Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

2 வருடம் நடக்க வேண்டியது ஒரே நாளில்.. துபாயை உலுக்கிய அந்த 24 மணி நேரம்.. அப்படியே ஸ்டன் ஆகிவிட்டதே

Subscribe to Oneindia Tamil

துபாய்: துபாயில் 2 வருடத்தில் பெய்ய வேண்டிய மழை ஒரே நாளில் பெய்துள்ளது. உலகம் முழுக்க ஏற்படும் காலநிலை மாற்றமே துபாய் வெள்ளத்திற்கு காரணமாக பார்க்கப்படுகிறது.

ஒரு பக்கம் இஸ்ரேல் - பாலஸ்தீனம் - ஈரான் போர் நடந்து கொண்டு இருக்கிறது, இன்னொரு பக்கம் வடகொரியா - தென் கொரியா போர், மத்திய கிழக்கு நாடுகள், மேற்கு உலகம் என்று பல பகுதிகள் போரை நோக்கி செல்கின்றன.. இன்னொரு பக்கம் பார்த்தால் தீவிரவாதம்.. சர்வாதிகாரம்.. வேலையின்மை.. வறுமை ஆகிய பிரச்சனைகளும் இருக்கின்றன.

Dubai Flood Why did flood in single day How it break 2 years of rain record in single day

இவை எல்லாம் உலகின் மிகப்பெரிய பிரச்சனைகளாக தோன்றினாலும், அதை விட பெரிய பிரச்சனை ஒன்றை நாம் சத்தமின்றி எதிர்கொண்டு வருகிறோம். அதுதான் காலநிலை மாற்றம்! உலகம் முழுக்க ஒவ்வொரு பகுதியும் காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு பகுதியின் வெப்பநிலையும் உயர்ந்து வருகிறது.

ஐநாவும் இந்த காலநிலை மாற்றம் குறித்து கடுமையான எச்சரிக்கைகளை விடுத்து இருக்கிறது. மீண்டும் சரி செய்யவே முடியாத தவறுகளை நாம் செய்து வருகிறோம். இது மனித குலத்திற்கான "கோட் ரெட்" எச்சரிக்கை மணி. உலகின் வெப்பநிலை அடுத்த 20 ஆண்டுகளில் 1.5 டிகிரி செல்ஸியஸ் உயர போகிறது.. இனி நாம் இயற்கை பேரிடர்களுக்கு மத்தியில் வாழ வேண்டிய கட்டாயம் ஏற்படலாம்.... கடந்த சில மாதங்களுக்கு முன் ஐநா அமைப்பு வெளியிடப்பட்ட Intergovernmental Panel on Climate Change எனப்படும் காலநிலை மாற்ற அறிக்கையில் இடம்பெற்ற வரிகள் இவை. அந்த அளவிற்கு உலகம் முழுக்க காலநிலை மாற்றம் மிகப்பெரிய பிரச்சனையாக மாறி உள்ளது.

இந்த நிலையில்தான் நிலையில் காலநிலை மாற்றம் காரணமாக ஐஸ் கட்டிகள் உருகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் கடலில் நீர் மட்டம் வேகமாக உயரும்.இதனால் கடலோர மாவட்டங்களில் தொடர்ந்து வெள்ளங்கள், புயல்கள் ஏற்படலாம்.

அதனால்தான் எப்பவும் குளிராக இருக்கும் பெங்களூர் 2 மாதமாக பொட்டு வெள்ளம் இன்றி.. குடிக்க கூட தண்ணீர் இன்றி கடுமையான பஞ்சத்தில் இருக்கிறது. இன்னொரு பக்கம் தண்ணீர் கடும் பஞ்சத்தில் இருக்கும் துபாயில் வெள்ளம் அடித்து மழையாக பெய்து கொண்டு இருக்கிறது.

துபாய் வெள்ளம்: துபாயில் நேற்று 24 மணி நேரத்தில் மொத்த நகரமும் வெள்ளக்காடாக மாறி உள்ளது. துபாயில் 2 வருடத்தில் பெய்ய வேண்டிய மழை ஒரே நாளில் பெய்துள்ளது. உலகம் முழுக்க ஏற்படும் காலநிலை மாற்றமே துபாய் வெள்ளத்திற்கு காரணமாக பார்க்கப்படுகிறது. அங்கு பெய்த மழையை வானிலை ஆய்வு மையங்களில் கணிக்கவே முடியாமல் போய் உள்ளது.

துபாயில் ஏற்பட்ட வெள்ளம் தொடர்பான வீடியோக்கள் இணையத்தை உலுக்கி உள்ளன. துபாய் மால் மற்றும் மால் ஆஃப் தி எமிரேட்ஸ் போன்ற முக்கிய ஷாப்பிங் சென்டர்கள் உட்பட நகரின் முக்கிய உள்கட்டமைப்புகள் வெள்ளத்தில் மூழ்கி தத்தளித்து கொண்டு இருக்கின்றன.

துபாய் மெட்ரோ ரயில் நிலையங்களில் கூட கணுக்கால் ஆழம் தண்ணீர் நிரம்பி வழிந்து கொண்டு இருக்கிறது. சாலைகளில் நீர் நிரம்பி வாகனங்கள் மிதந்து கொண்டு இருக்கின்றன. குடியிருப்பு வளாகங்கள் பல நீரில் மூழ்கின, மேலும் பல்வேறு வீடுகளில் கூரைகள், கதவுகள் மற்றும் ஜன்னல்களில் இருந்து கசிவுகள் ஏற்பட்டு வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்து உள்ளது. ஓமனில் மழை வெள்ளம் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 18ஐ கடந்து உள்ளது. துபாயில் அதிகாரபூர்வமற்ற முறையில் 5 பேர் வரை பலியாகி இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

ரெக்கார்ட் பிரேக்: வழக்கமாக வறண்ட காலநிலை மற்றும் வெப்பமான வெப்பநிலையை அனுபவிக்கும் துபாய், நேற்று ஏற்பட்ட கடும் மழையால் வெள்ளத்தில் மூழ்கி உள்ளது. 1 நாள் முழுக்க பெய்ய வேண்டிய மழை 1 மணி நேரத்தில் பெய்த காரணத்தால் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (யுஏஇ) நீரில் மூழ்கி உள்ளது. 2 வருடத்தில் பெய்ய வேண்டிய மழை 1 நாள் முழுக்க பெய்துள்ளது. மொத்தமாக ஒரே நாளில் 250 மிமீ மழை பெய்துள்ளது. இது அங்கே பெய்த 1 வருட மழையை விட இரண்டு மடங்கு அதிகம். அதாவது கிட்டத்தட்ட 2 வருட மழை அளவு. அங்கே 75 வருடங்களில் இல்லாத கொடூரமான மழை ஆகும் இது.

இதனால் சாலைகளில் கடுமையான வெள்ளம் ஏற்பட்டு உள்ளது. விமானப் பயணம் நிறுத்தப்பட்டு உள்ளது. பாலைவனமான துபாய் தற்போது சாலைகளில் வெள்ளம் ஏற்பட்டு தத்தளித்து கொண்டு இருக்கிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+