ஃபெட்னா 2017: வட அமெரிக்க தமிழ்ப்பேரவை விழாவில் நிகழ்த்துக் கலை சிற்பி முனைவர் சமணராஜா

Posted By:
Subscribe to Oneindia Tamil

மினசோட்டா: வட அமெரிக்க தமிழ்சங்கமும் மினசோட்டாத் தமிழ்ச் சங்கமும் இணைந்து நடத்தும் 30ம் பேரவைத் தமிழ் விழாவில் சிறப்பு விருந்தினராக நிகழ்த்துகலைச் சிற்பி முனைவர் சமணராஜா கலந்து கொண்டு தமிழரின் கலை இலக்கிய வரலாறுகளை உலக தமிழர் அரங்கில் பேசுகிறார்.

நாடகத்துறையின் ஆய்வாளர்; செவ்விசை, நாட்டுப்புற இசை, மேற்கத்திய இசையில் பயிற்சியும் மேலான அனுபவமும் உடையவர். இசையமைப்பாளராகவும் மிளிர்கிறார். நடிப்புத்துறையிலும் பல ஆண்டு கால அனுபவமுடையவர்.

FeTNA 2017 : Federation of Tamil Sangams of North America Tamils function, Tamil Scholar Samanaraja is a Chief guest.

தமிழ்நாட்டின் எல்லா இடங்களுக்கும் சென்று, இசை, நாடக, நாட்டி நிகழ்ச்சிகளைக் கற்று அரங்கேற்றி இருக்கிறார். வயலின், கின்னரப்பெட்டி முதலான இசைக்கருவிகளையும் நன்கு கையாளக்கூடியவர்.

பல இசை நாடகங்களுக்கு இவரே பாடலும் இசையும் அமைத்துக் கொண்டிருக்கிறார். நிகழ்த்துகலைகளில் பயன்படுத்தப்படும் இசைக்கருவிகளின் தொழில்நுட்பக் கூறுகள் எனும் தலைப்பில் ஆராய்ச்சியை மேற்கொண்டு, பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டமும் பெற்றிருக்கிறார்.

இவரது பங்களிப்பில் நடத்தப்பட்ட 'அணையா நெருப்பு' எனும் நாடகம், இலக்கிய, நாடக, திரைத்துறையினரால் வெகுவாகப் புகழப்பட்டது. மருதநாயகம் மரபு நாடகத்தையும் நடத்த இவர் அமெரிக்க தமிழ்த்திருவிழாவுக்கு வருகை தரவுள்ளார்.

தமிழ்க்கலைகளையும் மரபையும் நேசிப்போர் கலந்து கொண்டு, துறை வல்லுநர்களுடன் பயனுற வேண்டியது எல்லாத்தமிழர்களுக்கும் கிடைத்திருக்கிற ஓர் அருமையான வாய்ப்பும் சூழலுமாகும்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
FeTNA 2017 : Federation of Tamil Sangams of North America Tamils function, Tamil Scholar Samanaraja is a Chief gust at Minneapolis Convention Center in Minnesota
Please Wait while comments are loading...