழிப்பேன் என்றும் ஆவேசப்பட்டார்.

மற்றவர்கள் சட்டத்தின் ஓட்டைகளை அடைக்க வேண்டும், தவறாக பயன்படுத்தும் நிறுவனங்களை தண்டித்து, அவர்களுக்கு ஹெச் 1 பி விசா முற்றிலும் நிராகரிக்கப்பட வேண்டும் என்று தெரிவித்தனர்.

முன்னிலையில் ட்ரம்ப்

தற்போதைய நிலவரப்படி, ஒஹாயோ மற்றும் ஃப்ளோரிடா உட்கட்சி தேர்தலில் வெற்றி பெற்று விட்டால் டொனால்ட் ட்ரம்ப் குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளர் ஆகி விடுவார்.

அதைத் தடுக்க, மற்ற மூவரும் வியூகம் அமைக்கின்றனர். ஒஹாயோவில் ஜான் கேசிக் கை ஆதரிக்குமாறு ரூபியோ முகாம் கோரிக்கை விடுத்துள்ளது. அதே போல் ஃப்ளோரிடாவில் டெட் க்ரூஸ்க்கு வாக்களிப்பது ட்ரம்ப் க்கு வாக்களிப்பதாகும் என்றும் ரூபியோ கூறியுள்ளார்.

இரு மாநிலங்களிலும் கருத்துக் கணிப்பு ட்ரம்ப் க்கு சாதகமாகவே உள்ளன. 2016 அதிபர் தேர்தல் 'ஹிலரி க்ளிண்டன் Vs டொனால்ட் ட்ரம்ப்' என அமையும் என்ற எதிர்பார்ப்புகள் உருவாகியுள்ளது. அது ஹிலரியின் வெற்றியை உறுதி செய்யும் என்றும் நம்பப்படுகிறது.

-இர தினகர்

English summary
Donald Trump, the Republican party front runner said the H1-B Visa program that allows U.S. employers to employ foreign workers in specialty occupations for a period of time should be ended.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X