ஓமிக்ரான் வைரசால் 3 நாடுகளில் மரணம் பதிவாகியுள்ளது.. அலார்ட்டா இருக்கனும்.. நிபுணர்கள் எச்சரிக்கை
ஜெருசலேம்: ஓமிக்ரான் பாதிப்பு காரணமாக மூன்று நாடுகளில் இறப்புகள் அடுத்தடுத்து பதிவாகும் நிலையில், உயிரிழப்புகள்மேலும் அதிகரிக்கும் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
உலகையே அச்சுறுத்தி வந்த கொரோனா வைரஸின் புதிய மாறுபாடு வைரஸான ஓமிக்ரான் தற்போது உலகம் முழுவதும் பரவியுள்ளது. அமெரிக்கா இஸ்ரேல் ஆஸ்திரேலியா இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் வேகமாக பரவி வருகிறது. டெல்டா வைரசை விட மூன்று மடங்கு வேகத்தில் இந்த வைரஸ் பரவும் என்பதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.
இதையடுத்து அரசுகள் தடுப்பூசிகளை மக்களுக்கு செலுத்தும் நடவடிக்கைகளை முடுக்கி விடப்பட்டுள்ளன. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை ஓமிக்ரான் காரணமாக மரணம் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்ட நிலையில் முதல் இறப்பு பதிவாகி இருந்தது . அதற்கு அடுத்தபடியாக தற்போது மூன்று நாடுகளில் உயிரிழப்புகள் பதிவாகியுள்ளது. இந்நிலையில் உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கும் என நிபுணர்கள் எச்சரித்துள்ளதால் பரபரப்பு தொற்றிக்கொண்டுள்ளது.

இஸ்ரேலில் மரணம்
இஸ்ரேல் சுகாதாரத்துறை அமைச்சகம் செவ்வாய் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் இஸ்ரேல் நாட்டின் முதல் இறப்பு பதிவாகியுள்ளது உறுதிப்படுத்தியுள்ளது. நாட்டின் தெற்குப் பகுதியில் உள்ள நகரமான பீர்சிபாவில் உள்ள மருத்துவமனையில் கடந்த இரு வாரங்களுக்கு முன்பு அனுமதிக்கப்பட்ட அறுபது வயது மதிக்கத்தக்க ஒருவர் மரணமடைந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது ஆனால் அவர் ஏற்கனவே சில உடல் உபாதைகளுடன் அனுமதிக்கப்பட்டதாகவும், அவர் குறித்த மற்ற தகவல்களை தெரிவிக்கப்படவில்லை.

4 டோஸ் தடுப்பூசி
அதே நேரத்தில் இஸ்ரேல் நாட்டில் தற்பொழுது 4 டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கையை உடனடியாக முடுக்கி விட்டுள்ளதாக ஊடக நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது. இந்த கூடுதல் தோஸ் அங்கு உள்ள 60 வயதுக்கு மேற்பட்ட , மக்கள் சுகாதார பணியாளர்கள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்களுக்கு உடனடியாக வழங்கப்படும் என அந்நாட்டு பிரதமர் தெரிவித்துள்ளார். இஸ்ரேல் நாட்டின் கொரோனவைரஸ் நிபுணர் குழு அளித்த பரிந்துரையின் படி இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

பிரிட்டனில் பரவும் ஓமிக்ரான்
இன்னும் சில தினங்களில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் நடைபெற உள்ள நிலையில் ஐரோப்பிய நாடுகளில் ஓமிக்ரான் பரவல் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக நிபுணர் குழுவினர் எச்சரித்துள்ளனர் புத்தாண்டு கொண்டாட்டங்களை மக்கள் நெருக்கமாக கூட ஆரம்பித்தால் கொரோனா பாதிப்பு மற்றும் மரணங்கள் அதிகரிக்க வாய்ப்புள்ளது என்றும் எனவே மக்கள் கவனமாக இருக்க வேண்டும் என ஐரோப்பாவின் நோய் கட்டுப்பாடு மற்றும் முன்னெச்சரிக்கை அமைப்பு கூறியுள்ளது. இந்தப் புதியவகை மாறுபாடு வைரஸ் குளிர் கால நிலைகளில் வேகமாக பரவும் தன்மை கொண்டதாக இருப்பதால் பொதுமக்கள் கவனமுடன் இருக்க வேண்டும் என எச்சரித்து நிலையில் தற்போது மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் பொது மக்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது

