For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கைதிகளுடன் பாலியல் உறவு கொள்ள வற்புறுத்தல்.. பெண் "ஜெயிலர்" கொடுமை.. இஸ்ரேலில் கொடூரம்!

Google Oneindia Tamil News

ஜெருசலேம்: இஸ்ரேலில் உள்ள கில்போ சிறைச்சாலையில் சிறைக்கைதிகளுடன் பாலியல் உறவு கொள்ள வற்புறுத்தப்பட்டதாகவும், பலமுறை தான் பாலியல் கொடுமையை அனுபவித்ததாகவும் பெண் பாதுகாவலர் ஒருவர் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான இஸ்ரேலின் வடக்கு பகுதியில் கில்போ என்ற சிறைச்சாலை உள்ளது.

இந்த சிறையில் கொடூர குற்றங்கள் புரிந்த குற்றவாளிகள் பலரும் இஸ்ரேலியர்களுக்கு எதிராக தாக்குதல் நடத்தும் பாலஸ்தீனிய நாட்டு குற்றவாளிகள் பலரும் அடைக்கப்பட்டுள்ளனர்.

5 ஆண்டுகளாக பெண்ணை மிரட்டி பலாத்காரம்.. குஜராத் அமைச்சர் மீது பாலியல் புகார்! வெடித்த சர்ச்சை 5 ஆண்டுகளாக பெண்ணை மிரட்டி பலாத்காரம்.. குஜராத் அமைச்சர் மீது பாலியல் புகார்! வெடித்த சர்ச்சை

 பெண் பாதுகாவலர்களுக்கு பாலியல் துன்புறுத்தல்

பெண் பாதுகாவலர்களுக்கு பாலியல் துன்புறுத்தல்

இதனால், உச்ச கட்ட பாதுகாப்பு அம்சங்களை இந்த சிறை கொண்டதாக உள்ளது. 24 மணி நேரமும் கண்காணிப்பு வளையத்திற்குள் இந்த சிறை வைக்கப்பட்டு இருக்கும். இத்தகைய பாதுகாப்பு கெடுபிடிகளையும் மீறி, சிறையில் சில முறைகேடுகள் நடப்பதாக அவ்வப்போது உள்ளூர் ஊடகங்களில் செய்திகள் வெளியாவது வாடிக்கை என்று சொல்லப்படுகிறது. அந்த வகையில், கில்போ சிறைச்சாலையில் பெண் பாதுகாவலர்களுக்கு பாலியல் ரீதியான துன்புறுத்தல்கள் இருந்து வருவதாக கடந்த சில ஆண்டுகளாகவே இஸ்ரேல் நாட்டு ஊடகங்களில் செய்திகள் வெளியாகி அவ்வப்போது பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

 அடுத்தடுத்து செய்திகள்

அடுத்தடுத்து செய்திகள்

ஆனால், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் கில்போ சிறையில் இருந்த பாலஸ்தீனிய கைதிகள் 6 பேர், கழிவு நீர் கால்வாய் வழியை பயன்படுத்தி தப்பி ஓடினர். இந்த விவகாரம் இஸ்ரேலில் பெரிய அளவில் விவாதப்பொருளானது. அங்குள்ள ஊடகங்களில் கில்போ சிறையில் நடைபெறும் அத்துமீறல் குறித்தும் அடுத்தடுத்து செய்திகள் வெளிவர தொடங்கின. அப்போதுதான், கில்போ சிறையில் பெண் பாதுகாவலர்களை சிறைக்கைதிகளுக்கு பாலியல் விருந்தாக்கியதாக சிறை கண்காணிப்பாளர்கள் மீது குற்றச்சாட்டு எழுந்தது. அதுமுதல் இதுதொடர்பாக அவ்வப்போது செய்திகள் வெளியாவதும் பின் அடங்கிப்போவதுமாக இருந்தது.

 பாலியல் ரீதியாக கொடுமைகள்

பாலியல் ரீதியாக கொடுமைகள்

இந்த நிலையில், கடந்த வாரம் கில்போ சிறையில் பெண் பாதுகாவலராக பணியாற்றியதாக கூறிய பெண் ஒருவர், தனக்கு சிறையில் பாலியல் ரீதியாக பல கொடுமைகள் நடைபெற்றதாக கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. பாலஸ்தீனிய சிறைக்கைதி ஒருவருக்கு தான் செக்ஸ் அடிமையாக சிறை கண்காணிப்பாளர்களால் ஒப்படைக்கப்பட்டதாகவும், தனக்கு இதில் துளியும் விருப்பம் இல்லை. ஆனாலும் பலமுறை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாகவும் ஆன்லைன் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

 சகித்துக்கொள்ள முடியாது

சகித்துக்கொள்ள முடியாது

இஸ்ரேலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இவ்விவகாரம் குறித்து தனது அமைச்சரவையிடம் விளக்கிய பிரதமர் யாயர் லபிட், "ஒரு பாதுகாப்பு வீராங்கனை தனது பணிக்காலத்தில் பயங்கரவாதியால் பாலியல் பலாத்காரம் செய்யபப்பட்டு உள்ளார் என்பதை எந்த வகையிலும் சகித்துக்கொள்ள முடியாது. இது குறித்து கண்டிப்பாக விசாரணை நடத்த வேண்டும். பாதிக்கப்பட்ட வீராங்கனை உரிய உதவியை கண்டிப்பாக பெறுவார்" என்றார். இஸ்ரேல் உள்பாதுகாப்பு அமைச்சகம் இவ்விவகாரம் குறித்து வெளியிட்ட அறிக்கையில், ''கில்போ சிறையில் நடைபெற்ற இந்த விவகாரம் இஸ்ரேல் பொதுமக்களை உலுக்கியுள்ளது. பாதிக்கப்பட்ட பெண்ணின் வாக்குமூலத்தை படித்து அதிர்ச்சி அடைந்தேன். இதுபோன்ற சம்பவங்கள் இனி நடக்காமல் இருப்பதை உறுதி செய்வோம்" என்றார்.

English summary
Reports that female guard had been abused by inmates at Gilboa prison have shaken the Israeli public. Israel's premier promised an investigation.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X