For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பிளாஷ் பேக் 2016… அழகிப் போட்டி நடத்தி அரசியலுக்கு வந்த டொனால்ட் டிரம்ப்... கதாநாயகன...வில்லனா

அமெரிக்காவின் அதிபராக ஒரு பெண்தான் வருவார் என்று உலகமே எதிர்ப்பார்த்திருந்ததைத் தகர்த்து அதிபராக வெற்றி பெற்றார் டெனால்ட் டிரம்ப்.

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: இனி இவரைச் சுற்றித்தான் உலகம் இயங்கும். இவர் நல்லவரா கெட்டவரா விவாதம் எழுந்தாலும், அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுவிட்டார். அதுவும், அமெரிக்க அரசியலில் முக்கிய பெண் ஆளுமையான கிலாரி கிளிண்டனை வென்று அதிபராக பதவி ஏற்கப் போகிறார் டொனால்ட் டிரம்ப். 2016ல் அமெரிக்க மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மிக அதிக வயதுடைய முதல் அதிபர் டொனால்ட் டிரம்ப் பற்றி ஒரு பிளாஷ் பேக்.

அமெரிக்காவின் 45வது அதிபராக பொறுப்பேற்க உள்ள டொனால்ட் டிரம்ப் குடியரசு கட்சி சார்பில் அதிபர் தேர்தலில் போட்டியிட்டு, ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளர் கிலாரி கிளின்டனை தோற்கடித்தார். கிலாரி கிளிண்டன் போல் பெரிய அரசியல் பின்னணி இல்லாத தொழில் துறையை பின்னணியாகக் கொண்ட டிரம்ப் அமெரிக்காவின் அதிபராகிறார்.

அமெரிக்காவில் குடிபெயர்ந்து வாழும், முஸ்லிம்கள், ஆப்பிரிக்க அமெரிக்கர்கள், தென் அமெரிக்கர்கள் மீதான அவதூறுகளுக்கும் வன்முறை பேச்சுக்களுக்கும் பெயர் போன இவரை எப்படித்தான் அமெரிக்க மக்கள் தேர்ந்தெடுத்தார்களோ என்று ஒரு பிரிவினர் திட்டி வர, இன்னொரு பிரிவினர், பாராட்டிப் பேசி வருகின்றனர்.

யார் இந்த டொனால்ட் டிரம்ப்?

யார் இந்த டொனால்ட் டிரம்ப்?

அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரின் குயின்ஸ் பகுதியைச் சேர்ந்த பிரடெரிக் டிரம்ப் மற்றும் மேரி மெக்லியோட் ஆகியோருக்கு 4வது மகனாக 1946ம் ஆண்டு டொனால்ட் டிரம்ப் பிறந்தார். ரியல் எஸ்டேட் தொழிலதிபரான இவரது தந்தையிடம் இருந்து ரியல் எஸ்டேட் தொழில் ரகசியங்களை கற்று இவரும் பெரும் ரியல் எஸ்டேட் தொழில் அதிபரானார். தன் தொழிலுக்கு ஏற்ப பொருளாதாரத்தில் பட்டப் படிப்பை படித்து முடித்தார்.

வியாபாரி

வியாபாரி

படித்து முடித்த கையோடு டொனால்ட் டிரம்ப் தனது தந்தையின் ரியல் எஸ்டேட் நிறுவனத்திற்கு 1971ம் ஆண்டு தலைவரானார். ரியல் எஸ்டேட் துறையில் பெரும் புள்ளியான டிரம்ப், மும்பை, இஸ்தான்புல், பிலிப்பைன்ஸ், சவுதி அரேபியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலும் கோடிக்கணக்கில் சொத்துகள் குவித்து வைத்துள்ளார்.

அழகிப் போட்டி நடத்திய டிரம்ப்

அழகிப் போட்டி நடத்திய டிரம்ப்

ரியல் எஸ்டேட் துறை மட்டுமின்றி பொழுதுபோக்கு துறையிலும் டிரம்பிற்கு ஆவல் அதிகம். மேலும், 1996 முதல் 2015ம் ஆண்டு வரை பிரபஞ்ச அழகி மற்றும் அமெரிக்க அழகி உள்ளிட்ட பல்வேறு அழகிப் போட்டிகளை நடத்தி பெயரும், புகழும், பணமும் சம்பாதித்து வந்தார் டொனால்ட் டிரம்ப்.