ஐரோப்பாவில் பாதிப்பு
ஐரோப்பிய நாடுகளில் ஓமிக்ரான் பரவல் அதிக அளவில் உள்ளதாகவும் இதன் காரணமாக நோயால் பாதிக்கப்படுபவர்கள் மற்றும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என தாங்கள் அஞ்சுவதாகவும், அதே நேரத்தில் இது டெல்டாவை வைரசை விட தீவிரமாக பரவும் என்பதை தாங்கள் முன்னரே கணித்துள்ளதாக ஐரோப்பிய நோய்த் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அமைப்பின் இயக்குனரான ஆண்ட்ரியா அம்மோன் தெரிவித்துள்ளார்.
Recommended Video

பிரிட்டனில் ஊரடங்கு
திங்கள்கிழமை நிலவரப்படி 12 பேர் ஓமிக்ரான் வைரஸால் பாதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளனர் என பிரிட்டன் துணைப்பிரதமர் டோமினிக் ராப் தெரிவித்துள்ளார். மேலும் கிறிஸ்துமஸுக்கு முன் மேலும் கட்டுப்பாடுகளை விதிப்பதற்கு அல்லது முழுமையான ஊரடங்கு நடைமுறைப் படுத்துவதற்கான சாத்தியக் கூறுகள் தற்போது வரை இல்லை என்றும் இது குறித்த தகவல்களை பிரதமர் போரிஸ் ஜான்சன் நிராகரித்து விட்டதாகக் கூறினார். மேலும் கிறிஸ்துமசுக்கு முன் எந்த ஒரு கடுமையான நடவடிக்கைகளை எடுப்பதற்குத் தேவையான ஆதாரங்கள் இருப்பதாக தாங்கள் நினைக்கவில்லை என்றும் அவர் கூறினார்.

அமெரிக்காவிலும் இறப்பு
அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் கொரோனவைரசின் புதிய ஓமிக்ரோன் மாறுபாட்டால் அமெரிக்காவின் முதல் மரணம் செவ்வாயன்று நிகழ்ந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அந்நாட்டு சுகாதார அதிகாரிகள் கூறிய தகவலின் படி ஐம்பது வயது மதிக்கத்தக்க ஒருவர் தடுப்பூசி போடப்படாததன் காரணமாக உயிரிழந்தார் எனவும், ஏற்கனவே கொரோனா வைரஸ் பாதிப்பால் பாதிக்கப்பட்டவர் எனவும், இது அமெரிக்காவின் முதல் மரணம் என சிஎன்என் தெரிவித்துள்ளது. மேலும் covid-19 நோய் தொற்று காரணமாக ஏற்கனவே கடுமையான ஆபத்தில் இருந்த அவர் மீண்டும் பாதிப்புக்கு உள்ளானதால் தான் உயிரிழந்தார் என கவுன்டி நீதிபதி லினா ஹிடால்கோ கூறியுள்ளார்.
-
கண் கொத்தி பாம்பாக காத்திருக்கும் CIA & மொசாட்.. கொஞ்சம் அசந்தாலும் ஈரான் மொத்தமாக சிதஞ்சிடும் -
"ஹார்முஸை கடக்க ரூ.18 கோடி.." கப்பல்களிடம் சுங்க கட்டணம் வசூலிக்க முடிவு செய்த ஈரான்! பயங்கர பிளான் -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம்












Click it and Unblock the Notifications