For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்கா முறைகேடு: பிரிட்டன், அமெரிக்கர்களிடம் மன்னிப்பு கேட்ட ஜூக்கர்பெர்க்

கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்கா முறைகேடு விவகாரத்தில் பிரிட்டன் மற்றும் அமெரிக்காவில் உள்ள நாளிதழ்களில் முழு பக்கத்தில் அவர் மன்னிப்பு கேட்டு விளம்பரம் தந்துள்ளார்.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

Recommended Video

    பிரிட்டன், அமெரிக்கர்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்ட ஜூக்கர்பெர்க்- வீடியோ

    வாஷிங்டன்: கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்கா முறைகேடு விவகாரத்தில் பிரிட்டன் மற்றும் அமெரிக்காவில் உள்ள நாளிதழ்களில் முழு பக்கத்தில் அவர் மன்னிப்பு கேட்டு விளம்பரம் அளித்துள்ளார்.

    கேம்பிரிட்ஜ் அனலிட்டிக்கா என்ற நிறுவனமானது பேஸ்புக் நிறுவனத்தின் ஒரு பகுதியாகும். இந்த தேர்தல் ஆலோசனை வழங்கும் நிறுவனத்தில் பணத்தை கட்டினால் அவர்கள் வேட்பாளர்களுக்கு தக்க ஆலோசனைகளை வழங்கி தேர்தலில் ஜெயிக்க வைப்பர்.

    இந்நிலையில் இந்த நிறுவனம் பேஸ்புக்கில் வாடிக்கையாளர்களின் தகவல்களை திருடி கடந்த 2016-ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப்பை வெற்றி பெற வைத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. அதுபோல் பிரெக்ஸிட்டில் பிரிட்டன் இருக்க வேண்டுமா வேண்டாமா என்ற கணிப்பிலும் இது எதிர் தரப்புக்கு உதவியது தெரியவந்துள்ளது.

    மன்னிப்பு

    மன்னிப்பு

    இந்த அதிர்ச்சிகரமான தகவல்களால் கடந்த சில நாட்களாக #DeleteFacebook என்ற ஹேஷ்டேக் டிரென்டாகி வருகிறது. இந்நிலையில் பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க் அமெரிக்கா மற்றும் பிரிட்டன் மக்களிடம் நாளிதழ்கள் மூலம் மன்னிப்பு கேட்டுள்ளார்.

    முழு பக்கத்தில்

    முழு பக்கத்தில்

    இங்கிலாந்தின் தி அப்சர்வர், தி சன்டே டைம்ஸ், சன்டே மிர்ரர், சன்டே எக்ஸ்பிரஸ் மற்றும் சன்டே டெலிகிராப், அமெரிக்காவின் தி நியூயார்க் டைம்ஸ், வாஷிங்டன் போஸ்ட் மற்றும் வால் ஸ்ட்ரீட் ஜெர்னல் ஆகிய பத்திரிகைகளில் மார்க் முழு பக்கம் விளம்பரம் கொடுத்துள்ளார்.

    தகுதி இல்லை

    தகுதி இல்லை

    அதில் உங்கள் தகவல்களை பாதுகாக்கும் பொறுப்பு எங்களுக்கு உண்டு, அது முடியாவிட்டால் எங்களுக்கு தகுதி இல்லை என்ற தலைப்பில் கடந்த 2014-ஆம் ஆண்டு பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் உருவாக்கிய வினாடி வினா செயலி மூலம் லட்சக்கணக்கானோரின் பேஸ்புக் விவரங்கள் திருடு போனதை நீங்கள் அறிவீர்கள்.

    நடவடிக்கை

    நடவடிக்கை

    இது மிகவும் நம்பிக்கை துரோகம். இதுபோல் இனி நாங்கள் நடந்து கொள்ளமாட்டோம். இது போல் மீண்டும் நடக்காத வண்ணம் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று கூறி மன்னிப்பு கேட்டுள்ளார் மார்க்.

    English summary
    Facebook founder Mark Zuckerberg took out full-page ads in several British and American newspapers Sunday to apologize for a "breach of trust" in the Cambridge Analytica scandal.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X