கோஸ்டாரிக்காவையும் குலைநடுங்க வைத்தது நிலநடுக்கம் - ரிக்டரில் 6.8ஆக பதிவு

Subscribe to Oneindia Tamil

சான் ஜோஸ் : பசிபிக் கடற்கரை நாடான கோஸ்டா ரிக்காவிலும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.

அதன் தலைநகரான சான் ஜோஸில் அதிகபட்சமாக 6.5 என்கிற அளவில் நிலநடுக்கம் பதிவாகி உள்ளது. ஆனால், அதில் ஏற்பட்டுள்ள உயிரிழப்புகள், இடிபாடுகள் குறித்து தற்போது வரை எந்தத் தகவலும் இல்லை.

Earthquake hits the pacific coast of Costa Rica it was measured as 6.8 magnitude

இந்த நிலநடுக்கத்தால் பசிபிக் பகுதியில் சுனாமி வர வாய்ப்புகள் இல்லை என்று அமெரிக்க பருவநிலை மையம் தெரிவித்து உள்ளது. அதே சமயம் சுற்றுலா நகரமான ஜாகோவில் உணரப்பட்ட நிலநடுக்கத்தால் கட்டிடங்களில் விரிசல் ஏற்பட்டுள்ளன என்று தகவல் வெளியாகி உள்ளது.

கோஸ்டா ரிக்காவின் பேரிடர் முன்னெச்சரிக்கைக் குழு நிலைமையை சமாளிக்க தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இன்று அதிகாலை ஈரான் - ஈராக் எல்லைப்பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு இடிபாடுகளில் சிக்கி 135 பேர் பலியாகி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Earthquake hits the pacific coast of Costa Rica , it was measured as 6.8 magnitude and till now no causalities reported.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற