For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தப்பு பண்ணிட்டோம், மன்னிச்சிருங்க.. டிவிட்டரில் ஸாரி கேட்ட 'டவ்' சோப் நிறுவனம்!

டவ் நிறுவனம் வெளியிட்ட நிற ரீதியான விளம்பரத்திற்கு கடும் எதிர்ப்பு வந்ததால் , அதை நீக்கிவிட்டு மன்னிப்பு கேட்டுள்ளது அந்த நிறுவனம்.

By Shyamsundar
Google Oneindia Tamil News

Recommended Video

    தப்பு பண்ணிட்டோம், மன்னிச்சிருங்க-இப்படிக்கு டவ்-வீடியோ

    வாஷிங்டன்: டவ் சோப் பயன்படுத்தும் கருப்புப் பெண் ஒருவர் வெள்ளையாக மாறுவதைப் போல் ஒரு வீடியோவை நேற்று டவ் நிறுவனம் பேஸ்புக்கில் வெளியிட்டது. கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது இந்த வீடியோ.

    பல மக்கள் இந்த வீடியோவிற்கு எதிராக கருத்து தெரிவிக்க ஆரம்பித்தனர். கொஞ்ச நேரத்தில் இந்தப் பிரச்சனை பேஸ்புக் மற்றும் டுவிட்டரில் வைரல் ஆனது.

    இதையடுத்து அந்த வீடியோவை நீக்கியது டவ் நிறுவனம். மேலும் வீடியோவை நீக்கியதோடு, அந்த விளம்பரத்திற்காக நிபந்தனையற்ற மன்னிப்பைக் கேட்டது.

     டவ் சோப்பின் விளம்பரம்

    டவ் சோப்பின் விளம்பரம்

    நேற்று பேஸ்புக்கில் டவ் நிறுவனம் நிற ரீதியான வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தது . அந்த வீடியோவில் ஒரு கருப்பினப் பெண் தன் ஆடையை கழட்டியவுடன் வெள்ளை இனப் பெண்ணாக மாறுவதைப் போல் சித்தரித்திருந்தது. டவ் சோப்பின் விளைபரத்திற்காக இந்த வீடியோவை அந்த நிறுவனம் வெளியிட்டு இருந்தது. இதைத் தனது டிவிட்டர் பக்கத்திலும் ஷேர் செய்திருந்தது.

    பிரச்சனை ஆனது

    இதையடுத்து இந்த வீடியோ பலராலும் ஷேர் செய்யப்பட்டது. நிறைய பேர் வரிசையாக இந்த விடியோவிற்கு கண்டனம் தெரிவிக்கத் தொடங்கினர். டவ் நிறுவனத்திற்கு பலரும் வெவ்வேறு வகையில் கண்டனம் தெரிவித்து போஸ்ட் செய்யத் தொடங்கினர். சிலர் இனி டவ் நிறுவனத்தின் பொருட்களை வாங்கப் போவது இல்லை என்றும் கூறினார்.

    இது இரண்டாவது முறை

    இது போல் நிற ரீதியான விளம்பரம் ஒன்றை டவ் நிறுவனம் இதற்கு முன்பே ஒருமுறை வெளியிட்டுள்ளது. டவ் சோப் பயனபடுத்திய கறுப்பினப் பெண் , வெள்ளையாக மாறுவதை போல் இந்த போட்டோ விளம்பரத்தில் அது குறிப்பிட்டிருந்தது .

    மன்னிப்பு கேட்டது டவ் நிறுவனம்

    இந்தப் பிரச்சனை சமூக வலை தளங்களில் பெரும் அளவில் பரவியதை அடுத்து டவ் நிறுவனம் அந்த வீடியோவை நீக்கியது. மேலும் அது தனது டிவிட்டர் மற்றும் பேஸ்புக் பக்கத்தில் இதற்காக நிபந்தனையற்ற மன்னிப்பைக் கேட்டுள்ளது. இனி இது போன்ற தவறுகள் நடக்காது என்றும் அது வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது .

    English summary
    Dove apologises for the racist video after got viral in social media. This video of the dove company got worst feedback by people all over the world .
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X