100 வருஷத்துக்கு பிறகு நடந்த அதிசயம்.. வானத்தில் திடீரென மறைந்த சூரியன்! அறிவியல் ஆச்சரியம்
மாட்ரிட்: ஸ்பெயினில் 100 ஆண்டுகளுக்கு பிறகு இன்று முழு சூரிய கிரகணம் தெரிந்திருக்கிறது. இதை லட்சக்கணக்கான மக்கள் பார்த்து ரசித்துள்ளனர். அதேபோல ஐரோப்பாவின் பல பகுதிகளிலும் சூரிய கிரகணம் தெரிந்திருக்கிறது.
ஸ்பெயினில் கடைசியாக 1912ம் ஆண்டு முழு சூரிய கிரகணம் தெரிந்தது. அதன் பின்னர் இப்போதுதான் தெரிகிறது. எனவே, மலை பகுதிகளில் மக்கள் குவிந்து, கிரகணத்தை பார்த்து ரசித்துள்ளனர்.

ஸ்பெயின் மட்டுமல்ல, ஐரோப்பாவிலும் 1999க்கு பிறகு தெரியும் முழு சூரிய கிரகணம் என்பதால், இத நூற்றாண்டு நிகழ்வு என்றே அழைக்கப்படுகிறது. சூரிய கிரகணத்தை பார்க்க ஸ்பெயினின் வடக்குப்பகுதிகள் மற்றும் பலேரிக் தீவுகளுக்கு சுமார் 60 லட்சம் பேர் குவிந்தனர். ஐஸ்லாந்து நாட்டிற்கு சுமார் 80,000 சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர்.
மற்ற நாடுகளை விட ஸ்பெயினில் தெரியும் சூரிய கிரகணத்திற்கு தனி சிறப்பு இருக்கிறது. ஏனெனில் இங்கு சூரியன் மறையும்போது கிரகணம் தெரியும் என்பதால், இது சூரிய அஸ்தமன கிரகணமாக காட்சியளிக்கும். இந்த கிரகணத்தின்போது சுமார் 2 நிமிடங்கள் 18 விநாடிகளுக்கு இருள் இருக்கும் என்று சொல்லப்படுகிறது. ஐஸ்லாந்தின் மேற்கு கடற்கரைப்பகுதியில் இது இன்னும் தெளிவாக தெரிந்திருக்கிறது.
இந்திய நேரப்படி ஸ்பெயினில் இரவு 11.57க்கு தொடங்கி நள்ளிவரவு 12.04 வரை கிரகணம் தெரிந்திருக்கிறது.


Click it and Unblock the Notifications
