உழைத்தால் உயர்வது உறுதி! துபாயில் GMC Yukon கார் வாங்கிய ஜப்பார் பாய்! விலை எவ்வளவு தெரியுமா?
துபாய்: யூடியூபராக சமூக வலைதளங்களில் அறிமுகமாகி இன்று துபாயில் தொழிலதிபராக கொடி கட்டி பறக்கும் ஜப்பார் பாய் GMC Yukon என்ற அதிநவீன சொகுசு காரை புதிதாக வாங்கியிருக்கிறார்.
பிரியாணி செய்முறைகள் குறித்தும் பிரியாணி கடை தொடங்குபவர்களுக்கு தேவையான ஆலோசனைகளையும் வழங்கி வந்த ஜப்பார் பாய், ஃபுட் ஏரியா தமிழ் என்ற யூடியூப் சேனலை தொடங்கி மக்கள் மத்தியில் பரிச்சயமானார்.

எதையும் ஒளிவு மறைவின்றி தனது வீடியோக்களில் பேசக்கூடிய ஜப்பார் பாய், துபாயில் கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் தான் ஜப்பார் பிரியாணி என்ற உணவகத்தை தொடங்கினார். வியாபாரம் அவர் எதிர்பார்த்தை விட பன்மடங்கு சக்கை போடு போட்டுக் கொண்டிருக்கிறது. இறைவன் கொடுப்பதை தாம் மறைக்க விரும்பவில்லை என்பதை அவரே தனது வீடியோக்களிலும் சொல்லி வருகிறார்.
இந்நிலையில் அமெரிக்கா நிறுவனமான GMC Yukon ரக அதிநவீன சொகுசு காரை துபாயில் சொந்தமாக வாங்கி கவனம் ஈர்த்திருக்கிறார் ஜப்பார் பாய். இதன் துபாய் விலை ரூ.75 லட்சம் என்கிற போது அதை இந்தியா கொண்டு வந்து அனைத்து பேப்பர் ஃபார்மாலிட்டிஸுடன் சேர்த்தால் ரூ.1.50 கோடி வரை செலவாகும்.

இவ்வளவு விலை கொடுத்து ஜப்பார் பாய் வாங்கியிருக்கும் இந்த GMC Yukon காரானது ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 5 முதல் 6 கிமீ வரை மட்டும் செல்லும் என்பது குறிப்பிடத்தக்கது. உழைத்தால் யாரும் உயரத்தை எட்ட முடியும் என்பதற்கு உதாரணமாக ஜப்பார் பாயின் வளர்ச்சி இருக்கிறது.
யூடியூபராக, பிரியாணி கடை ஆரம்பிக்க ஆலோசகராக, பிரியாணி மாஸ்டராக, உணவக அதிபராக, இப்போது கறி வியாபாரம் உட்பட பெரும் தொழிலதிபராக உருவெடுத்துள்ள ஜப்பார் பாய், தன்னிடம் பணம் வந்துவிட்டது என்பதற்காக தனது பண்பை மாற்றிக்கொள்ளவில்லை என்பது கவனிக்கத்தக்கது.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு












Click it and Unblock the Notifications