டிரம்பின் அரசியல் பிரவேசம்

டிரம்பின் அரசியல் பிரவேசம்

1987ம் ஆண்டு குடியரசு கட்சியில் சேர்ந்த டிரம்ப் அதிலிருந்து வெளியேறி, கடந்த 2000ம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தலில் போட்டியிட முடிவு செய்து சீர்திருத்த கட்சியின் சார்பில் வேட்பாளர் தேர்தலில் போட்டியிட்டார். ஆனால் கலிபோர்னியா மாகாணத்திலேயே தனக்கு ஆதரவு இல்லை என்று தெரிந்தவுடன் அவர் அதிலிருந்து பின்வாங்கினார்.

2016ல் வெள்ளை மாளிகை கனவு

2016ல் வெள்ளை மாளிகை கனவு

இதைத் தொடர்ந்து கடந்த 2012ம் ஆண்டு நடந்த தேர்தலில் மீண்டும் போட்டியிடப் போவதாக ட்ரம்ப் அறிவித்தார். ஆனாலும் அது அவருக்கு கைகூடி வரவில்லை. இதனையடுத்து, நியூயார்க் நகரில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பேசிய டிரம்ப், 2016ம் ஆண்டு நடைபெறும் அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் தேர்தலில் தான் நிற்கப்போவதாக அறிவித்தார்.

சர்ச்சையும் டிரம்பும்

சர்ச்சையும் டிரம்பும்

குடியரசு கட்சியின் வேட்பாளர் தேர்தல் மற்றும் அதிபர் தேர்தல் பிரசாரங்களின் போது பல்வேறு சர்ச்சைகளில் அவர் சிக்கினார். குறிப்பாக முஸ்லிம்களுக்கு எதிராக டொனால்ட் டிரம்பின் பேச்சுகள் அமைந்திருந்தன. மேலும், அமெரிக்காவில் குடிபெயர்ந்துள்ள தென் அமெரிக்கர்கள், ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் குறித்து வெறுப்புப் பேச்சுக்களை தொடர்ந்து பேசி வந்தார். மேலும், அவர் மீது பெண்களும் செக்ஸ் புகார்களை கூறி வந்தனர். இதனால் பிரச்சாரங்களின் போது அவரது பெயர் பெரிய அளவில் பாதிப்படைந்தது.

வலுவான கிலாரி கிளிண்டன்

வலுவான கிலாரி கிளிண்டன்

ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளர் கிலாரி கிளிண்டன், நீண்ட அரசியல் பயணத்தைக் கொண்டவர். அவர்தான் இந்த முறை அதிபர் தேர்தலில் வெற்றி பெறுவார் என்று உலக அளவில் எதிர்ப்பார்க்கப்பட்டது. கருத்துக் கணிப்புகளும் கிலாரியே வெல்வார் என்று உறுதியாகக் கூறியது. ஆனால், தேர்தல் முடிந்து வாக்கு எண்ணிக்கையின் போது மக்களின் வாக்குகள் கிலாரி பக்கம் இருந்தாலும், தேர்வாளர்களின் வாக்குகள் டிரம்பிற்கு சாதகமாக இருந்ததால் அதிபர் போட்டியில் வெற்றி பெற்று தப்பித்தார் டொனால்ட் டிரம்ப்.

45வது அதிபர்

45வது அதிபர்

இதன் மூலம் அமெரிக்காவின் 45வது அதிபராக பதவியேற்க உள்ளார் டொனால்ட் டிரம்ப். இவர் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார் என்ற உடனேயே அமெரிக்காவில் குடியேறிய மக்கள் அச்சமடைந்து கனடா நாட்டிற்கு செல்வதற்கான விசாவிற்கு மனு செய்து காத்திருக்கின்றனர். இன்னும் இவரது ஆட்சிக் காலத்தில் சிறுபான்மை மக்களுக்கு எதிரான நடவடிக்கைகள் என்னென்ன இருக்குமோ என்ற அச்சத்தில் அமெரிக்காவில் உள்ள முஸ்லிம்கள், தென் அமெரிக்கர்கள், ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் உள்ளனர்.

காத்திருப்போம்...

காத்திருப்போம்...

2016ல் முக்கிய நிகழ்வாக டொனால்ட் டிரம்ப் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட நிகழ்வு இருப்பது போன்றே, 2017லும் இவர் தொடர்பான வரலாற்று நிகழ்வுகள் நிறைய இருக்கும் என்று எதிர்பார்த்து காத்திருப்போம்.

English summary
A flash back of Donald Trump’s victory in US President Elections held in 2016.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X