சக்தி வாய்ந்த நிலநடுக்கம்.. மெக்சிகோவில் பலி எண்ணிக்கை 248 ஆக அதிகரிப்பு!

Posted By:
Subscribe to Oneindia Tamil

மெக்சிக்கோ சிட்டி: மெக்சிகோ நாட்டில் 7.1 ரிக்டர் அளவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் சீட்டு கட்டுப்போல சரிந்து விழுந்தன. இதில் பலியானோர் எண்ணிக்கை 248 ஆக அதிகரித்துள்ளது.

 Earthquake killed scores and collapsed buildings in Mexico

மத்திய அமெரிக்க நாடான மெக்சிகோவில் இந்திய நேரப்படி நேற்று நள்ளிரவு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 7.1 ஆக பதிவாகியுள்ள இந்த நிலநடுக்கத்தால் மத்திய மெக்சிகோ பகுதியில் உள்ள மெக்சிகோ சிட்டி, மொர்லோஸ், ப்யூப்லா மாநிலத்தின் பல பகுதிகளில் உள்ள கட்டிடங்கள் தரைமட்டமாகின.

#Earthquake #MéxicoCity

A post shared by Marissa Neyra ✌ (@maryssa43) on Sep 19, 2017 at 3:20pm PDT

இந்த பெரும் கோர தாண்டவத்தால் தற்போது வரை 149 பேர் பலியாகியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. மொர்லோஸ் மாகாணத்தில் அதிகபட்சமாக 54 பேர் பலியாகியுள்ளதாக அம்மாநில கவர்னர் தெரிவித்துள்ளார்.

இடிபாடுகளுக்கிடையே பலர் சிக்கியுள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்ற அச்சம் நிலவுகிறது. மீட்புப்பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. மின்சாரம், தொலைத்தொடர்புகள் துண்டிக்கப்பட்டதால் 30 லட்சம் பேர் அவதிப்பட்டு வருவதாகவும் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்நாட்டில் கடந்த 1985ம் ஆண்டு ஏற்பட்ட நிலநடுக்கத்தின் போது பலியான 10 ஆயிரம் பேருக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நேற்று தான் நடைபெற்றது. நிகழ்ச்சியின் போது நிலநடுக்க பாதுகாப்பு ஒத்திகைகளும் நடத்தப்பட்டன. நிகழ்ச்சி முடிந்த சில மணிநேரங்களிலேயே இந்த பேரழிவு நடந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மெக்சிகோவில் ஒரே மாதத்தில் ஏற்பட்ட 2வது பெரிய நிலநடுக்கம் இதுவாகும். இம்மாத தொடக்கத்தில் 8.1 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கி 90 பேர் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் டிவிட்டரில் கூறுகையில், மெக்சிகோ சிட்டியை கடவுள் காப்பாற்றட்டும். நாங்கள் உங்களோடு இருக்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Earthquake killed scores and collapsed buildings in Mexico City and surrounding states on the anniversary of a devastating earthquake decades ago.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற