ஃபெட்னா 2017: வடஅமெரிக்க தமிழ்ப்பேரவை விழாவில் பொன்ராஜ்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

மினசோட்டா: பொன்ராஜ் வெள்ளைச்சாமி, வட அமெரிக்க தமிழ்சங்கமும் மினசோட்டாத் தமிழ்ச் சங்கமும் இணைந்து நடத்தும் 30ம் பேரவைத் தமிழ் விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு தனது அறிவியல் மற்றும் அரசியல் அனுபவங்களைப் பகிர்கிறார்.

திரு. பொன்ராஜ், விருதுநகர் மாவட்டம் தோணுகால் எனும் சிற்றூரில் பிறந்தவர். வானூர்தியியல் மேம்பாட்டு முகாவாண்மை விஞ்ஞானியான இவர், இந்திய நடுவண் அரசு மற்றும் மாநில அரசுகளின் பொதுக் கொள்கை வரைவுரையாளராகவும் ஆலோசகராகவும் பணியாற்றியுள்ளார்.

 FeTNA 2017 : Federation of Tamil Sangams of North America Tamils function, Ponraj vellaichamy is a Chief gust.

இந்தியாவின் மேனாள் குடியரசுத்தலைவர் ஆ. ப. ஜெ. அப்துல் கலாம் அவர்களின் அறிவியல் ஆலோசகராகப் பதினைந்து ஆண்டுகளுக்கு மேலாகப் பணியாற்றியவர். மதிப்புமிகு அப்துல் கலாம் அவர்கள் முதன்மை ஆசிரியராகப் பணியாற்றிய "நூறுகோடித் துடிப்புகள்"எனும் மாதாந்திர இதழின் ஆசிரியர் குழுவிலும் திரு.பொன்ராஜ் அவர்கள் பணியாற்றினார்.

இந்தியா மாநிலங்களின் வளர்ச்சியைத் திட்டமிடத் திரு. அப்துல் கலாம் தொகுத்து வழங்கிய "வளமைக்கான வழிகள்" எனும் தொகுப்பின் இணை ஆசிரியராகவும் பொறுப்பு வகித்தார்.

மாநில அரசுகளுக்கு வழிகாட்டியாகவும், வளர்ச்சிப்பாதையில் இந்திய மாநிலங்களெனும் முன்னெடுப்புக்கு ஒருங்கிணைப்பாளராகவும் திகழ்பவர். தமிழ்நாட்டு இளைஞர்களின் முன்னேற்றத்துக்குமான சமூகப் பணிகளை மேற்கொண்டு வருகிறார்.

வானூர்தியியல், மென்பொருள் கட்டுமானம், தகவற்தொடர்பு, மின்னணுவியல், அரசு மேலாண்மை, கல்வி, சுகாதாரம், பொதுமக்கள் தொடர்பு முதலான துறைகளின் ஆலோசகராகவும் செயல்முறை மேம்பாட்டுச் சிறப்பாளராகவும் கட்டமைப்புகளை வலுப்படுத்தத் தொண்டாற்றி வருபவர்.

வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின் முப்பதாவது ஆண்டுவிழாவில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றவிருக்கிறார். அனைவரும் பங்கேற்று அறிவியலுரை கேட்டுப் பயனுற நம்மனைவருக்கும் ஓர் அரிய வாய்ப்பாக அமையும்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
FeTNA 2017 : Federation of Tamil Sangams of North America Tamils function, Ponraj vellaichamy is a Chief gust at Minneapolis Convention Center in Minnesota .
Please Wait while comments are loading...