சாண்டா பார்பராவில் நிலநிடுக்கம்.. 6.8 ரிக்டர் அளவு- தவறாக எச்சரிக்கையை அனுப்பி பீதி கிளப்பிய ஊழியர்

Posted By:
Subscribe to Oneindia Tamil

லாஸ் ஏஞ்சல்ஸ்: அமெரிக்காவின் சாண்டா பார்பரா கடற்கரை பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அது 6.8 ரிக்டர் அளவுகோளில் பதிவாகியுள்ளது என்ற தவறான எச்சரிக்கை மின்னஞ்சல் ஒன்றை ஊழியர் ஒருவர் அனுப்பியது பரபரப்பை ஏற்படுத்தியது.

அமெரிக்காவில் உள்ள சாண்டா பார்பரா கடற்கரை பகுதியில் 1925ம் ஆண்டு நிலநடுக்கம் ஏற்பட்டது. அது 6.8 என்று ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளது. 92 ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற இந்த சம்பவம் குறித்த தகவல்களை கணினியில் ஊழியர் ஒருவர் சரி பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது தவறுதலாக மின்னஞ்சல் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது.

Earthquake in Santa Barbara, wrongly sent alarm

சரியாக அதிகாலை 4 மணி 51 நிமிடத்திற்கு அனைவருக்கும் அனுப்பப்பட்ட மின்னஞ்சலில் 2025ம் ஜூன் மாதம் 29ம் தேதி 7.42 மணிக்கு நிலநடுக்கம் குறித்த எச்சரிக்கை என்று தவறுதலாக இருந்துள்ளது. இதனை உற்று கவனித்தவர்களுக்கு அச்சம் ஏற்பட்டிருக்க வாய்ப்பில்லை.

ஆனால், பலருக்கு இது பீதியை ஏற்படுத்தியுள்ளது. அதே நேரத்தில் இந்த பூகம்பம் தொடர்பான எந்தவித எச்சரிக்கையையும் யூஎஸ்ஜிஎஸ் இணைய தளத்தில் வெளியிடப்படவில்லை. இதுதொடர்பாக அதிகாரி ஈகிள் ஹாக்சன், இது தவறான தகவல் என்றும் இதில் உண்மை இல்லை என்றும் அறிவித்துள்ளார்.

ட்விட்டரில், 1925 பூகம்பம் தொடர்பான பதிவுகளை மறுசீரமைப்பு செய்த போது, மென்பொருள் தவறுதலாக எச்சரிக்கை தகவலை விடுத்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தவறான நிலநடுக்க எச்சரிக்கையால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
USGS sent false earthquake alert, reported M 6.8 near California coast.
Please Wait while comments are loading...