உக்ரைன் வழக்கு: சுப்ரீம் கோர்ட் முன்னாள் நீதிபதி டிஒய் சந்திரசூட்க்கு மேஜர் பொறுப்பு வழங்கிய ரஷ்யா

Subscribe to Oneindia Tamil

மாஸ்கோ: உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி டிஒய் சந்திரசூட். கடந்த 2022 ஆம் ஆண்டு ஓய்வு பெற்றார். இந்நிலையில் ரஷ்யா தனது நாட்டுக்கு எதிரான ஒரு வழக்கில் சர்வதேச நடுவர் தீர்ப்பாயத்தில் முக்கிய பொறுப்பை டிஒய் சந்திரசூட்டுக்கு வழங்கியுள்ளது.

ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே கடந்த 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி தொடங்கியது. அன்று முதல் போர் கடந்த 4 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. 4 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வரும் போரால் கடும் பொருளாதார பாதிப்பு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக உக்ரைன் மீது ரஷ்யா நடத்தும் தாக்குதல்களால் அந்த நாடு கடும் இழப்பை சந்தித்து வருகிறது. இந்த சூழலில் உக்ரைனின் பிரபலமான வங்கிகளில் ஒன்றாகவும் அரசு வங்கியாகவும் இருக்கக் கூடிய ஓஷட் பேங்க் (Oschadbank) ரஷ்யாவுக்கு எதிராக சர்வதேச நடுவர் தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.

DY Chandrachud picks by Russia for key role in legal battle against Ukrainian bank

உக்ரைன் - ரஷ்யா

ரஷ்யா நடத்தி வரும் தாக்குதல் காரணமாக உக்ரைனில் உள்ள டொனெட்ஸ்க், லுஹான்ஸ்க், கெர்சன் மற்றும் சபோரிஷியா ஆகிய பிராந்தியங்களில் தங்களின் வங்கி செயல்பாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. சொத்துக்கள் இழப்பு மட்டும் இன்றி வணிக நடவடிக்கைகளும் பாதிக்கப்பட்டுள்ளன. ரஷ்யாவின் படையெடுப்புக்கு பிறகே இந்த இழப்பானது ஏற்பட்டுள்ளது.

எனவே, இதற்கான இழப்பீடை ரஷ்யா வழங்க வேண்டும் என்று கோரி நடுவர் தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. 1998 ஆம் ஆண்டு ரஷ்யா- உக்ரைன் இடையே ஏற்படுத்தப்பட்ட இரு தரப்பு முதலீட்டு ஒப்பந்தத்தின் கீழ் பிரச்சனை விசாரிக்கப்பட உள்ளது. சர்வதேச நடுவர் தீர்ப்பாயத்தில் தற்போது மூன்று உறுப்பினர்கள் உள்ளனர். இந்த தீர்ப்பாயத்தில் மூன்று உறுப்பினர்கள் இருப்பார்கள். கோஸ்டா ரிக்காவை சேர்ந்த மத்தியஸ்தரும் முன்னாள் வர்த்தக அமைச்சருமான தியாள ஜிமேனேஷ் அதன் தலைவராக செயல்படுவார்.

மத்தியஸ்தராக டிஒய் சந்திரசூட்

ரஷ்யாவும் ஓஷாத்பேங்க்கும் கூட்டாக இவரை தேர்வு செய்வார்கள். இதில் மூன்றாவது நடுவராக கிரீஸ் நாட்டை சேர்ந்த மத்தியஸ்தரும் சிங்கப்பூரின் முன்னாள் தேசிய பல்கலைக்கழக பேராசிரியருமான ஸ்டாவ்ரஸ் பிரேகோலைகிஸ் என்பவரை ஒஷாத்பேங் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இந்திய உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதியான டிஒய் சந்திரசூட்டை ரஷ்யா இந்த தீர்ப்பாயத்திற்கு நியமனம் செய்துள்ளது. கடந்த ஆண்டு ரஷ்யாவுக்கு ஒஷாத் வங்கி நோட்டீஸ் அனுப்பியது. இந்த நோட்டீஸ்க்கு ரஷ்யா எந்த பதிலும் அளிக்காததையடுத்து, தீர்ப்பாயத்தை நாடியுள்ளது.

இதற்கு முன்பாக இயற்கை எரிவாயு மற்றும் எண்னெய் உற்பத்தி நிறுவனமான விண்டர்ஷெல் டியா மற்றும் உக்ரைனின் அரசுக்கு சொந்தமான உக்ரேனெர்கா மின் நிறுவனத்திற்கு இடையேயான பிரச்சினையில், மத்தியஸ்தராக செயல்பட டி ஒய் சந்திருசூட்டிற்கு ரஷ்யா அழைப்பு விடுத்தது. ஆனால் இந்த அழைப்பை சந்திரசூட் நிராகரித்து இருந்தார்.

யார் இந்த சந்திரசூட்?

1959 நவம்பர் 11 ஆம் தேதி மும்பையில் பிறந்த டிஒய் சந்திரசூட், டெல்லி ஸ்டீபன்ஸ் கல்லூரியில் பொருளியலில் (ஹானர்ஸ்) இளநிலைப் பட்டம் பெற்றார். சட்டம் மீதான ஆர்வம் காரணமாக டெல்லி பல்கலைக்கழகத்தில் சட்டப்படிப்பை முடித்தார். பின்னர் அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் முதுநிலை சட்டப் படிப்பு முடித்தார். 1998 ஆம் ஆண்டு மும்பை உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞராக திறம்பட பணியாற்றினார்.

2000 ஆம் ஆண்டில் மும்பை உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்ட இவர், 2016ல் உச்ச நீதிமன்ற நீதிபதியாக பதவி உயர்வு பெற்றார். உச்ச நீதிமன்றத்தின் 50-வது தலைமை நீதிபதியாக கடந்த 2022 நவம்பர் முதல் 2024 நவம்பர் வரை 2 ஆண்டுகள் பதவி வகித்தார். இவரது தந்தையும் உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக 7 ஆண்டுகள் பதவி வகித்து இருக்கிறார். உச்ச நீதிமன்றத்தின் 16-வது தலைமை நீதிபதியாகப் ஒய்.வி.சந்திரசூட் 1978 - 1985 வரை பொறுப்பு வகித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+